26-05-2022, 01:47 PM
(26-05-2022, 11:13 AM)rojaraja Wrote: காடுன்னு ஒன்னு இருந்த அதுல சிங்கம், புலி, நரி ஓணான்னு எல்லா மிருகங்கள் இருக்கும், வெறும் ஏர் உழுதோம், விதச்சோம்ம்னு மட்டும் இருந்த போதாது, செழிப்பா (இல்வாழ்க்கை) வளரும் வரை வேலி போட்டு பாத்து கொள்வதும் ஒரு கடமை தான்.
இயற்கையான உணர்வுகள் உணர்ச்சிகள் பற்றி ஒரு புரிதல் ஏற்படுத்தி கொள்ளுங்கள், உங்கள் இல்வாழ்க்கையை சிறப்ப அமைச்சுக்கணும்ன்னு நினைச்ச உங்க துணைக்கு புரிதல் ஏற்படுத்துங்க. பஞ்சும் நெருப்பும் அருகருகில் வைத்தால் எரியும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். யாரை யார் உங்கள் குடும்பத்தில் நெருக்கமாக இருக்கவேண்டும் அதுவும் எந்த அளவுக்கு என்ற அளவை எப்போது கவனத்தில் வைத்து இருங்கள். முக்கியமான ஒன்று உங்கள் காதலை, அன்பை சந்தர்பம் கிடைக்கும் போது எல்லாம் வெளிப்படுத்துங்கள் (அளவோடு). உங்கள் துணையை புரிந்துகொள்ளுங்கள் அவர்களின் மிகை பண்புகள் மற்றும் குறை பண்புகளை தெரிந்துகொள்ளுங்கள். குறை பண்புகள் மேலோங்கும்போது அதை துணைக்கு புரியவையுங்கள் இல்லற வாழ்க்கையையும், குழந்தைகளின் வாழ்க்கையையும் முன்னிறுத்துங்கள். எப்போதும் விழிப்புணர்வுடன் இருங்கள் துணையின் மாற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதை சரி செய்வதும் ஒரு குடும்ப தலைவன்/தலைவியின் கடமையாகும்.
இத்தனையும் செய்தும் துணை இணைந்து வரவில்லை என்றல் தயக்கம் இன்றி அவர்களை விட்டு விலகி வேறு ஒரு வாழ்க்கை அமைத்துக்கொள்ளுங்கள், அந்த அனுபவத்தில் இருந்து கற்று கொண்ட பாடத்தை அடுத்த முறை ஏற்படாமல் இருக்க அதை சரி செய்துகொள்ளுங்கள். எல்லாவற்றிலுக்கும் மேலாக உங்க மீது தன்னப்பிக்கை வையுங்கள்
வாழ்கை ஒரு முறை தான், மன்னிப்போம் மறப்போம் தன்னபிக்கையோடு துணையுடன் வாழுவோம், வாழ்க்கையை அர்த்தம்முடையதாக மாற்றுவோம்.
காமம் என்பது வாழ்க்கையின் ஒரு சிறு அங்கமே, அதுவே வாழ்க்கையும் இல்லை, அன்பு, பாசம், குடும்பத்துக்காக பொருள் ஈட்டுதல், கூட்டத்தோடு ஒன்றி வாழுதல், சமுதாய பார்வை, பனி இப்படி வாழ்க்கையில் பல அங்கங்கள் இருக்கின்றது எல்லாவற்றையும் சரி விகிதத்தில் இருந்தால் எந்த பயமும் இன்றி வாழலாம்
Well said bro. ella kadhai oda starting husbend oda ignore and wife kitta edhum pesama irukaradhu daan. othukaren bro neenga sonnadha