Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
`சரியும் அ.தி.மு.க; மாஸ் என்ட்ரி கொடுத்த மக்கள் நீதி மய்யம்!" - இது கொங்கு அரசியல்
கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்துள்ள நிலையில், களமிறங்கிய முதல் தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யம் சிறப்பான என்ட்ரி கொடுத்துள்ளது.
[Image: IMG-20190324-WA0028_22579_00243.jpg]
கமலுடன் கோவை ம.நீ.ம வேட்பாளர் மகேந்திரன்


18 மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் இப்படி ஓர் அரசியல் கட்சியே இல்லை. ஆனால், நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் குறிப்பிட்ட வாக்குகளைப் பெற்று, சந்தித்த முதல் தேர்தலிலேயே சிறப்பான என்ட்ரி கொடுத்திருக்கிறது, மக்கள் நீதி மய்யம். சினிமா, பிக்பாஸ் என்று பிஸியாக சுற்றிக்கொண்டிருந்த கமல்ஹாசன், திடீரென்று அரசியலில் குதித்தார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் களமிறங்கினார்.
தமிழகத்தில், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாவது மிகவும் கடினம். அப்படியே கட்சி உருவானாலும் தேர்தலில் ஜொலிப்பது கடினம். இதையெல்லாம் கடந்து தேர்தலில் வெற்றிபெற்றாலும், அதைத் தக்கவைத்துக்கொள்வது மேலும் கடினம். இந்நிலையில், இந்தத் தேர்தலில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சிகள், பிரதான கட்சிகளுக்கு மாற்றாகத் தங்களை முன்னிறுத்தினர். இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அ.ம.மு.க-வை சில இடங்களில் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மக்கள் நீதி மய்யமும் நாம் தமிழரும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளன.
[Image: 56384109_2598064133555813_32190436715633..._00285.jpg]
கமலுடன் பொள்ளாச்சி ம.நீ.ம வேட்பாளர் மூகாம்பிகா
குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் பல தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அ.ம.மு.க ஐந்தாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. மக்கள் நீதி மய்யத்தின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர். மகேந்திரன், 1 லட்சத்து 44 ஆயிரத்து 829 வாக்குகளும் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் மூகாம்பிகா 59 ஆயிரத்து 693 வாக்குகளும் (6%) பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர். அதேபோல, நீலகிரி தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ராஜேந்திரன் 41 ஆயிரத்து 169 (4.1%) வாக்குகளும், திருப்பூர் தொகுதி வேட்பாளர் சந்திரகுமார் 64 ஆயிரத்து 657 வாக்குகளும் (5.5%), ஈரோடு வேட்பாளர் சரவணக்குமார் 47 ஆயிரத்து 719 வாக்குகளும் (4.5%), சேலம் வேட்பாளர் பிரபு மணிகண்டன் 58 ஆயிரத்து 442 வாக்குகளையும் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.


[Image: IMG-20190324-WA0030_22054_00382.jpg]
மேலும், தென்சென்னையில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ரங்கராஜன் 1 லட்சத்து 35 ஆயிரத்து 465 வாக்குகளும் (12%), வட சென்னை வேட்பாளர் மெளர்யா 35 ஆயிரத்து 331 வாக்குகளும், மத்திய சென்னை வேட்பாளர் கமீலா நாசர் 92 ஆயிரத்து 249 வாக்குகளும் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர். இதுதவிர, மதுரை நாடாளுமன்றத் தொகுதி உள்பட பல நகர்ப்புறப் பகுதிகளில் மக்கள் நீதி மய்யம், முதல் தேர்தலிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்று சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க, சூலூர் சட்டமன்றத்  தொகுதி இடைத்தேர்தலில் மட்டும் வெற்றிபெற, மற்ற இடங்களில் படுதோல்வி அடைந்துள்ளது. அதேநேரத்தில், சந்தித்த முதல் தேர்தலிலேயே, கொங்கு மண்டலத்தில் லட்சங்களில் வாக்குகள் பெற்றிருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் எழுச்சி, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 24-05-2019, 09:51 AM



Users browsing this thread: 103 Guest(s)