01-07-2022, 12:37 PM
கதை படிப்பவர்கள் யாரும் விமர்சனம் செய்வதில்லை என்று கதாசிரியர்கள் வருந்திக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒருவர் செய்யும் விமர்சனத்தை தவறாக சித்தரிப்பது கண்டனத்திற்குரியது. ஒரு கதையைப் படிப்பவர்களுக்கு அந்தக் கதை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதோ அதை பொறுத்துதான் அவர்கள் கருத்துக்களை பதிவிடுவார்கள். காமென்ட் செய்யும் அனைவருமே கதையை ஆகா ஓகோ என்று புகழ வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர்கள் பார்வையில் அவர்களுக்கு பிடித்த அம்சம் கதையில் இருந்தால் பாராட்டுவார்கள். அவர்கள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்க விட்டால் ஏமாற்றம் அடைவார்கள். அந்த ஏமாற்றத்தை தான் அந்த நபர் பதிவிட்டு இருக்கிறார். இதை கதை எழுதும் V V புரிந்து கொள்வார் என்று நான் நம்புகிறேன். இந்த தளத்தை லாகின் செய்யாமல் அனைவரும் படிக்க முடியும். அதுபோலத்தான் அவரும் இதுவரை படித்திருப்பார். கருத்துச் சொல்ல வேண்டிய அவசியம் வந்த காரணத்தால் இங்கே கருத்தை பதிவிட்டு இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அதை விடுத்து மற்றவர்கள் இதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை.
அவர் பதிவிட்டு இருக்கும் குற்றச்சாட்டை ஆசிரியர் சீர்தூக்கிப் பார்த்து அதை நிவர்த்தி செய்து கதையை தொடர்வார் என்று நான் நம்புகிறேன். நானும் இந்த கதையை ஆரம்பத்தில் இருந்தே படித்துக் கொண்டு வருகிறேன். ஆரம்பத்திலிருந்தே என் கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறேன். இந்த கதையை எழுதுவது கத்தி மீது நடப்பது போல தான். இதில் எந்த இடத்தில் சறிக்கினாலும் கதை அதோகதி தான். ஆசிரியர் கதையின் நாயகியை தூக்கிப்பிடித்து எழுதிக் கொண்டிருக்கிறார். இதுவரை கதையின் நாயகன் என்று யாரையும் அறிமுகம் செய்யவில்லை. இந்த நிலையில் அவளை யாருடன் படுக்க வைத்தாலும் கதை படுத்து விடும். அதேபோல கதையில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறது. சில நேரங்களில் படிப்பவர்களுக்கு குழப்பத்தை கொடுக்கும். கதையாசிரியர் கதையின் விறுவிறுப்புக்காக இப்படி எழுதுகிறார். இது அவரது பாணி. இதை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால் நம் கருத்துக்களை சொல்ல முடியும். கதையின் மையக்கரு எதைநோக்கி செல்கிறது என்று இதுவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆசிரியர் இனிமேல்தான் இதை விளக்க வேண்டும்.
கதையை விமர்சனம் செய்பவர்களை நீங்கள் கதை எழுதிப் பாருங்கள் அப்பொழுது தான் தெரியும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். இதையேதான் திரைப்படம் எடுப்பவர்களும் சொல்கிறார்கள். நாம் ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்ய வேண்டுமானால் நாமும் ஒரு திரைப்படம் எடுத்து விட்டு தான் விமர்சனம் செய்ய வேண்டுமா? கதை எழுதுபவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை அதை படிப்பவர்களுக்கு உண்டு. கதையை ஒருவரும் படிக்கவில்லை என்றால் அதை எழுதி என்ன பிரயோஜனம்? கதையை நாகரீகமாக கெட்ட வார்த்தைகள் இல்லாமல் நாசூக்காக விமர்சனம் செய்தால் அனைவருக்கும் நல்லது.
எனது விமர்சனத்தையும் கதை ஆசிரியர் V V கருத்தில் கொள்வார் என்று நம்புகிறேன்.