எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே
#26
(23-06-2022, 11:53 AM)Ananthakumar Wrote: விஷ்ணு நீங்கள் சொல்வது சரி தான் நண்பா.

ஆனால் ஒரு சில எழுத்தாளர்கள் பக்கமும் தவறு உள்ளது.

நம்முடைய நல்ல கமெண்ட் வரும் எழுத்தாளர்கள் நிறைய நண்பர்கள் கெஞ்சி கேட்டாலும் அப்படியே கிணற்றில் போட்ட இல்லை போல கதையை முடிக்காமல் விட்டு விட்டு போய் விடுகின்றனர்.

என்னுடைய கதை பயணம் அப்படி விட்டு போன கதையை முடிக்க முயற்சி செய்து ஆரம்பித்தது.

அதற்கு பிறகு ஒரு நண்பர் எனக்காக இடையே விட்ட ஒரு கதையை முடித்து கொடுங்கள் என்று கேட்டார்.ஆனால் அதை ஆரம்பித்த நேரத்தில் ஒரிஜினல் ஆத்தர் தானே எழுதுவதாக சொன்னார்.

நானும் சும்மா இருக்காமல் கோபத்தில் இன்னொரு கான்செப்ட் ரெடி செய்து கதை எழுத ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் ஆதரவு தந்த அந்த கதை எழுத சொன்ன நண்பர் மீண்டும் வேறு ஒரு கதையை எழுத சொன்னார்.நான் கொஞ்சம் நாட்கள் கழித்து உங்கள் விருப்பம் போல் எழுதி தருகிறேன் என்று சொல்லி விட்டேன்.

அதற்கு வேறு ஒரு சந்தர்ப்பம் வந்த போது என்னுடைய கதையை எந்த நண்பர் ஆதரவு தந்து எழுத சொன்னாரோ அவர் மொக்கை கதை என்று சொல்லி விட்டு போய் விட்டார்.

ஆனால் வேறு நண்பர்கள் ஆதரவுடன் எழுதி முடிக்கும் நிலைக்கு அதே கதையை கொண்டு வந்து இருக்கிறேன் நண்பா.

சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படி தான் இருக்கிறார்கள்.

என்ன செய்வது எழுதிய கதையை இடையில் விட்டால் என்னைப் போன்ற இன்னொரு ஆனந்தகுமார் உருவாக்கும் நிலை வேண்டாம் என்று வரும் வாய்ப்புகளை தடை செய்து முடிக்க வேண்டிய கதையை முடித்து விட்டு நம்முடைய தளத்தில் ஒரு பார்வையாளராக மட்டுமே இருக்க ஆசை படுகிறேன் நண்பா. Namaskar

என்ன சொல்லன்னு தெரியவில்லை காலங்கள் மாறும் போது காட்சிகளும் மாறும் நம்பிக்கையாக இருங்கள் எங்கள் அனைவரின் ஆதரவும் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு நண்பா 
Tiger                                         ராஜாசிங்@107
[+] 1 user Likes Rajasingh107's post
Like Reply


Messages In This Thread
RE: எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே - by Rajasingh107 - 23-06-2022, 02:03 PM



Users browsing this thread: 7 Guest(s)