Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
அப்ரண்டிஸ் பணி; மற்ற மாநிலத்தவர்களுக்கு `நோ' - போராட்டத்தால் அதிரடி காட்டிய ரயில்வே!
சென்னை ரயில்வே அப்ரண்டிஸ் பணிக்குத் தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் போராட்டத்துக்குப் பிறகு, ரயில்வே நிர்வாக அதிரடி அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்படுவதாகத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் தொடர்ச்சியாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டி வந்தார்கள். இதைக் கண்டித்து திருச்சி பொன்மலை ரயிலே பணிமனையில் இவர்கள் நடத்திய போராட்டமும் சமூக வலைதளங்களில் இவர்கள் உருவாக்கிய தமிழக வேலை தமிழருக்கே என்ற ஹேஸ்டேக்கும் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில்தான் சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பணிக்கு, தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
[Image: train_2_20431.jpg]



இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருணபாரதி, ``இது எங்கள் போராட்டத்துக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும். பி.ஹெச்.இ.எல், நெய்வேலி அனல்மின் நிலையம், அஞ்சல் துறை, வருமான வரித்துறை, ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகள் அனைத்திலும் தமிழக இளைஞர்கள் திட்டமிட்டே புறக்கணிப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை கிடையாது எனச் சொல்வது அநீதியாகும். திருச்சி பொன்மலை ரயில்வே பணி மனையில் அப்ரண்டிஸ் பணிக்கு 300 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவர்கூட தமிழர் கிடையாது. இதைக் கண்டித்து திருச்சி பொன்மலையில் நாங்கள் நடத்திய போராட்டம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. தமிழக வேலை தமிழருக்கே என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. அப்போராட்டத்தின் முதல் கட்ட வெற்றியாகத் தற்போது சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பணிக்குத் தமிழக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவிகித பணி இடங்கள் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 25-05-2019, 09:25 AM



Users browsing this thread: 95 Guest(s)