Romance நீயே என் இதயமடி
#17
கார்த்திக்கின் வீட்டில் இருந்து கிளம்பிய நண்பர்கள் இருவரும் ஒன்னரை கிலோமீட்டெர் தூரம் தள்ளி உள்ள தாங்கள் படிக்கும் வெற்றி டியூஷன் செண்டர் நோக்கி தங்கள் சைக்கிளில் பயணமானர்கள்.........

இவர்கள் படிக்கும் அந்த வெற்றி டியூஷன்தான் அந்த எரியாவிலேயே மிகவும் ப்ரெபலமானது மற்றும் தரமானதும் கூட 
இரண்டு தளங்களை கொண்ட இந்த டியூஷன்னில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாடங்கள் சொல்லித்தரப்படுகிறது

பள்ளியில் பாடங்கள் நடத்துவது போல இங்கும் தனி தனியே வகுப்புகள் வாரியாக பாடம் எடுக்கப்படுகிறது

இங்கு பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமின்றி நமது சமுதாயத்தில் நல்ல மதிப்பெண்கள் என சொல்லப்படும் அந்த மதிப்பெண்களையும் எடுப்பதால் அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள அதிகப்படியான மாணவர்கள் இங்குதான் டியூஷன் வருகிறார்கள் 

140  மாணவர்களுக்கு மேல் படிக்கும் இரண்டு தளங்களை கொண்ட அந்த டியூஷனின் கீழ்தளத்தில் 9ம் மற்றும் 10ம் வகுப்பினருக்கும் மேல் தளத்தில் 11ம் மற்றும் 12ம் வகுப்பினருக்கும் பாடம் எடுத்து வந்த நிலையில் தற்போது சில வசதிகளுக்காக 10 மற்றும் 12 ம் வகுப்பினருக்கு மேல் தளத்தில் மற்றவர்களுக்கு கீழ் தளத்திலும் வகுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது

டியூஷன் தொடங்க இன்னும் சில நிமிடங்கள் இருப்பதால் மாணவர்கள் வந்தவாறும் ஒரு சிலர் ஆங்காங்கே நின்று பேசியவாறும் இருந்தனர்......

அவ்வாறு டியூஷனுக்கு வந்த மூன்று தோழிகள் 
மேல் தளத்தில் தங்கள்   வகுப்புக்கு வெெளிய  தடுப்பு  சுவற்றின் மேல் தங்கள் பைகளை கழட்டி வைத்தபடி  சத்தமாக பேசி சிரித்தபடி இருந்தனர்......

அதில் ஒருத்தி சட்டென தனது சிரிப்பை நிறுத்திவிட்டு வியப்பும் சந்தேகமும் கலந்த பார்வையுடன் தடுப்பு சுவரை நெருங்கி கீழே வருபவனையே பார்க்கையில் அவளது கை பட்டு சுவற்றின் மேல் வைத்திருந்த தனது பேக் (bag) கீழே 

அப்போதுதான் தங்கள் சைக்கிளை சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு முதல் மாடியில் உள்ள தங்கள் வகுப்பிற்கு செல்ல படி அருகே வந்து கொண்டிருந்த கார்த்திக் பாலவிற்கு ஒரு அடி முன்னாள் விழுந்தது......

தங்கள் முன்னாள் விழுந்த பேக்கை கண்டு திகைத்த நண்பர்கள் இருவரும் தலையை நிமிர்த்தி மேலே மாடியை பார்க்க அங்கே மூன்று பெண்கள் நிற்க அதில் ஓரத்தில் நின்றவள் பையை தள்ளிவிட்ட பதட்டத்தில் பல்லை கடித்தபடி கையை உதரியபடி நின்றாள்....
அவளை கவனித்த கார்த்திக்கின் முகத்தில் புன்னகை மலர அவளையே வெறிக்க இதை உணர்ந்த அவளுக்கு பதட்டம் தணிந்து வேறொரு உணர்வு மேலெழும்ப அவனை பார்க்காது  தனது தோழியின் பின்னால் மறைந்து கொண்டால்.....


அப்போது பாலா திட்டுவதர்காக கையை உயர்த்தி ஏதோ சொல்ல போகையில் அவன் தோள் மேல் கை வைத்து லேசான சிரிப்புடன்  வேணாம் என்பது போல் கார்த்திக்  தலையாட்ட அப்போது மேல் இருந்த பெண்களில் இருவர் 

சாரி தெரியாம என இவர்களை பார்த்து மன்னிப்பாய் சொல்ல.....
பையை (பேக்) தள்ளிவிட்டவள் இவர்களுக்கு பின்னால் மறைத்தபடி நின்றாள்....

