Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
அதிமுக எதிர்ப்பலையில் அடித்துச் செல்லப்பட்ட கூட்டணிக் கட்சிகள்
[Image: download-6jpg]கோப்புப் படம்

தமிழகத்தில் அதிமுக எதிர்ப்பலையில் கூட்டணிக் கட்சிகளும் மூழ்கின. கடைசி நேர ட்விஸ்ட் காரணமாக அதிமுக அணிக்குத் தாவிய பாமக, தேமுதிக கட்சிகள் தோல்வியைத் தழுவின.
மக்களவைத் தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட திமுக, அதிமுகவினர் கட்சிகளை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பாமக, திமுக அணியில் வருவதாக சொல்லப்பட்ட நிலையில், திடீரென அதிமுக அணிக்கு பாமகவினர் தாவினர். இதை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்'
மறுபுறம் தேமுதிகவை திமுக வலிந்து சென்று அழைக்க, ஒருபுறம் திமுகவிடம் பேசிக்கொண்டே மறுபுறம் அதிமுகவுடனும் தேமுதிகவினர் பேசினர். இதனால் கூட்டணியில் இனி தேமுதிக இல்லை என திமுக அறிவிக்க நாங்கள் கூட்டணிக்காக வரவில்லை என தேமுதிக அறிவித்தது.
பாமக ஆண்டு முழுவதும் அதிமுக ஆட்சியை விமர்சித்து வந்த நிலையில் அதிமுக அணியில் இணைந்தது அதற்கு பலத்த பின்னடைவைக் கொடுத்துள்ளது. வட மாவட்டங்களில் பாமகவுடன் இணைந்ததால் அதிமுக வெல்லும் என கூறப்பட்ட நிலையில் வடமாவட்டப் பிரதிநிதித்துவ இடங்கள் அனைத்தையும் பாமக இழந்தது.
குறிப்பாக எட்டுவழிச்சாலை போராட்டத்தில் முன்னின்று தருமபுரி மக்களின் அன்புப் பிள்ளையாக இருந்த அன்புமணி ராமதாஸே தோல்வி முகத்தை நோக்கிச் செல்கிறார். ஆரம்பத்தில் வெற்றிமுகம், பின்னர் இழுபறி என்கிற நிலையில் தற்போது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில் குமார் அன்புமணியைவிட கிட்டத்தட்ட 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுவிட்டார்.
கடந்த காலங்களில் செய்த அதே தவறை மீண்டும் பாமக செய்துள்ளது என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோன்று அதிமுகவுக்கு பரம வைரியாக இருந்த தேமுதிகவும் தனது நிலையை மாற்றியது அதற்கு மீண்டும் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 24-05-2019, 10:00 AM



Users browsing this thread: 103 Guest(s)