மான்சி கதைகள் by sathiyan
எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 7

வெளியே பரணி அமைதியாக சோபாவில் உட்கார்ந்திருக்க ... காஞ்சனா அவர் காலடியில் அமர்ந்திருந்தாள் ... சைந்தவி அருகே விளையாடிக் கொண்டிருந்தவள் சத்யனை பார்த்ததும் ஓடிவந்து அவன் காலை கட்டிக்கொள்ள... சத்யன் குனிந்து குழந்தையை தூக்கி முத்தமிட்டு மறுபடியும் கீழே இறக்கிவிட்டான்

பிறகு மான்சி கையைப் பிடித்துக்கொண்டு பரணியின் கால்களில் விழுந்தான் சத்யன்... இவனின் இந்த தடாலடி செயலால் பதறிப்போன பரணியும் காஞ்சனாவும் வேகமாக எழுந்தனர்

“ சத்யன் என்ன இது மொதல்ல எழுந்திருங்க” என்று பரணி குனிந்து சத்யனை தூக்க... அப்போதுதான் தன் மகளும் தனது காலடியில் கிடப்பதை உணர்ந்து சத்யனை தூக்காமலேயே நிமிர்ந்தார்

“ எழுந்திருங்க சத்யன்.. எழுந்து என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க” என்று பரணி கண்டிப்பான குரலில் கூற

சத்யன் அமைதியாக எழுந்து மான்சியையும் எழுப்பி தன் பிடியில் வைத்துக்கொண்டு பரணியை பார்த்து “ அங்கிள் நாங்க ரெண்டுபேரும் ஒருத்தரையொருத்தர் விரும்பறோம் ... மேரேஜ் பண்ணிக்க ஆசைபடுறோம் ... நான் மான்சியையும் சைந்தவியையும் நல்லபடியா பார்த்துக்குவேன் அங்கிள்... மான்சிய என்கிட்ட குடுத்துடுங்க” என்று சத்யன் நிதானமாக ..தைரியமாக அவர் முகத்தை நேருக்குநேர் பார்த்துக் கேட்டான்


பரணி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க ... காஞ்சனாவின் முகத்தில் டியூப்லைட் போட்டது போல் பளிச்சென்று ஆனது

“ என்னங்க அமைதியா இருக்கீங்க அவர்தான் கேட்கிறார் இல்ல.. சரின்னு சொல்லுங்க” என்று தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையப்போகும் சந்தோஷத்தில் ஒரு தாயாய் காஞ்சனா கேட்க

பரணி சத்யனை நேராக பார்த்து “ நீங்க மான்சிகிட்ட பேசனும் நீங்க கொஞ்சம் வெளிய போங்கன்னு சொன்னப்பவே...இப்படித்தான் இருக்கும்னு நான் யூகிச்சேன் சத்யன்... எனக்கு இதுல எந்த அப்ஜெக்ஷன்னும் இல்ல சந்தோஷம்தான் சத்யன்.... என் மகளுக்கு மறுபடியும் ஒரு வாழ்க்கை அமைவதில் எனக்கு ரொம்ப விருப்பம்தான்... ஆனா நீங்க கிராமத்து ஆள் ... இப்படியொரு விதவையை கல்யாணம் பண்ணிக்க உங்க வீட்ல சம்மதிப்பார்களா... அவங்ககிட்ட பேசிட்டு வாங்க சத்யன்... உடனே மத்த ஏற்பாடுகளை செய்யலாம்” என பரணி கூறியதும்

சத்யன் சிறிது நேரம் தலைகுனிந்து நின்றிருந்தான் பிறகு நிமிர்ந்து அவரை பார்க்காமல் சற்று திரும்பி “ எனக்கு சொந்தம் என் மாமா பரமனும் என் தங்கச்சி சங்கீதாவும்தான் இவங்க ரெண்டு பேரும் இதுக்கு நிச்சயமா சம்மதிப்பாங்க ... ஆனா அவங்ககிட்ட எல்லாம் நான் சம்மதம் கேட்கும் நிலையில் இப்போ இல்லை... இந்த கல்யாணம் இன்னும் ரெண்டு மூணுநாள்ல நடந்தாகனும் அங்கிள்” என்று சத்யன் சொன்னதும்

