Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
REVIEW
லிசா திரைவிமர்சனம்
திரைப்படம்
2.25
Cineulagam

0SHARES






  • [url=http://mail.zoftbox.com/?pageurl=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Ffilms%2F05%2F101021&newstitle=%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&site=cineulagam&form=shareinfotofriends&directivename=05&recordid=101021]

[color][font][Image: logo-eds.png][/font][/color]

#Lisaa #Anjali #Yogi Babu #. andam
பேய் படங்களுக்கென ஒரு ஆடியன்ஸ் கூட்டம் இயல்பாக இருப்பதுண்டு. ஏற்கனவே பல பேய்கள் தியேட்டரில் வந்து போயுள்ளன. சற்று வித்தியாசமாக மக்களை கவரும் வகையிலான படங்கள் மட்டும் களத்தில் நிற்கிறது. தற்போது வந்துள்ள லிசா பேய் யார் என பார்க்க பேய் வனத்திற்குள் செல்லலாம்.
கதைக்களம்
அஞ்சலிக்கு ஒரு அம்மா. தன் அப்பா அம்மாவை விட்டு பிரிந்து நகரத்தில் வாழும் இவருக்கு அஞ்சலி தான் எல்லாமே. இவரை குடும்பத்துடன் சேர்த்து வைக்க அஞ்சலி ஆசைப்படுகிறார். அவருக்கு ஒரு பாய் ஃபிரண்ட். இவருடன் அஞ்சலி தங்கள் தாத்தா பாட்டியை காண மலைக்காட்டிற்கு செல்கிறார்.
அங்கு ஒரு வயதான ஜோடியிடம் தாத்தா, பாட்டி உறவு கொண்டாடுகிறார். இதற்கிடையில் எதிர்பாராத சில அமானுஷ்யங்களை உணர்கிறார் அவரின் பாய் ஃபிரண்ட். இதை முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அஞ்சலி ஒரு நாள் திடுக்கிடும் விசயங்களை சந்திக்கிறார்.
ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்ட அழுகிய உடல்களை கண்டு பதறுகிறார். அந்த வீட்டில் நடந்தது என்ன, பேய் யார், உண்மையில் அவரின் தாத்தா பாட்டி என்ன ஆனார்கள் என்பதே முழுகதை.
படத்தை பற்றிய அலசல்
லிசா கேரக்டரில் வரும் அஞ்சலி இப்படத்தில் முழுமையான ரோலில் நடித்துள்ளார். படத்தின் அநேக காட்சிகளிலும் வரும் அவரையே இப்படத்தில் ஒரு பெரும் சம்பவம் புரட்டி போட, பேயாக மாறியிருக்கிறார். பேயாக மாறும் வேளையில் அவருக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டதோ என தோன்றலாம்.
படத்தில் பாய் ஃபிரண்டாக வரும் இளம் நடிகர் சாம் ஜோன்ஸ் அஞ்சலியுடன் தன் நடிப்பை ஈடுசெய்கிறார். யோகிபாபு படத்தின் சில காட்சிகள் உள்ளே புகுந்த சிரிப்பை வரவைத்துவிடுகிறார். அவர் அடிக்கும் கவுண்டர்கள் ரியல் லைஃபை பிரதிபலிக்கிறது.

அதே போல தெலுங்கு சினிமாவின் பிரபல காமெடி நடிகர் பிரம்மானந்தம் வரும் காட்சிகள் காமெடிக்கு கியாரண்டி. அவருக்கு குரல் டப்பிங் பேசிய எம்.எஸ்.பாஸ்கர் அப்படியே ஒன்றிவிட்டார். பார்ப்பவர்களின் எனர்ஜி டவுனாகும் வேளையில் இவர்களின் காமெடி நமக்கு உற்சாகத்தை கூட்டுகிறது.
மலை வீட்டில் வாழும் மக்காரந்த் தேஸ்பாண்டே மிக முக்கிய கேரக்டரை பெற்றுள்ளார். இவர் விஞ்ஞானி போல தோன்றினாலும் விபரீதமாக செயல்படும் விதம் கொஞ்சம் சீரியஸ்னஸை கூட்டுகிறது.
அறிமுக இயக்குனர் ராஜு வசந்த்தின் 3D முயற்சிக்கு ஒரு நன்றி. வரவேற்கிறோம். ஆனால் இன்னும் பிளான் செய்திருந்தால் சூப்பரான பொழுதுபோக்காக படம் அமைந்திருக்கும். முதல் பாதி மிக நீளம். எப்போது முடியும் என தோன்ற வைக்கலாம்.
ஆனால் இரண்டாம் பாதியில் எதிர்பாராத வேளையில் அவர் வைக்கும் டிவிஸ்ட் கொஞ்சம் ஆர்வத்தை கூட்டுகிறது. முடியப்போகும் நேரத்தில் மேலும் ஃபிளாஷ் பேக் வருவது கொஞ்சம் பின்வாங்க வைக்கிறது.
ஆனால் அதிலும் ஒரு நல்ல மெசேஜ் சொல்ல முயற்சி செய்கிறார். ஒரு பேய் இருக்கும் போதே வேறொரு பேய்க்கான ஸ்டோரி ஓட எதையோ ஸ்கிப் ஆகி போன ஒரு ஃபீல்.
3 D படத்திற்கான ஒளிப்பதிவு, எடிட்டிங் ஓகே. திடீரென வரும் பேய கை, கால்கள் நம்மை ஒரு நிமிடம் பதறவைக்கிறது.
கிளாப்ஸ்
சொல்ல வேண்டிய அவசியம் கொண்ட சரியான மெசேஜ்.
யோகி பாபு, பிரம்மானந்தத்தின் காமெடி காட்சிகள் வேற லெவல்.
பெரியவர்களை திடுக்கிட வைக்கும் திடீர் பேய் எண்ட்ரி ரியல் ஃபீல்
பலப்ஸ்
படத்தின் நீளம் அதிகமாக இருப்பது போன்ற உணர்வு.
பிளானிங் மிஸ் ஆகிவிட்டதோ என கேள்வி.
மொத்தத்தில் லிசா ஒகே. அவளை பார்த்தால் கொஞ்சம் பயம் தான்
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 25-05-2019, 10:00 AM



Users browsing this thread: 3 Guest(s)