29-07-2022, 12:52 PM
(This post was last modified: 29-07-2022, 12:53 PM by GEETHA PRIYAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
வந்தனா விஷ்ணு எழுதும் அனைத்து கதைகளுமே சிறப்பாக துவங்குகிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கோணத்தில் எழுதி படிப்பவர்களுக்கு சுவாரசியத்தை தருகிறார். இதற்காக அவரை பாராட்டாமல் இருக்க முடியாது. அவர் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இப்படி எழுதுவது இந்த தளத்தை உயிர்ப்போடு வைத்திருக்க உதவுகிறது. ஆனால் அவர் இடத்தில் ஒரு சிறு குறை உண்டு. நான் இதை பலமுறை பதிவிட்டு இருக்கிறேன். இங்கே மீண்டும் பதிவிட விரும்புகிறேன். அவர் கதையை ஆரம்பிக்கிறார் அழகாக கொண்டு செல்கிறார். ஆனால் கதையை கிளைமாக்ஸ் வரை எழுதுவது இல்லை. ஏதோ ஒரு காரணத்தால் பாதியிலேயே விட்டு விட்டு விடுகிறார். இதன் காரணமாக அந்த கதையை தொடர்ந்து படித்து வரும் நண்பர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். அதில் நானும் ஒருவன். அதனால் அவர் இனிமேலாவது ஒவ்வொரு கதையாக கிளைமாக்ஸ் வரை எழுதி முடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.