Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
உடல்நலக் குறைவு: குஷ்பு, துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
[Image: D7MNBeQUIAAtkSZjpg]

உடல்நலக் குறைவு காரணமாக காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகிய இருவரும் தனித்தனியே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்துவருகிறது
இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக செய்தி ஊடக விவாதங்களில் கலந்துகொள்ள முடியாது என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, ''மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் செய்தி சேனல்களில் நடைபெறும் விவாதங்களில் கலந்துகொள்ள மாட்டேன். தேர்தல் முடிவுகளை மிஸ் செய்கிறேன். நாமொன்று நினைத்தால், இயற்கை ஒன்று நினைக்கிறது. மிகுந்த வருத்தத்தில் உள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.
[Image: duraimurugan2855681f]துரைமுருகன்.   -  கோப்புப் படம். | எம்.சத்தியமூர்த்தி
 
இதேபோல திமுக பொருளாளர் துரைமுருகன், காய்ச்சல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 24-05-2019, 10:30 AM



Users browsing this thread: 13 Guest(s)