08-06-2022, 09:52 AM
மாலதி கர்ப்பமாக இருக்கிறாள், அதனை அவளே ஒத்துக்கிட்டாள், அதற்கு மாணிக்கம் தான் காரணம் என்று எங்கள் ஊரில் பேச ஆரம்பித்தார்கள். நானும் உங்க அப்பாவும் நன்றாக பேசி பழகுவதாலும், அவருடைய அக்காவிடம் நான் பேச உன் அப்பா வீட்டிற்கு அடிகடி போய்ட்டு வருவதாலும், எங்க வீட்டில் ஒரு பிரளையமே வெடித்தது. நான் என்ன கூறியும் வீட்டில் நம்புவதாக இல்லை. அது கிராமம் என்பதாலும் அனைவரும் ஏதாவது ஒரு முறையில் சொந்தம் என்பதாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக பேச ஆரம்பித்தார்கள். எனக்கு இதனை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. பேசாமல் கிணத்தில் விழுந்து செத்து விடலாம் என்று போய் குதிக்க, அந்த வழியாக வந்த உன் அப்பா, என்னை காப்பத்தினார்.
நடந்த விசையங்கள் அனைத்தையும் உன் அப்பாவிடம் சொல்ல அப்பொழுது தான் அவருக்கே தெரிந்தது, நாம் தேடிட்டு இருந்தது அந்த இராட்சசி மாலதி என்று. சரி நான் வந்து உன் வீட்டில் பேசறேன் வா என்று என்னை நனைந்த துணியுடன் கூப்பிட்டு கொண்டு என் வீட்டிற்கு சென்றார். போகும் போதே பக்கத்தில் இருந்தவர்கள் ஒரு மாதிரி பேச, எங்கள் வீட்டில் இன்னும் கோபம் அதிகமாகி என்னையும், உன் அப்பாவையும் வீட்டிற்குள்ளையே அனுமதிக்காமல் வெளியில் வைத்தே அடித்து விட்டார்கள்.
எனக்காக உன் அப்பா தேவையில்லாமல் அடி வாங்குவதை பொருத்துக் கொள்ள முடியாமல், எங்க வீட்டை எதிர்த்து பேச, என் துணியெல்லாதையும் எடுத்து கொண்டு வந்து வெளியே வீசிவிட்டு செத்தாலும் எங்க மூஞ்சியில் முழிக்காதேனு சொல்லி துரத்தி விட்டு விட்டார்கள். நான் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க, உன் அப்பா தான் என்னை அவர் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு சென்றார்.
இந்த விசையம் அதற்குள்ளாக உங்க தாத்தா பாட்டிக்கு தெரிய, அங்கும் பெரிய கலவரமே நடந்தது. ஆனால், உன் அத்தை தான் எங்களுக்காக கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் பேசிக் கொண்டிருந்தாள். இருந்தாலும் கடைசியில் வீட்டை விட்டு அனுப்பி விட்டார்கள். என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருக்கும் போது தான், உன் அப்பாவின் நன்பர் குமார் தான் எங்களுக்கு உதவி செய்து கொஞ்ச நாளைக்கு சென்னையில் உள்ள என் அத்தை வீட்டில் சென்று தங்கி கொள்ளுங்கள். இங்கு அனைவரும் புரிந்து கொண்டதும் திரும்ப கூப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.
சரி என்று நாங்கள் பஸ்ஸில் ஏறி கோவை வந்து சேர்ந்தோம். அப்பொழுது மாலை 5.30 இருக்கும். அங்கிருந்து இரவு தான் ரயில். சரி அதற்கு டிக்கெட் புக் பண்ணலாம் என்று வரிசையில் நிற்கும் போது எனக்கு ஒரு ஆசை. இதுவரை ஏ.சி கோச்சில் பயணம் செய்ததில்லை என்பதால் அதற்கு புக் பண்ண சொன்னேன். அவரும் எனக்கும் ஆசையாக தான் இருக்கிறது என்று சொல்லி புக் பண்ணினார். இரவு 10 மணிக்கு இரயில் கிழம்பி 7.30 மணிக்கு இரயில் சென்னையை சென்று சேரும் என்றார்கள். சரி அதற்குள் இரவிற்கு வேண்டிய சாப்பாடெல்லாம் வாங்கிக் கொண்டு, ஒரு புது அனுபவத்திற்காக இரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தோம்.