Fantasy காலம் என் கையில்
கால சூழல் - 27


இடம்: சீதா வீடு
நாள்: மார்ச் 6, 2018, செவ்வாய்க்கிழமை
நேரம்: இரவு 10:00 மணி.

கார்த்திக் தன் செல்ல மலருடன் கொஞ்சி அன்பு உரையாடல் செய்த பிறகு அன்று முழுவதும் அவன் காரைக்குடியை சுற்றி திரிந்தான், அந்த ஊரில் எந்தெந்த இடம் அருகில் எந்தெந்த கட்டிடங்கள் உள்ளது, அவன் தொடங்கப்போகும் தொழிலிற்கு எந்த இடத்தை வாங்கலாம் என்று அங்கிருக்கும் ஒரு நில தரகரின் துணையோடு ஒரு இடத்தை தேர்வு செய்தேன், அதை பற்றி தன் அக்கா பூஜாவுடன் ஆலோசனையும் கேட்டு கொண்டான். அதே சமயம் அவனுடன் தொழிலின் சம பாதி உரிமை கொண்ட அஷ்வினிடம் அனைத்தையும் விவரித்தான், அவளை உடனே காரைக்குடிக்கு வருமாறு அன்பு கட்டளையிட்டான், அவளும் அதற்கு ஒப்புக்கொண்டாள், பின்பு தன் வீட்டில் அனைத்து பெண்மணிகளுக்கு கட்டிய மல்லிகைப்பூ, கந்தரப்பம் (காரைக்குடி இனிப்பு வகை) மற்றும் கயல்விழி மற்றும் மலர்விழிக்கு மட்டும் ஒரு தங்க மோதிரத்தை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினான். வீட்டிற்கு வந்து தன் அத்தை சமைத்து வைத்த உணவை நன்றாக ருசித்து விட்டு அவனின் அறையில் படுத்துக்கொண்டு காரைக்குடிக்கு வந்து இங்க நடந்த அனைத்து சந்தோஷமான நினைவுகளை அசைபோட தொடங்கினான்.

அப்பொழுது கார்த்திக்கின் அறை கதவு திறக்கப்படும் சட்டம் கேட்டு கார்த்திக் திரும்பி கதவின் திசையை பார்த்தான், அங்கு மலர்விழி ஒரு அழகிய காட்டன் புடவை அணிந்து அவனின் அறைக்குள் வந்து அறையின் கதவை உள்புறம் தாளிட்டு அவனை பார்த்து புன்முறுவல் செய்தாள், பின்பு மெல்ல கார்த்திக்கை நோக்கி அவன் அருகில் வந்து அமர்ந்துகொண்டாள்

மலர்விழி: என்ன மாமா, இன்னைக்கி ரொம்ப அலைச்சல் போல, அம்மா சொன்னாங்க நீங்க கொஞ்ச நேரம் முன்னாடி தான் வந்திங்கனு

கார்த்திக்: ஆமா மா, நம்ம புதுசா தொடங்க போற பிஸ்னஸ்காக இடம் எல்லாம் பாக்க போனேன் மா, நல்ல படியா இடமும் அமைஞ்சுருச்சு மா, காரைக்குடி பழைய பஸ் ஸ்டண்ட்ல இருந்து 2 கிலோமீட்டர் தள்ளி இடம் கிடைச்சிருக்கு, தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதின்னு எல்லாமே இருக்கு, நம்ம இடம் ரோடு பக்கத்துலயே வருது மா, நாளைக்கி பிசினஸ் பார்ட்னர் வராங்க அவங்களும் இடம் பார்த்துட்டா அட்வான்ஸ் குடுத்து இடத்தை கிரயம் பண்ணிடவேண்டியது தான் மா

மலர்விழி: நல்ல விஷயம் மாமா, சந்தோசமா இருக்கு டா, நீங்க வந்த வேலை நல்லபடியா தொடங்கியாச்சு, அதே மாதிரி நீங்க ஆசைப்பட்ட மாதிரி இந்த குடும்ப பிரச்சனைக்கும் சீக்கிரமா ஒரு நல்ல தீர்வு வரும்

கார்த்திக்: ஹ்ம்ம் அப்படிதான் நானும் நம்புறேன் மா, சரி நீ சாப்டாச்சா, கயல் எங்க ஆள காணும் சீக்கிரமா தூங்கிட்டாளா

மலர்விழி:  நான் சாப்பிட்டேன் மாமா.  இல்லை மாமா, அவ அண்ணாவை பாக்க ஹோட்டல் வரைக்கும் போயிருக்கா, இன்னைக்கி ராத்திரி அண்ணா, அப்பறம் உங்க அக்கா, கயல் எல்லாரும் அங்கதான் தங்க போறாங்க

கார்த்திக்: அப்படியா மா, ஹ்ம்ம் என்ன புடவை எல்லாம் கட்டி இருக்க, ஆனா உனக்கு புடவை ரொம்ப நல்லா இருக்கு மலரு

மலர்விழி: சும்மா தான் மாமா, கட்டணும்னு தோணுச்சு, தேங்க்ஸ் மாமா (லேசா வெட்கப்பட்ட படி)
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 1 user Likes Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
கால சூழல் - 27 - (1) - by Loveyourself1990 - 20-07-2022, 06:35 PM



Users browsing this thread: 1 Guest(s)