அந்த பெண்களுக்கு சரி என்பது போல் தலையசைத்துவிட்டு நண்பர்கள் இருவரும் நகர்ந்தனர்.....

தோழிகளில்  ஒருத்தி
ஏய் பிரியா.... 
என்னடி எதுக்கு திடீர்னு அமைதியான  அப்பறம் கீழ எட்டிபாத்த பேக்க வேற தள்ளிவிட்டுட.... 
என அடுக்கடுக்காய் பேசியபடி போக...
அவளோ சிந்தையை வேறெங்கோ வைத்தபடி ஒன்றும் பேசாமல் நின்றாள்

ஏய் என்னடி நான் கேட்டுட்டு இருக்கேன் பதில் பேசாம நிக்கிற என அவளது தோளை தொட்டு உளுக்கினால் அவள் தோழி ஜனனி....

அதில் தெளிந்தவள் 
ம்ம் ஒண்ணுமில்லடி என சொல்ல....

இனொருவள் அம்மாடி பிரியா நீ தெளிவாதான இருக்க இல்ல ஏதும் ஆயிருச்ச்சா என கேட்க...

ஏய் நான் நல்லாத்தான் இருக்கேன் சரி விலகுங்க நான் போயி என் பேக்க எடுத்துட்டு வந்துறேன் என அவர்களிடம் சொல்லிவிட்டு

இவன் அவன்தானா இல்ல வேறவனா பின்ன எதுக்கு நம்மள அப்டி பாத்தான் என யோசித்தவாறே படிகளில் இறங்கினாள் பிரியா....

பாதி பாடிய ஏறிய கார்த்திக் ஏதோ நினைத்தவன் என்னடா மச்சி என்ற பாலாவுக்கு பதில் சொல்லாமல்  கீழிறங்கி இவன் முன் விழுந்த அந்த பேக்கை எடுத்து கொண்டு மேல் ஏறினான்.....

இவன் விட்டு போன அதே இடத்தில் நின்று கொண்டிருந்த பாலா இவன் பேக்குடன் வந்ததை பார்த்துவிட்டு 
என்னடா என கேள்வியாய் பார்த்தான்.....

அதற்கு அவன் அத்துவந்து மச்சி என ஆரம்பிக்கையிலேயே  கீழ் இறங்கி வரும் ப்ரியாவை பார்த்தவன் அவள் அருகில் செல்ல இன்னும் இரண்டு படிகளில் வேகமாய் தவியேறி ....

பேக்கு... என சொல்லியவாறு அவள் முன் நீட்டி நின்றான் கார்த்திக்

யோசனையுடன் படிகளில் இறங்கியதால் அவன் இவளை பார்த்தது போல் இவள் அவனை கவனிக்கவில்லை....

தன் முன் "பேக்" என சொல்லி அவன் நீட்டிய பின்பே தலையை நிமிர்த்தி பார்த்தவள் அவனை கண்டவுடன் சில நொடிகள் நிற்க..... 
பின்பு சுதாரித்து அவன் நீட்டிய "பேக்கை"  வாங்கியவள் இவன் அவனேதான் என தன்  மனதுடன் பேசியவாரு பேக்கை எடுத்து கொடுத்ததற்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் விறு விருவென படிகளில் ஏறி தன் வகுப்பிற்க்குள் ஓடினாள்.....

நேற்று போல் இன்றும் படிகளில் அழகாய் விறுவிறுவென ஏறி போனவளை ரசித்தவாறு நின்ற கர்திக்கிடம்.....



டேய் வாடா க்ளாஸ்க்கு போவோம் என தன் நண்பனிடம் சொல்லிவிட்டு  ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம போது அந்த புள்ள அத  நிண்டு பாத்துக்கிருக்கான்
தேவையில்லாம என முனாகியாவாறு படிகளில் ஏறினான் பாலா........

நேற்று கோவிலில் கண்டவளை சில நொடிகளில் தன் இதயம் ஆட்கொண்டவளை இனிமேல் கண்ணில் காண முடியுமா என்றிருந்தவனுக்கு மறுநாளே காட்சி தந்து விட்டால் பெண்னவள்......
அவளை கண்ட இவனுக்கோ உள்ளுக்குள் இனம் புரியா இன்பம் அதை அனுபவித்தப்படியே தன் நண்பனுடன் இணைந்து படிகளில் ஏறினான் கார்த்திக்......

காண முடியுமா என்று எண்ணியதை எளிதில் கண்டாகிவிட்டது......

இனி

கையில்சேருமா..........
Like Reply


Messages In This Thread
RE: நீயே என் இதயமடி - by Arunkumar - 23-05-2019, 10:09 AM



Users browsing this thread: 1 Guest(s)