Thriller அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா
#1
Star 
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா

"ஹலோ.. "
"சார் அவனை பார்த்துட்டோம்
ம்ம்.. தனியா இருக்கானா?'
"கரூர் ஹைவேல தனியாதான் போயிக்கிட்டு இருக்கான் சார்."
"நல்லது.. போனை லவுட் பீக்கரில் போட்டே இருங்க.. அவனோட சத்தத்தை கேட்கனும்."
"சரிசார்.. நெருங்கிட்டோம்.."
தன்னந்தனியாக ஒரு ஓட்டை ஸ்பெலண்டரில் ஒருவன் முன்னால் போக.. பின்னே இரண்டு பல்சரில் நான்கு பேர் அவனை தொடர்ந்திருந்தனர். நெடுவான்சாவடி பாலத்தை தாண்டியதும் ஒரு வண்டி அவனை தாண்டி சென்று குறுக்கே நின்றது.
நிதானமாக சென்று கொண்டிருந்தவன்.. சுதாரித்து.
"எலே.. இப்படி குறுக்கால வந்து வண்டியை நிறுத்தரியே.. அறிவு ஏதாச்சும் இருக்கா" என வைது கொண்டே வண்டியை நிறுத்தி இறங்கினான். அந்த நொடி அவன் வண்டியை நிறுத்தி இறங்காமல் இருந்திருக்கலாம். பின்னால் வந்த வண்டியிலிருந்து அவனருகே இருவர் ஆயுதத்தோடு ஓடி வந்தார்கள்.
ஒரு அடி நீளமுள்ள பட்டாகத்தியை முதன்முதலாக அவன் பார்த்தான்.
"யார் நீங்க?"
ஒரு நொடி தான்.. ஆ என கதறல் அதற்குள் அவனை விலா எழும்பிலும் முதுகிலும் இரு கத்தி பாய்ந்திருந்தது.
"ஆ.."
சர்க்.. சொருகிய கத்தியை பிடுங்கினர் இருவர். அவர்கள் ஓட.. பின்னால் வந்த இருவர் அவனின் கைகளில் வெட்டினர்.
"போதும்.."
அவர்களின் இரு வண்டிகளும் பாலத்திற்கு அடியில் சென்று இரு வேறு திசைகளில் பயணித்தன.
"சார் லைனில் இருக்கிங்களா.."
"ம்ம்.. மகிழ்ச்சி"
"சார் பேலன்ஸ் பேமண்ட்.."
"சொன்னபடி உங்களை தேடி வரும். போலீசுல நீங்க மாட்டிக்கிட்டா எங்க பேரு வரக்கூடாது."
"அதெல்லாம் பக்கா ஸ்கெட்ச் சார். போலீஸ் நெருங்காது"
"பச்.. இல்லைனா உங்களை கொல்ல இன்னொரு கூலிபடை வரும். ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க" அந்த இணைப்பு துண்டித்தது.
"ஜங்சனுக்கு வண்டியை விடு இன்னைக்கு நைட்டுக்குள்ள தமிழ்நாட்டை நாம எல்லோரும் தாண்டியாகனும்" என சொல்லிவிட்டு வண்டியின் பின்னால் உட்காந்திருந்தவன் செல்போனின் சிம்கார்டை உடைத்தான்.
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா - by sagotharan - 08-08-2022, 07:34 PM



Users browsing this thread: 1 Guest(s)