எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே
#63
நண்பர் இங்கே எழுத்தாளர்களின் மனக்குமுறலை தெரிவித்து இருந்தார். எனக்கு ஒரு சிறு சந்தேகம். இதை அந்த நண்பரே தெளிவுபடுத்துவார் என்று நினைக்கிறேன். ஒரு எழுத்தாளர் என்றால் அவர் எத்தனை கதைகளை எழுதி முடித்திருக்க வேண்டும்? இந்தத் தளத்தில் அதுபோல எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்? பண்பட்ட அல்லது முதிர்ந்த எழுத்தாளர்கள் யாரும் தங்களது கதைக்கு கமண்ட் வருவதில்லை என்று கவலைப்படுவதே இல்லை. தொடர்ந்து எழுத நினைத்தால் எழுதுகிறார்கள். வரவேற்பு இல்லையென்றால் விட்டு விட்டு வேறு வேலை பார்க்கப் போய் விடுகிறார்கள்.

இந்தத் திரி அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்தக் திரியை ஆரம்பித்தவருக்கு நான் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். நீங்கள் இதுவரை எத்தனை கதைகளை எழுதி முடித்து இருக்கிறீர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். இதில் எத்தனை கதைகள் வரவேற்பை பெற்றிருக்கிறது அல்லது எத்தனை கதைகள் வெற்றி அடையவில்லை என்பதை உங்களால் குறிப்பிட முடியுமா? முதலில் ஒரு கதையை முழுவதுமாக எழுதி முடியுங்கள். கதையை முழுவதுமாக எழுதினால் தான் கதை படிப்பவர்களின் மனநிலையை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அதைவிடுத்து கதை படிப்பவர்களை குறை சொல்லாதீர்கள். நான் இங்கு எழுத்தாளன் கிடையாது. நான் சாதாரண கதை படிப்பவன் தான். எனக்கு பிடித்த கதைகளை படிப்பேன். அந்த கதைகளுக்கு கமெண்ட் செய்வேன். கதை பிடிக்கவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்? கண்டுக்காமல் போய்விட வேண்டியதுதான். அப்படித்தான் நிறைய பேர் இருக்கிறார்கள்.

உங்கள் கதைக்கு போதிய வரவேற்பு இல்லை என்றால் உங்கள் கதையில் ஏதோ குறை இருக்கிறது என்று அர்த்தம். முதலில் அதை கண்டுபிடித்து திருத்தி ஒரு கதையாவது முழுவதும் எழுதிப் பதிவிடுங்கள். ஸ்குரு டிரைவர் , ஓசோன் , நிருதி , மௌனி , சகோதரன் , ....... ... போன்ற நிறைய எழுத்தாளர்கள் கமெண்டுகளைப் பற்றி கவலைப்படாமல் கதை எழுதினார்கள். நீங்களும் அதுபோல் எழுதி பழகுங்கள். சகிப்புத்தன்மையோடு விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு தேர்ந்த எழுத்தாளராக மாற வாழ்த்துக்கள்.
[+] 5 users Like GEETHA PRIYAN's post
Like Reply


Messages In This Thread
RE: எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே - by GEETHA PRIYAN - 01-07-2022, 01:02 PM



Users browsing this thread: 14 Guest(s)