“ ஏன் அவ்வளவு அவசரம் சத்யன்” என்று பரணி வேகமாக கேட்க

சத்யன் ரொம்பவே தடுமாறி பிறகு சமாளித்து நிமிர்ந்து “ நீங்க கட்டாக் போயிருந்தப்ப நாங்க ரெண்டுபேரும் ஒருநாள் சேர்ந்து வாழ்ந்துட்டம் அங்கிள்... இதை உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தான் ரெண்டுபேரும் தவிச்சுக்கிட்டிருந்தோம் ... ஆனா இப்போ சொல்லியே ஆகவேண்டிய நிலைமை” என்று சத்யன் தயங்கி நிறுத்திவிட்டு மான்சியை பார்க்க

அவள் தன் வாயை பொத்திக்கொண்டு குமுறியபடியே தன் அறைக்கு போக திரும்பினாள்... சத்யன் அவளை நகரவிடாமல் தடுத்து அவள் கைகளை பிடித்துக்கொண்டு “இரு மான்சி நான் பேசிக்கிறேன் நீ பயப்படாதே” என்று அவளை சமாதானப்படுத்தியவன்

பரணியிடம் திரும்பி “ அங்கிள் அன்னிக்கு நடந்த எங்களோட உறவால் மான்சி வயித்துல என் குழந்தை உருவாகியிருக்கு.... இப்போ மான்சி கர்ப்பமா இருக்கா அங்கிள் அதனால உடனடியா எங்க கல்யாணத்தை முடிக்கனும்” என்றவன்

அவரை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு “ தயவுசெய்து நீங்க என்னை மன்னிக்கனும் அங்கிள் ... இதில் மான்சி மேல எந்த தப்பும் இல்ல .. நான்தான் அவளோட பலகீனத்தை பயன்படுத்தி தவறா நடந்துகிட்டேன்” என்று சத்யன் வேண்டுதலாக கெஞ்சிக்கொண்டிருக்க

“ இல்லே இல்லேப்பா அவர் மேல மட்டும் தப்பில்ல... நானும்தான் அதுக்கு சம்மதிச்சேன்.. அவர் எதுவும் சொல்லாதீங்கப்பா “ என்று கதறியபடி மான்சி தன் அப்பாவின் கால்களில் விழுந்தாள் ... 


மான்சி பரணியின் காலில் தடாலென விழவும் சத்யன் பதறிப்போய் அவள் தோள்பற்றி தூக்கி தன் தோளில் சாய்த்து “ என்ன மான்சி இது நான்தான் பேசிகிட்டு இருக்கேன்ல அப்புறம் நீ ஏன் இந்த மாதிரி பண்றே” என்று பரிவுடன் சொல்ல

காஞ்சனா மான்சியின் அருகில் வந்து “ என்னடி இதெல்லாம் கூத்து... என்கிட்ட ஒருவார்த்தை சொல்லியிருக்கலாமே மான்சி” என வருத்தத்துடன் கேட்க ... மான்சி எதுவுமே சொல்லாமல் சத்யன் தோளில் சாய்ந்தவாறு கண்ணீர் விட்டாள்
அப்போது பரணி சோபாவில் இருந்து எழுந்து அமைதியாக வாசலை நோக்கி போனார்...

அவர் வெளியே போவதை பார்த்த சத்யன் தன் தோளில் சாய்ந்திருந்த மான்சியை விலக்கி நிறுத்திவிட்டு வேகமாக அவரை வழிமறித்து நின்றான்

“ என்ன அங்கிள் ஒன்னுமே பேசாம போறீங்க... எங்க ரெண்டு பேரயும் அடிக்ககூட செய்யுங்க ஆனா இப்படி மவுனமா மட்டும் இருக்காதீங்க... நாங்க செய்தது ரொம்ப தப்புன்னு எங்களுக்கு தெரியு் அங்கிள் அதுக்காக நீங்க என்ன பனிஷ்மெண்ட் குடுத்தாலும் நாங்க ஏத்துக்கிறோம் அங்கிள்” என்று கூறிய சத்யன் அவர் பதிலுக்காக காத்திருக்க

பரணி அவனை நிமிர்ந்து பார்க்காமல் சுவற்றை பார்த்தபடி திரும்பி “ என்னால இதையெல்லாம் ஏத்துக்க முடியலை சத்யன்... நான் லால்குடி பக்கம் கிராமத்தில் வாழ்ந்த ஒரு பழைமைவாதி.... என்னால் ஒரு விதவையின் மறுமணத்தை ஏத்துக்க முடியும்... ஆனா இந்த மாதிரின்னா மனசு கஷ்டமா இருக்கு சத்யன்... இயல்பா இனிமே உங்கக்கூட பேசமுடியுமான்னு தெரியலை... ஆனா நான் மாறுவதற்கு எனக்கு கொஞ்சம் டைம் வேனும்... மத்தபடி நீங்க விரும்பியபடி சீக்கிரமா கல்யாணத்தை வச்சுக்கங்க அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..... நீங்க எல்லா ஏற்பாடும் பண்ணுங்க சத்யன்” என்று கூறிவிட்டு பரணி கதவை திறந்து கொண்டு வெளியே போனார்

சத்யன் என்ன செய்வது என்று புரியாமல் திக்பிரமை பிடித்து நிற்க.... மான்சி தரையில் மடிந்து உட்கார்ந்து அழுதுகொண்டு இருந்தாள்

இதையெல்லாம் பார்த்த காஞ்சனா வேகமாக மான்சியின் அருகில் வந்து அவளை தூக்கி நிறுத்தி “ இப்போ அழுது என்ன பண்றது,.. விடு அழாதே எல்லாம் சரியாயிடும்” என்றவள் மான்சியை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு சத்யனிடம் வந்தாள்

“ தம்பி நீங்க ஏன் இப்படி நிக்கிறீங்க... போய் ஆகவேண்டிய வேலை பாருங்க... அவர் அப்படித்தான் சொல்வார் அப்புறமா சரியாயிடுவார்... நீங்க உங்க மாமாவுக்கும் தங்கச்சிக்கும் போன் பண்ணுங்க” என காஞ்சனா சத்யனுக்கு ஆதராவாக கூற

சத்யன் சட்டென தெளிந்த “ சரிங்க ஆன்ட்டி இதோ இப்பவே போன் பண்றேன்” என்ற சத்யன் தனது செல்லை எடுத்து உயிர்பித்தான்

“ இப்படி உட்கார்ந்து பேசுங்க தம்பி ” என்று சோபாவைக் காட்டிய காஞ்சனா மான்சியை விட்டுவிட்டு கிச்சனுக்குள் போய்விட

சத்யன் சோபாவில் அமர்ந்துகொண்டு... தன் பக்கத்தில் கைகாட்டி நின்றுகொண்டிருந்த மான்சியை உட்காருமாறு ஜாடையில் சொல்ல... மான்சிக்கு முன் சைந்தவி வந்து அவன் மடியில் உட்கார்ந்து கொண்டாள்

குழந்தையை அணைத்து அதன் குண்டு கன்னத்தில் முத்தமிட்ட சத்யன் “ சவி அம்மா நிக்கிறாங்க பாரும்மா செல்லம் .. உட்காரச்சொல்லுடா” என்று கொஞ்சிய படி கூற...

சைந்தவி அவன் மடியிலிருந்து தாவி இறங்கி மான்சி கையை பிடித்து இழுக்க வந்து சோபாவில் சத்யன் பக்கத்தில் உட்காரவைத்து விட்டு மறுபடியும் சத்யன் மடியில் தாவி ஏறிகொண்டாள்

சத்யன் ஒருகையால் மான்சியின் தோள்களை சுற்றி தன் தோளில் சாய்த்துக்கொண்டு... மறுகையால் மடியில் இருந்த சைந்தவியை அணைத்துக்கொண்டான்

கிச்சனில் இருந்து கையில் காபி ட்ரேயுடன் வந்த காஞ்சனாவுக்கு இவர்களை பார்த்ததும் கண்கலங்கி விட்டது ... சத்யனிடம் வந்து காபி டம்ளரை எடுத்துக்கொடுத்து விட்டு மான்சியிடம் ஒரு டம்ளரை எடுத்துக்கொடுக்க.. அவள் வேண்டாமென்று மறுத்தாள்

“ ரெண்டு நாளா எதுவுமே சரியா சாப்பிடலை ... காபியாவது குடி மான்சி... எல்லாம்தான் சரியா போச்சே... ம் எடுத்துக்க மான்சி” என்று காஞ்சனா அதட்ட

“ என்கிட்ட குடுங்க ஆன்ட்டி நான் குடுக்கிறேன்” என்ற சத்யன் தன் கையில் இருந்த டம்ளரை டீப்பாயில் வைத்துவிட்டு .. ட்ரேயில் இருந்து இன்னொரு டம்ளரை எடுத்துக்கொள்ள...

“ சைந்தவி குட்டி நீ வந்து பாட்டிம்மாவுக்கு சமையலுக்கு என்ன செயலாம்ன்னு சொல்றியா வாம்மா” என்று காஞ்சனா கூப்பிட்டதும் சத்யனிடம் இருந்து இறங்கிய சைந்தவி அவள் பின்னே ஓடிவிட்டாள்

சத்யன் தன் கையில் இருந்த காபி டம்ளரை மான்சியிடம் நீட்டி “ ஏன் மான்சி ரெண்டுநாளா எதுவும் சாப்பிடலை... ப்ளீஸ் இந்த காபியாவது குடி மான்சி” என்று கெஞ்ச ... மான்சி காபியை வாங்கிகொண்டு சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள்

“ நான் என் ரூமுக்கு போய் குடிக்கிறேன் ” என்றவள் சத்யனை பார்க்காமல் தனது அறைக்கு போய்விட்டாள்


சத்யன் சிறிதுநேரம் மான்சியின் அறைக்கதவையே பார்த்துவிட்டு .. பிறகு தன் கையில் இருந்த காபியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு... கிச்சன் வாசலில் போய் நின்று ஆன்ட்டி என்று அழைக்க

காஞ்சனா உடனே வர சத்யன் டம்ளரை அவளிடம் கொடுத்துவிட்டு “ ஆன்ட்டி நான் போய் மாமாவுக்கு போன் பண்ணி உடனே வரச்சொல்றேன்” என்றவன்

சிறிது தயங்கி “ மான்சியை கொஞ்சம் கவணமா பார்த்துக்கங்க ஆன்ட்டி... எப்பவுமே யாராவது கூட இருங்க... நான் கிளம்பறேன் ” என்று கூறிவிட்டு சத்யன் அங்கிருந்து வெளியேறினான்

தன் வீட்டுக்கு வந்த சத்யன் பரமனுக்கு போன் செய்து மான்சி கர்ப்பம் என்பதை தவிர மீதி விவரங்கள் அனைத்தும் சொல்லி உடனடியாக அவரை கிளம்பி வரச்சொன்னான்

அடுத்ததாக தனது தங்கைக்கு போன் செய்தான் ... சங்கீதாவிடம் எல்லா விபரங்களையும் சொன்னவன் மான்சி இல்லாமல் தனக்கு வாழ்க்கையே இல்லை என்பதை சங்கீதாவுக்கு புரியவைத்தான்

அவன் சொன்னதை எல்லாம் கவணமாக கேட்ட சங்கீதா .. உடணடியாக கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு தன் கணவனுக்கு விடுமுறை கிடைத்ததும்.. இந்தியா கிளம்பிவந்து தனது அண்ணியை பார்ப்பதாக உற்சாகத்துடன் சொல்ல .. தன்னை தன் தங்கச்சி புரிந்துகொண்டதில் சத்யனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது

பிறகு தனது நெருங்கிய நன்பர்கள் சிலருக்கு போன்செய்து தனது வீட்டுக்கு வரச்சொன்னான்... அவர்களில் அருகில் இருந்த சிலர் மட்டும் உடனே வந்துவிட...

சத்யன் அவர்களிடம் தனக்கும் மான்சிக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தை பற்றி சொல்லி அதை எங்கே, என்று., எப்போது, வைத்துக்கொள்ளலாம் என்று யோசனை கேட்டான்

சத்யன் ஒரு இளம் விதவையை திருமணம் செய்வதால் அவன் நன்பர்களின் மனதில் அவன் ரொம்ப உயர்வான இடத்துக்கு போய்விட்டான் ... அனைவரும் அந்த மகிழ்ச்சியை அவனை சந்தோஷத்துடன் அணைத்து வாழ்த்து சொல்லி வெளிப்படுத்தினார்கள்

ஒருவழியாக அவர்களிடம் பேசி திருமணத்தை திருப்பதியில் வைத்துகொள்ளவது என்றும்... திருமணத்திற்கு வருபவர்களுக்கு உணவு அங்கேயே ஏற்பாடு செய்துவிடலாம்... என்று பேசி முடிவு செய்தனர்

சத்யன் தனது நன்பன் இருவரை திருப்திக்கு முதல் நாளே போய் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யச்சொல்லி பணத்தைக் கொடுத்தனுப்பினான்

அன்று முழுவதும் சத்யன் அடிக்கடி எதிர் வீட்டுக்கு ஓடி மான்சியை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே... தனது வேலையை கவணித்தான்

அன்று மாலை சத்யன் வீட்டுக்கு காஞ்சனாவும் பவானியம்மாவும் வந்தனார்... சத்யன் வந்தவர்களை சோபாவில் உட்காரச் சொன்னான்

“ சத்யா நாங்க ரெண்டு பேரும் இப்பத்தான் ஜோசியரை போய் பார்த்துட்டு வர்றோம்... நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்குன்னு ஜோசியர் சொன்னார்... அன்னிக்கே கல்யாணத்தை வச்சுக்கலாமா சத்யன்” என்று பவானி கேட்டதும்

சத்யன் உடனே “ ம் சரிங்க ஆன்ட்டி அன்னிக்கே வச்சுக்கலாம்.... நானும் என் பிரண்ட்ஸ் எல்லாம் கலந்து பேசி கல்யாணத்தை திருப்பதியில் வைப்பதாக முடிவு பண்ணிருக்கோம்... இங்கேருந்து எல்லாரும் ரெண்டு வேன்ல போயிடலாம் ஆன்ட்டி... நாளைக்கு மாமா வந்ததும் பரணி அங்கிள்கிட்ட சொல்லச்சொல்றேன்” என்று சத்யன் சொல்ல ...

“ அப்படின்னா நாளைக்கு உங்க மாமா வந்ததும்... உங்கவீட்டு பழக்கம் முறையெல்லாம் கேட்டு சொல்லுங்க நாங்க அதுமாதிரி எல்லா ஏற்பாடுகளும் செய்யறோம்” என காஞ்சனா கூறியதும்

“ மாமா வரட்டும் எதுவாயிருந்தாலும் பரணி அங்கிள் கிட்ட பேசி முடிவு பண்ணச்சொல்லாம் ஆன்ட்டி” என்று சத்யன் சொல்ல

அவர்கள் இருவரும் ஒத்துக்கொண்டனர் ... பின்னர் சிறிதுநேரம் சம்பிரதாயமாக பேசிவிட்டு இருவரும் கிளம்பிவிட்டனர்


அவர்கள் போனதும் நன்பர்கள் வாங்கி வந்த மதிய உணவை சாப்பிட்ட சத்யன்.... அப்படியே வந்து படுக்கையில் விழுந்தான்... அவன் மனதில் எதையோ பெரிதாக சாதித்த மாதிரி ஒரு எண்ணம்.... வாழ்க்கையில் எத்தனை பேருக்கு காதலித்தவளே மனைவியாக வருகிறாள் இல்லையே .... ஆனால் எனக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது

சத்யனுக்கு மான்சியின் வயிற்றில் வளரும் தன் குழ்ந்தையின் ஞாபகம்… சத்யனுக்கு எல்லையில்லாத உற்சாகம் கரைபுரண்டோட படுக்கையில் எகிறிக் குதித்தான்.

‘ச்சே பாப்பா வர இன்னும் எவ்வளவு நாள் ஆகும்னு கேட்கவே இல்லையே என்று நினைத்து படுக்கையில் கவிழ்ந்து படுத்து தலையனையை கைகளால் குத்திக்கொண்டான்
‘சரி இன்னும் ரெண்டு நாள்தானே அவ இங்கே வந்ததும் கேட்டா போச்சு என்று தன் மனதை சமாதானம் செய்துகொண்டான்

அன்று இரவு நடுச்சாமத்தில் வந்து கதவை தட்டினார் பரமன்... சத்யன் கதவை திறந்துவிட... அவர் மட்டும்தான் வந்தார்

“ என்ன மாமா வீட்ல இருந்து வேற யாரும் வரலையா” என்று சத்யன் கேட்க

“ நீ கல்யாணம் என்னிக்குன்னு எதுவுமே சொல்லலை... அதான் நான் முடிவானதும் போன் பண்றேன் எல்லாரும் கிளம்பி வாங்கன்னு சொன்னேன்” என்றார் பரமன்

