26-05-2019, 09:28 AM
விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் முன்னாள் சேர்மன்!
Web Team
Published : 26 May, 2019 08:12 am
வெளிநாடு செல்ல இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் அவர் மனைவியும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்தவர் நரேஷ் கோயல். அவர் மனைவி அனிதா நிர்வாக குழு உறுப்பினராக இருந்தார். நிதி நெருக்கடி காரணமாக அந்நிறுவனம் தடுமாறியது. வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாமலும் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமலும் திணறிய அந்நிறுவனம் அனைத்து விமான சேவைகளையும் கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
வங்கிகளின் நெருக்கடி காரணமாக, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து நரேஷ் கோயல் விலகினார். அவர் மனைவியும் பதவியை ராஜினாமா செய்தார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சம்பள பாக்கி வைத்துள்ளதால் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அமைப்பின் தலைவர் கிரண் பவாஸ்கர், ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவர், இயக்குனர்கள், நிர்வாக குழு உறுப்பினர்களின் பாஸ்போர்ட்டுகளை முடக்க வேண்டும் என போலீசில் கூறியிருந்தார்.
இந்நிலையில், துபாய் செல்வதற்காக, நரேஷ் கோயலும் அவர் மனைவி அனிதாவும் மும்பை விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். அப்போது இருவரையும் குடியுரிமை அதிகாரிகள் வெளிநாடு செல்ல அனுமதி மறுத்தனர். பின்னர், புறப்பட இருந்த விமானத்தில் இருந்து அவர்களை கீழே இறக்கினர். போலீசில் புகார் இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.