23-05-2019, 09:49 AM
கார்த்திக்கின் வீட்டுக்குள் நுழைந்த பாலா
தேவியம்மா.... தேவியம்மா....
என அழைத்தப்படி டிவி முன் அமர்ந்திருந்த கார்த்திக்கின் அருகில் போய் அமர்ந்தான்
தன்னை அழைத்த குரல் பாலதான் என்பது பிடிப்படவே
ம்ம் சொல்லு பாலா அம்மா இங்க சமயக்கட்டுள்ள இருக்கேன் என அங்கிருந்து குரல் கொடுத்தார் தேவி......
பாலாவும் குரல் வந்த திசை பக்கம் தலையை திருப்பி
தேவியம்மா அம்மா சந்தைக்கு கிளம்பிட்டாங்களாம் உங்கள வர சொன்னாங்க என சொல்லிவிட்டு
டிவி-யில் கவனமாய் இருந்த கார்த்தியிடம் டேய் மச்சி "WF" வையுடா என அவசரப்படுத்தினான் பாலா
பொறு மச்சி இந்த பாட்டு முடியட்டும் என டிவி-யில் ஓடிய பாட்டை ரசித்தபடி பொறுமையாய் சொன்னான் கார்த்திக்
டிவி பக்கம் திரும்பிய பாலா அதில் சச்சின் படத்தில் இருந்து .....
கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே
குடை இல்லா நேரம் பாத்து கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாலே
தெரு முனையை தாண்டும் வரையில்
வெறும் நாள் தான் என்று இருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன்
அழகான விபத்தில் இன்று ஹையோ நான் மாட்டிக்கொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்கின்றேன்
ஓஹோ ஓஓ.....
என்ற விஜயின் பாடல் ஓட அதை கண்டு திகைத்தவனாய் டேய் நீ எப்ப இருந்து விஜய் ரசிகனா மாறின என கேட்டான்....
அந்த பாடல் முழுமையாக முடிந்த பின்பு விளம்பரம் போட இவன் பக்கம் திரும்பிய கார்த்திக்
மச்சி பாட்டு நல்லா இருந்துச்சுல என கேட்டவன் அவன் முறைப்பாய் இவனை பார்ப்பது புரியவும்
மச்சி நான் ரசிகனாலாம் மாறல... அதுவுமில்லாம பாட்டு மியூசிக் டைரக்டர் தான போட்டாரு என சொல்லியவாறு பாலாவை பார்க்க.....
ம்ம் நீ இப்படியெல்லாம் இருக்க மாட்டியே ஏதோ வித்தியாசமா படுதே என சந்தேகமாய் அவனை பாலா பார்க்க....
இப்ப என்ன மச்சி WF தான பாக்கணும் வா பாப்போம் என ரிமோட்டை எடுத்து சேனலை மாற்ற
அப்போது அங்கு வந்த தேவி....
டேய் பசங்களா டிவி-ய அமத்திட்டு காப்பிய குடுச்சுட்டு ஒழுங்கா டியூஷனுக்கு கிளம்பி போய் படிக்கிற வழிய பாருங்க அம்மா சந்தைக்கு கிளம்பிட்டேன் என சொல்லியவாறு இவர்களிடம் காப்பி டம்ளரை கொடுத்துவிட்டு கிளம்பி சென்றார்.....
தேவி கிளம்பி சென்றவுடன்
டேய் மச்சி நேத்து கோவில்ல ஒரு பிள்ளைய பார்தேண்டா என காபியை ஒரு மிடரு குடித்தபடி கார்த்திக் சொல்ல
அதுவரை டிவி-யில் தன் தலைவன் ராக் போட்டுக்கொண்டிருந்த சண்டையை தீவிரமாய் பார்த்து கொண்டிருந்த பாலா டக்கென அவன் பக்கம் திரும்பி
என்னாது கோவில்ல ஒரு பிள்ளைய பாத்தியா.......
என திகைப்பாய் கேட்டான்...
ஆமா மச்சி என ஆரம்பித்து கோவிலுக்கு சென்றது அங்கு அந்த அழகு பெண்ணை கண்டது என அனைத்தையும் சொல்லி முடித்தான் கார்த்திக்.....
அனைத்தையும் காபியை குடித்தபடி பொறுமையாய் கேட்ட பாலா
அதான் ஒருமதிரியாவே இருக்கியா..... என கேட்டவன்
சரி அந்த புள்ள எப்படி இருக்கும் என கேட்டான்
எப்டினா... எனக்கு புரியல மச்சி என பாலாவின் முகத்தை பார்த்தபடி கார்த்திக் சொல்ல
இல்ல மச்சி அழகா இருக்குமானு கேட்டேன் என அவன் சொல்ல
லட்சணமா இருந்துச்சு மச்சி அந்த புள்ள ...
அந்த புள்ளைய பாத்தா நொடி எனக்குள்ள என்னமோ மாதிரி பண்ணுச்சு மச்சி என நேற்றைய நிகழ்வை நினைத்தபடி தன் நெஞ்சின் மேல் கைவைத்து தலையை அசைத்தப்படி சொன்னான் கார்த்திக்.
இப்படியே நண்பர்கள் இருவரும் பேசியபடி தாங்கள் படிக்கும் டியூஷன் நோக்கி தங்களது சைக்கிள்களில் பயணமானர்கள்....