Thriller அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா
#3
பெரிய ஆஸ்பத்திரிக்கு தீபாவும், ராக்கியும் வந்த போது ராக்கியின் கணவன் செல்வம் முன்னே நின்றிருந்தான்.

"அண்ணா.. செல்வமுனானா அவரு எப்படி இருக்காரு.. எங்க இருக்காரு.." பெருங்குரலெடுத்து கதறினாள்.
"12 மணி நேரம் தாண்டினா உசிருக்கு ஆபத்தில்லைனு சொல்லிட்டாங்கம்மா.. "
"ஐயோ.. எனக்கு இருக்கிற ஒரே ஆதரவு அவர்தானே.. நான் அவர உடனே பார்க்கனும்.."
"ஆப்ரேசன் தியேட்டரில் இருந்து ஐசியுவில் வைச்சிருக்காங்கம்மா. உள்ளே விடமாட்டாங்க.."
தீபா ஓவென அழுதாள். அவள் தோளில் இருந்த குழந்தை புரண்டது.

ஐசியூ வார்டிலிருந்து இரு நர்சுகள் வெளிவர..

மூவரூம் ஓடினர். குழந்தை இந்த கலவரத்திலும் தூங்கிக் கொண்டிருந்தது.
"அம்மா.. நரசம்மா.. முருகன் எப்படி இருக்காரும்மா..?"
"அதெல்லாம் டாக்டர் தாங்க சொல்லனும். நாங்க எதுவும் சொல்லக்கூடாது. வெயிட் பண்ணுங்க" என காத்திருக்க சொல்லிவிட்டு சென்றனர்.

டாக்டர் வெளியே வந்தார். "இப்ப எப்படியாச்சும் காப்பாத்திடுவோமுனு நம்பிக்கை இருக்கு. ஆனா இது பெரிய கேஷ். கைல இருக்க வெட்டாலே.. கையை துண்டாகிடுச்சு."
"அச்சச்சோ" கேவி அழுதாள் தீபா.

"பத்துமணி நேரத்துக்குள்ள நீங்க கோயம்புத்தூர் கூட்டிக்கிட்டு போனா.. கையை இணைச்சிடலாம். நம்ம ஹாஸ்பெட்டெல ஏத்த வசதி இல்லை"
"நர்ஸ் இவங்களுக்கிட்ட.. எல்லாத்தையும் விளக்கி சொல்லிடுங்க" என டாக்டர் விலக..

"இரண்டு பேருல யாருங்க.. அவரோட மனைவி" என பெரிய நர்ஸ் கேட்டாள்.
குழந்தையை தோளில் சாய்த்தபடி தீபா முன்வந்தாள்.
"இதெல்லாம் பெரிய கேசும்மா.. தெகிரியமா இரு. நெஞ்சு விலா எழும்புல ஒரு குத்து. பின்னாடி முதுகுல ஒரு குத்து. வலது கை துண்டாகிடுச்சு. தனியா எடுத்து பீரிசரில் வைச்சிருக்கோம். "
"ஐயோ.." தீபா அழுதாள்.

"இடது காலுலையும் வெட்டு விழுந்திருக்கு. சரியான சிகிச்சை பண்ணினா அதை சரி பண்ணிடலாம். "
தீபா அழுதுகொண்டே இருந்தாள். அவளை நர்ஸ் பார்த்துவிட்டு எதுவும் செய்ய முடியாது என்பது போல உணர்ந்தவளாக தொடர்ந்தாள்.

"அழுதுக்கிட்ட இருக்கிற நேரமில்லைம்மா. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒரு ஐந்து லட்சம் எடுத்துக்கிட்டு கோயம்புத்தூர் கிளம்புற வழியை பாருங்க. இல்லைனா உன் புருசன் கைகால இழந்து கட்டில்தான் இருப்பான்"
நர்சு நகர்ந்தாள்.

தீபா அழுதுகொண்டே இருக்க.. ஐந்து லட்சமா என ராக்கி வாயை பிளந்தாள். செல்வத்திற்கு பட்டென ஒரு யோசனை வந்தது.
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply


Messages In This Thread
RE: அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா - by sagotharan - 08-08-2022, 07:45 PM



Users browsing this thread: 10 Guest(s)