07-06-2022, 07:14 PM
அத்தியாயம் 5:
கா. அத் 5:
மாலதி தன் கதையினை சொல்ல தொடங்குகிறாள்.
மாலதி : உங்க அப்பாவும் நானும் எப்படி கல்யாணம் கட்டிகிட்டோம் தெரியுமா?
சந்தியா : அம்மா, நீயும், அப்பாவும் காதல் திருமணம் தானே.. யாரு முதல்ல காதல சொன்னது. எதுக்கு ஊர விட்டு ஓடி கல்யாணம் பண்ணிகிட்டீங்க...
மாலதி : ம்.. சொல்லரேன்..... நம்ம கிராமத்தில் ஒன்றிய ஊராட்சிப் நடுநிலைப் பள்ளி தான் இருந்தது.
சந்தியா : இப்போ 12 வகுப்பு வரை இருக்குதுல மா?
மாலதி : அது இப்போ டி.. நான் சொல்றது எங்க காலத்துல... இப்படி இடையில இடையில கேள்வி கேட்டுகிட்டே இருந்தா அப்புறம் இப்போதைக்கு சொல்லவே முடியாது.
சந்தியா : சரி மா.. நீங்க சொலுங்க நான் பேசல.....
27 வருடங்களுக்கு முன்பு,
பூஞ்சோலை என்ற அழகிய கிராமத்தில் கதை தொடங்குகிறது.
உயர் நிலை கல்வி படிக்க வேண்டும் என்றால், பஸ் பிடித்து பொள்ளாச்சிக்கு தான் வரனும். நம்ப ஊருல இருந்து அப்போ, காலையில் 8.15 மணிக்கு ஒரு பஸ்ஸிம் அது விட்டா 8.40 மணிக்கு ஒரு பஸ்ஸிம் தான் வரும். நானும் உங்க அப்பாவும் 8.15 மணி பஸ்ஸில் கிழப்பிடுவோம். அப்போ நான் 9 வது படித்துகிட்டு இருந்தேன். உங்க அப்பா 10 வது படித்துகிட்டு இருந்தாரு.
8.40 மணி பஸ்ஸில் போனால் ஸ்கூலிற்கு லேட்டாகிடும். நம்ப ஊர் பக்கத்து கிராமத்தில் இருந்து மாலதி என்ற பெண் 10 வது படிக்க வந்து கொண்டிருந்தாள். ஆனால், அவள் உன் அப்பா வகுப்பு இல்லை. அவள் எப்போதுமே லேட்டாக தான் பள்ளிக்கு வருவா. அவளுக்கென்று பள்ளியில் ஒரு பெரிய கேங்கே இருந்தது. அவள் அப்பாவை காதலித்தாள். ஆனால், அதனை அப்பாகிட்ட சொல்ல தயக்கம். அதனால, அவ கேங் மூலமா, அந்த பள்ளிக்கே பரப்ப ஆரம்பித்தாள். இதனால அப்பாவிற்கு ஒரே கோபம்.
எவனே தெரியாம என் பேர பள்ளி முழுவதும் பரப்பீட்டு இருக்கரா.. அவளை பிடித்து மிதிக்கனும் நு ஸ்கூல் முழுவதும் தேடிட்டு இருந்தவர், சரியா என்கிட்ட வந்து, உன் பேரென்ன என்று கேட்டார். நான் மாலதி என்று சொன்னதும், பேசாமல் போய்விட்டார். அவரிடமிருந்த கோபம், அந்த நொடிப்பொழுதே மறைந்து காணாமல் போய்விட்டது. அடுத்த நாள் முதல், பஸ்ஸில் என் அருகில் வந்து அமர்ந்து கொள்வார். பாடத்தை பற்றி பேசுவார். குடும்ப விசையங்களை பேசுவார். நல்லவர் என்ற எண்ணம் எனக்கு தலை தூக்கி அவர் மீது பாசம் அதிகமானது. ஆனால், அது கண்டிப்பாக காதல் என்று சொல்லிவிட முடியாது. எங்களின் நட்பு வளர்ந்தது. நானும், உன் அப்பாவும் நட்பாக பழகிவருகிறோம் என்று ஊர் முழுவதும் பரவ தொடங்கியது.
அப்போது உன் அத்தை, அது தான் உன் அப்பாவோட அக்கா சுந்தரி என்னுடன் பழக்கமாக ஆரம்பித்தார். என்னை விட பெரிய பெண் என்பதால் ஒரு மரியாதை இருந்தது. இருந்தாலும், அவளை வா டி, போ டி என்று தான் கூப்பிட சொன்னாள். நானும் அப்படியே பழகி அன்னியோன்யம் ஆனோம். பள்ளியில் நடந்த அனைத்து விசையங்களையும் அவளிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். இப்படி எங்கள் உறவு வளர்ந்தது. இது அரசல் புரசலாக பள்ளியில் தெரிய வர 10 ம் வகுப்பு மாலதிக்கு கோபம் அதிகமானது. அதனை பொருத்துக் கொள்ள முடியாமல், அவள் கர்ப்பமாக இருப்பதாகவும், அதற்கு மாணிக்கம் தான் காரணம் என்றும் பரப்பிவிட்டாள்.