Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#71
♨️6....

மீண்டும் பெங்களூர் கிளம்பியவளிடம் " ஸாரிடா செல்லம் ... ஜாப்ல இன்னும் சீனியாரிட்டி வந்ததும் ஜெனரல் ஷிப்ட் கேட்டு வாங்கிக்களாம் ... அது வரைக்கும் டே அன் நைட் மாறி மாறித்தான் வரும் ... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ டார்லிங் " என்று கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்து அனுப்பி வைத்தான் ...
♨️
இப்படியே ஒரு மாதம் கடந்தது ... முதல் மாதம் சம்பளம் வாங்கியதும் முதலில் கால் செய்து தனது அப்பாவுக்குத்தான் சொன்னான் ...
♨️
" எங்களுக்கு எதுவும் வேணாம் ராசு .... நீ வச்சு செலவு பண்ணிக்கோ " என்று பூபதி பலமுறை கூறியும் ஒரு தொகையை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் ....
♨️
அதற்காக நேத்ராவிடம் வாங்கியது கொஞ்சம் அதிகம் தான் .... " என்னது இவ்வளவு தானா உனக்கு சேலரி ? நான் ஒரு பிப்ட்டி தவுசன்ட் வரை எதிர் பார்த்தேன் " என்று தொடங்கியவளிடம் ....
♨️
" அம்பதாயிரமா? கிழிஞ்சுது போ.... என் மேலதிகாரிக்கே அவ்வளவு இருக்குமான்னு தெரியலை .... இது ஒன்னும் சாப்ட்வேர் இன்டஸ்ட்ரி கிடையாது நேத்ரா ..." என்று கொஞ்சம் கடுமையாகக் கூறியதும் ...
♨️
" சரிசரி கோபப்படாதே ... " என்றவள் அவன் வீட்டுக்குப் பணம் அனுப்பியதுப் பற்றிக் கூறியதும் " நீ வீட்டுக்கு அனுப்பினது தப்பில்லை டியர் ... அதுக்கு ஒரு லிமிட் வச்சுக்கோ.... ஏன்னா நம்மளோட லைப் ரொம்ப முக்கியம் சத்யன் " என்று எச்சரிக்கை செய்தாள் ...
♨️
இந்த வார்த்தைகள் சத்யனை கொஞ்சம் கோபப்படுத்தியது .... " எனக்கு லிமிட் தெரியும் நேத்ரா ... அது என் பேமிலி... என் பணம் அங்கே தேவையில்லைனாலும் கொடுக்க வேண்டியது என்னோட கடமை " என்றவன் " நான் வேணும்னா நீ கொஞ்சம் மாறனும் நேத்ரா " என்றான் ...
♨️
" மாறனுமா? நான் ஏன் மாறனும் ?" என்று கோபமாகக் கேட்டவளிடம் தனது அண்ணி மான்சிப் பற்றிக் கூறினான் .... தனது குடும்பத்துக்கான அவளது அர்ப்பணிப்புப் பற்றி எடுத்துக் கூறினான் .... ஒவ்வொருவரின் மீதும் அவள் செலுத்தும் கவனமும் அன்பையும் சொல்லி " அவங்க அளவுக்கு இல்லைன்னா கூட அதுல ஒரு டென் பர்ஸன்ட்டாவது நீ இருக்கனும்னு நான் எதிர்ப்பார்க்கிறேன் நேத்ரா " என்று கடந்த சில நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த விஷயத்தை சொல்லியேவிட்டான் ...
♨️
சில நிமிட மவுனத்திற்குப் பிறகு " ஓ நீ இவ்வளவு பேசுவியா சத்யா ? ஒன் மந்த் சேலரி வாங்கியதும் சாருக்கு தலையில கிரீடம் வந்துடுச்சுப் போலருக்கு ?" என்றவள் " நெவர் சத்யன் .... யாருக்காகவும் நான் என் நேச்சரை விட முடியாது ... நான் இப்படித்தான் " என்று கூறிவிட்டு போன் காலை கட் செய்துவிட்டாள் ...
வழக்கமாக மீண்டும் கால் செய்து சமாதானம் செய்யும் சத்யன் அன்று தனது மொபைலை அணைத்து வைத்துவிட்டுப் படுத்துக் கொண்டான் ...
♨️
மறுநாள் கால் செய்த நேத்ரா " என் குணம் இப்படித்தான்னு த்ரீ இயர்ஸா உனக்குத் தெரியும் தானே சத்யன் ? அப்புறம் எப்படி உன்னால இது மாதிரி கேட்க முடிஞ்சது?" என்று வருத்தமான குரலில் கேட்க...
♨️
அவளது மனது சத்யனுக்குப் புரிந்தது .... " ஸாரி நேத்ரா .... இது ஒரு சின்ன எதிர்பார்ப்பு தான் ... என் பேமிலிக்காக உன்னை மாறச் சொல்றது தவறுதான் ... அதெல்லாம் தானாக வரனும் ... " என்று கூறியதும்
♨️
" தாங்க்ஸ் டியர் ... ஜ லவ் யூ ஸ்வீட்டி " என்று முத்தமிட்டாள் நேத்ரா ..
♨️♨️♨️7.......

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ 1 டு 40♨️ - by Iamzinu - 08-05-2022, 10:41 PM



Users browsing this thread: