Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு அதிர்ச்சி அளித்த ஸ்மிரிதி இரானி


[Image: 201905240453480061_Amethi-constituency-S...SECVPF.gif]
[Image: fb-icon-art.png] Facebook [Image: twt-icon-art.png] Twitter [Image: mail-icon.png] Mail[Image: t-max-icon.png] [Image: t-min-icon.png] Text Size [Image: print-icon.png] Print
அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்தியதன் மூலம் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி.
பதிவு: மே 24,  2019 04:53 AM
அமேதி, 
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி ஒருபுறம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மறுபுறம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தோல்வியடைந்தது அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. சஞ்சய் காந்தி, ராஜீவ், சோனியா, ராகுல் என நேரு குடும்பத்தினர் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த இந்த தொகுதியில், தற்போது காங்கிரஸ் வெற்றியை பறிகொடுத்திருப்பது கட்சித்தொண்டர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் புருவத்தையும் உயரச் செய்திருக்கிறது.
காந்தி குடும்பத்தினரின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் கடந்த 2004–ம் ஆண்டு முதல் 3 முறை ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். இதில் முதல் இரு முறையும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவருக்கு, 3–வது முறையாக கடந்த 2014–ம் ஆண்டு போட்டியிட்ட போது பா.ஜனதாவின் ஸ்மிரிதி இரானி பலத்த போட்டியாக விளங்கினார். எனினும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அமேதியில் வெற்றிக்கனியை தட்டிப்பறித்தார் ராகுல் காந்தி.
அந்த தேர்தலில் ராகுல் காந்திக்கே கடும் போட்டி கொடுத்த ஸ்ம்ரிதி இரானியை மாநிலங்களவை உறுப்பினராக்கிய பா.ஜனதா, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியாகவும் நியமித்தது. இதில் திறம்பட செயலாற்றிய ஸ்மிரிதி இரானி, அமேதி மீது ஒரு கண் வைத்திருந்தார்.
தான் தோல்வியடைந்த தொகுதி என்ற எண்ணம் எதுவும் இன்றி, அந்த தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து அவர்களுடனான தொடர்பை பேணி வந்தார். இடையில் எதிர்க்கட்சிகளின் போர்க்கொடியால் ஜவுளித்துறை மந்திரியாக இலாகா மாற்றம் செய்யப்பட்ட போதும், தனது அமேதி தொடர்பை அவர் கைவிடவில்லை.
இந்த சூழலில்தான் தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த முறை ஸ்மிரிதி இரானியிடம் பெரும் சவாலை சந்தித்ததாலோ என்னவோ, இந்த முறை அமேதியை மிகுந்த கவனத்துடனே அணுகினார் ராகுல் காந்தி. அமேதியுடன், கேரளாவின் வயநாட்டிலும் அவர் போட்டி கோதாவில் குதித்தார்.
அதேநேரம் அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராக மீண்டும் ஸ்மிரிதி இரானியையே களமிறக்கியது, பா.ஜனதா. இதனால் அமேதி முழுவதும் தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், அமேதியில் அவர் இல்லாத குறையை பிரியங்கா பார்த்துக்கொண்டார்.
இதனால் நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவிய அமேதி தொகுதியின் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் காலையில் வழக்கத்துக்கு மாறாக ஸ்மிரிதி இரானி முன்னிலை வகித்தார். பின்னர் ராகுல் காந்தியும் முன்னணியில் வந்தார். ஆனால் இந்த முன்னிலையை ஸ்மிரிதி இரானி முறியடித்தார்.
இப்படி மாறிமாறி நிலவிய முன்னிலையை ஒருகட்டத்தில் ஸ்மிரிதி இரானியே தொடர்ந்து தக்கவைத்தார். சுமார் 6¾ லட்சம் வாக்குகள் எண்ணப்பட்டபோது ஸ்மிரிதி இரானி 3,39,743 ஓட்டுகளும், ராகுல் காந்தி 2,94,290 வாக்குகளும் பெற்றிருந்தனர். இறுதியில் யாரும் எதிர்பாராத வகையில் ராகுல் காந்தியை, ஸ்மிரிதி இரானி தோற்கடித்தார்.
அமேதி தொகுதியில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில்தான் ராகுல் காந்தி தென்னாட்டை தேடி ஓடியிருப்பதாக ஏற்கனவே பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் குறைகூறியிருந்தன. அவர்கள் கூறியது போலவே ராகுல் காந்தியின் இந்த தோல்வி அமைந்திருப்பதாக காங்கிரசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதேநேரம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கருதப்பட்ட ராகுல் காந்தியை தோற்கடித்ததன் மூலம் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கவனத்தையும் ஸ்மிரிதி இரானி ஈர்த்துள்ளார். அத்துடன் கடந்த தேர்தலில் ராகுல் காந்தியிடம் பெற்ற தோல்விக்கு பழி வாங்கவும் செய்துள்ளார்.
மும்பையை சேர்ந்த ஸ்மிரிதி இரானி மாடலிங் துறையில் நுழைந்து பின்னர் நடிகையானார். சினிமாவில் ஜொலிக்கவில்லை என்றாலும் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். அத்துடன் தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து புகழ் பெற்றார்.
பின்னர் பா.ஜனதாவில் இணைந்து அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறினார். பிரதமர் மோடியின் நன்மதிப்பை பெற்றவர்கள் பட்டியலில் ஸ்மிரிதி இரானிக்கு தனியிடம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 24-05-2019, 10:32 AM



Users browsing this thread: 66 Guest(s)