08-06-2022, 11:50 AM
அத்தியாயம் 5 (தொடர்ச்சி):
கா. அத் 5 (தொடர்ச்சி):
இரயில் இரவு 8 மணிக்கெல்லாம் வந்துவிட்டது. கோவையிலிருந்து தான் கிளம்பும் என்பதால் நேரத்திலேயே வந்துவிட்டதாக அங்கு இருப்பவர்கள் பேசிக் கொண்டார்கள். முதல் முறையாக ஏ.சி கம்பார்ட்மென்டில் பயணம் செய்வதால் இருவருக்குமே ஒரு எதிர்பார்ப்பு, சந்தோஷம். வேக வேகமாக ஓடிச் சென்று கம்பார்ட்மென்டை பார்த்து ஏறினோம்.
இரவில் பயணங்களில் படத்தில் பார்த்தது போலவே இருவர் மட்டுமே தனியாக இருக்கும் தனி அறை. உடல் தாங்கும் படியான குளுமையுடன் தான் இருந்தது. ஏறி கொண்டு சென்ற துணி பேக்களை கீழே அடுக்கிவிட்டு எதிர் எதிராக அமர்ந்து கொண்டோம். சிறிது நேரம் பேசிவிட்டு உணவினை பிரிக்கும் போது தான் நியாபகத்திற்கு வந்தது வாட்டர் பாட்டில் இல்லையென்று. உன் அப்பா தான் வேகமாக சென்று பாட்டில் வாங்கி வந்தார். வரும்போதே டி.டி.ஆர் ஐ பார்த்து டிக்கெட்டையும் செக் பண்ணிக் கொண்டு வந்துவிட்டார்.
இருவரும் வாங்கி கொண்டு சென்ற உணவினை சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இரவு 10 மணிக்கு இரயில் சத்தத்துடன் புறப்பட தயாரானது. ஏ.சி கம்பார்ட்மெண்ட் என்பதால் சத்தம் ஒன்றும் அதிகமாக உள்ளே வரவில்லை. புறப்பட்டு சிறிது நேரத்தில் தான் குளுமை சிறிது சிறிதாக அதிகரிக்க ஆரம்பித்தது. இரயில் கிளம்பினால் தான் ஏ.சி ஆன் பண்ணுவார்கள் என்பது கூட அப்பொழுது தான் தெரிந்தது.
எந்த எதிர்பார்ப்பும், முன்னெச்சரிக்கையும் இல்லாமல் புது புது அனுபவத்துடன் பயனிப்பது என்பதே தனி சுகம் தானே. அதனை இருவரும் அனுபவித்துக் கொண்டிருந்தோம். புறப்பட்டு சரியாக 20 நிமிடத்திற்கெல்லாம் குளிரெடுக்க ஆரம்பித்தது. அப்பொழுது தான் போர்வையை தேடினோம். அங்கு இல்லை. உன் அப்பா என்னை இந்த அறையிலேயே இருக்க சொல்லிவிட்டு, போய் கேட்டு வருகிறேன் என்று சென்றவர், 10 நிமிடம் கழித்து வந்தார். வண்டி புறப்படும் சமயத்தில் தான் கம்பளி தருவார்களாம். 5 ருபாய் கொடுத்து வாங்கி இருக்க வேண்டுமாம். இப்பொழுது அங்கு யாரும் இல்லை என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளே வந்தார்.
அவர் வருவதற்குள்ளாகவே, என் உடலெல்லாம் நடுக்கம் எடுக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு தானா இப்படி ஆசைப்பட்டோம் என்பது போல வெருத்தே விட்டது. தூக்கமும் கலைந்து, நடுக்கமும் ஆரம்பித்து என்ன செய்வதென்று தெரியாமல் கண் பிதுங்கி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். இரவு நேரம் என்பதால் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். யாரிடமும் உதவியும் கேட்க முடியாத சூழ்நிலை. ஒரு சந்தோஷமான அனுபவத்தை எதிர்பார்த்து காத்துகிடந்த எங்களுக்கு வழிகாட்டுதல் இல்லாததால் சந்தோஷமே பாலாய் போனது போல உனர்ந்தோம்.