சத்யன் அவரிடம் எல்லா விபரங்களையும் சொல்லி ... விடிந்ததும் பரணியை பார்த்து பேசிவிட்டு நாளை ஒரே நாளில் திருமணத்திற்கு தேவையான அனைத்தையும் வாங்க வேண்டும் என்றும் சத்யன் சொன்னான்

மறுநாள் காலையில் சத்யனும் பரமனும் பரணி வீட்டுக்கு போனார்கள் ... எந்தவித முகமாற்றமும் இல்லாமல் அவர்களை வரவேற்ற பரணி... பரமனிடம் எல்லா விவரங்களையும் கேட்டுக்கொண்டார்

பிறகு எல்லாமே சத்யன் நினைத்ததைவிட ஜெட் வேகத்தில் நடந்தது... அந்த ஒரே நாளில் திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கினர்... சத்யனின் நன்பர்கள் சிலர் திருப்பதியில் தங்கி எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வைத்திருந்தனர்

வியாழன்று மாலை அனைவரும் இரண்டு வேன்களில் திருப்பதிக்கு போய் இரவு தங்கினர்... மான்சி வந்த வேனை வழியெல்லாம் நிறுத்தி மான்சி வாந்தியெடுத்தபடியே வர...

பின்னால் வந்த வேனில் வந்த சத்யன் தன்னால்அவளுக்கு எதுவும் செய்யமுடியவில்லையே என்று ரொம்பவே தவித்து போனான்

சத்யன் சத்யனால் அந்த நாள் முழுவதும் மான்சியை பார்க்க முடியவில்லை ... அவள் ஒரு அறையிலும் அவன் ஒரு அறையிலும் தங்க...

சைந்தவி இங்கும் அங்கும் ஓடி ஓடி களைத்து போய் சத்யன் மார்பில் படுத்து உறங்கிவிட ... இதையெல்லாம் பார்த்த பரமனுக்கு தன் தங்கையின் மகனை பார்க்கவே ரொம்ப பெருமையாக இருந்தது

மறுநாள் அதிகாலையில் சத்யன் மான்சி இருவருக்கும் திருப்பதி ஏழுமலையான் சன்னிதானத்தில் அமைதியாக அழகாக திருமணம் நடக்க .. சத்யன் தனது பரம்பரையின் அம்மையப்பன் சின்னம் பொறித்த தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்து மான்சியின் கழுத்தில் கட்டினான்

மான்சியின் சங்கு கழுத்தில் சத்யன் கட்டிய புது மஞ்சள் கயிறு மினுமினுக்க.... இருவரும் மாலைமாற்றிக் கொண்டு பெரியவர்கள் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்

பரணியும் காஞ்சனாவும் கண்கலங்கி அவர்களை ஆசிர்வதிக்க ... பரமனின் குடும்பத்தினர் மான்சியின் அழகை கண்டு வியப்பில் வாயை பிளந்துகொண்டு அவர்களை ஆசிர்வதித்தனர்

திருப்பதியில் இருந்து அனைவரும் கிளம்பி சத்யன் வீடுவந்து சேர மாலை ஆறுமணி ஆகிவிட்டது... பரமனின் குடும்பத்தினர் ஊரில் போட்டதை போட்டபடி வந்துவிட்டதாக கூறி வந்த உடனே இரவு ரயிலுக்கு கிளம்பிவிட...

மிச்சமிருந்த சத்யனின் நன்பர்கள் அவனை எவ்வளவு கிண்டல் செய்யமுடியுமோ அவ்வளவு அமர்க்களம் செய்துவிட்டு கிளம்ப... ஒருவன் வாசல் வரை போய்விட்டு மறுபடியும் சத்யனை பார்த்து

“ டேய் மச்சான் வயித்துல இருக்கிற பாப்பா பத்திரம்டா.... ஆவேசத்தை அவசரப்படாம காட்டுடா” என்று நக்கல் செய்ய

சத்யன் முகத்தில் புதிதாய் வந்த வெட்கத்துடன் “ போடா போடா எல்லாம் எங்களுக்கு தெரியும் ” என்று அவன் கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக அவனை வெளியே அனுப்பினான்
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 24-05-2019, 11:01 AM



Users browsing this thread: 3 Guest(s)