Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
லோக்கல்’...’விஸ்வாசம்’ சிவா, சூர்யா படம் கைமாறுகிறதா?...
[Image: user.png]
By Muthurama Lingam

First Published 22, May 2019, 11:53 AM IST

[Image: nayanthara_710x400xt.jpg]
[Image: facebook_icon.svg][Image: twitter_icon.svg][Image: redit_icon.svg]
HIGHLIGHTS

’மிஸ்டர் லோக்கல்’ படத்தின் படுதோல்வியால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாகவும் எனவே அவர் அடுத்து தொடங்கவிருக்கும் ‘விஸ்வாசம்’ சிவா, சூர்யா காம்பினேஷன் படம் கைமாற வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் நடமாடுகின்றன.



’மிஸ்டர் லோக்கல்’ படத்தின் படுதோல்வியால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாகவும் எனவே அவர் அடுத்து தொடங்கவிருக்கும் ‘விஸ்வாசம்’ சிவா, சூர்யா காம்பினேஷன் படம் கைமாற வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் நடமாடுகின்றன.[Image: Siruthai-Siva-and-Suriya.jpg]

ஸ்டுடியோ கிரின் நிறுவனத்தின் அதிபரான ஞானவேல் ராஜா, சூர்யா, கார்த்திகளின் பினாமியாக இருந்துகொண்டு அவர்களைத் தாண்டி வளர்ந்துகொண்டிருந்த சிவகார்த்திகேயனை ஒழித்துக்கட்டுவதற்காக துவங்கப்பட்ட படம் என்று சொல்லப்பட்ட ‘மிஸ்டர் லோக்கல்’ அவர் எதிர்பார்த்ததையும் விட மோசமாக தோல்வி அடைந்திருக்கிறது.
பொதுவாக பெரிய ஹீரோக்களின் படம் இப்படித் தோல்வி அடைந்தாலும் முதல் ஒரு வார வசூல் தயாரிப்பாளரையும் விநியோகஸ்தர்களையும் காப்பாற்றி விடும். ஆனால் ‘மிஸ்டர் லோக்கல்’ படு லோக்கலாக இருந்ததால், முதல் மூன்று நாட்களோடு தனது மூச்சை முற்ரிலும் நிறுத்திக்கொண்டது. இதனால் விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கோடிக்கணக்கில் ஞானவேல் ராஜா பணத்தைத் திருப்பி கொடுக்கவேண்டிய நிலை.[Image: -------------------------------.jpg]
இந்நிலையில்’விஸ்வாசம்’ சிவா, சூர்யா காம்பினேஷனில் அவர் அறிவித்திருக்கும் அடுத்த படத்துக்கு யாரும் ஃபைனான்ஸ் பண்ண முன்வராததால் கடும் நெருக்கடியில் இருக்கிறாராம். நடுவில் இந்தப் படத்துக்குத் தேத்துவதற்காக அவசர பூஜை போடப்பட்ட சிம்பு படத்துக்கும் ஃபைனான்சியர்கள் மத்தியிலிருந்து பெரிய ஆதரவுக்கரம் நீளாததால் சூர்யா படம் கைமாறினாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை என்கிறார்கள்.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 23-05-2019, 09:59 AM



Users browsing this thread: