Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#70
♨️6....

" ஒரு நிமிஷம் நேத்ரா ...." என்றவன் " இங்கே பயங்கர குளிர்னு உனக்குத் தெரியும் ... எனக்கு வீசிங் இருக்கிறதும் உனக்குத் தெரியும் ... நான் எப்படியிருக்கேன்னு ஒரு வார்த்தை கேட்கனும்னு தோணலையா நேத்ரா" என்று வேதனை கலந்த குரலில் கேட்டான் ....
" ஏய் என்ன விளையாடுறியா ? இது நீயா செலக்ட் பண்ண ஜாப் ..... ஊட்டில தான் ஜாப் இருக்குனு வந்தவன் வீசிங் வராம சேப்டியா இருந்துக்கத் தெரியாதா? இதை நான் வேற விசாரிக்கனுமா? டோன்ட் பீ சில்லி ? " என்று சிரித்தாள் ...
ஏன் கேட்டோம் என்றானது சத்யனுக்கு " சரி நீ தூங்கு " என்று கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டு படுக்கையறைக்கு வந்தான் ....
♨️
இரண்டு நிமிடம் கழித்து அவனது மொபைல் அழைக்க எடுத்துப் பார்த்தான் .... நேத்ரா தான் அழைத்திருந்தாள் .... ஆன் செய்து " என்ன நேத்ரா ?" என்று கேட்க...
♨️
" ஸாரி டியர் ,, நான் கேட்காதது தப்புதான் ....ரியலி ஸாரி டியர் " என்றவள் " ஆனா எனக்கு இந்த மாதிரி ஃபார்மலா இருக்கிறதெல்லாம் பிடிக்காதுன்னு உனக்கேத் தெரியும் .... என்னால இருக்கவும் முடியாது டியர் ..." என்றாள் கொஞ்சலாக ...
சத்யனுக்கும் நேத்ராவின் இயல்பு தெரியும் ... தெரிந்திருந்தும் அவளிடம் எதிர்பார்த்தது தனது தவறு தான் என்று புரிய .... " இட்ஸ் ஓகே டார்லிங்..." என்றான் சிரிப்புடன் ...
♨️
" ம் ... இதுதான் மை டியர் சத்யன் ... சொன்னதும் புரிஞ்சுக்கிற பாரு " என்றாள் .... மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினான் சத்யன் அதன்பிறகு வெகுநேரம் வரை காதலுடன் கூடிய கொஞ்சல்கள் அவர்களின் உரையாடலில் .....
♨️
அன்று இரவு குளிர் என்றால் இப்படித்தான் என்று உணர்த்திக் காட்டியது உதகையின் இரவு ..... ஹீட்டரின் சூட்டையும் கம்பளியின் கதகதப்பையும் மீறி எலும்புகளுக்குள் ஊடுருவும் குளிர் .... ஒரே இரவில் கொஞ்சம் நடுங்கித்தான் போனான் சத்யன் ....
ஆனால் மறுநாள் காலை எழுந்து ஜாக்கிங் முடித்து வெந்நீரில் குளித்து விட்டு வந்த போது புத்துணர்வுடன் இருப்பதை உணர்ந்தான் .....
♨️
ஏழரை மணிக்கே இமான் வந்து விட்டார் .... " இன்னைக்கு மட்டும் எங்க வீட்லருந்து இட்லியும் சாம்பாரும் கொண்டு வந்திருக்கேன்... நாளையிலிருந்து என் ஒய்ப் கிட்ட சொன்னா இட்லிக்கு மாவு அரைச்சுக் குடுப்பா.... பிரிட்ஜ்ல வச்சி நிறைய நாளைக்கு யூஸ் பண்ணிக்கலாம் " என்று கூறி காலை உணவை வைத்துவிட்டுப் போனார் ....
ஒன்பது மணியளவில் ஜீப் வந்ததும் சத்யன் பிளான்ட்டுக்கு கிளம்பினான் .... விநாயகம் இமானுவேலை அழைத்துக் கொண்டு உதகை டவுனுக்கு கிளம்பினான் ....
♨️
மலையிலிருந்து வரும் அருவி நீரை அணைக்கட்டி தடுத்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஹைட்ரோ பவர் பிளான்ட் .... சிறிய அளவிலான மின் உற்பத்தி தான் .... சத்யனது படிப்புக்கும் அவனது தகுதிக்கும் நல்ல மரியாதை இருந்தது ... வேலை செய்யும் அத்தனை பேரும் நட்புடன் பழகினர் .... சத்யனுக்குப் பிடித்தமான வேலை என்பதால் முழுமனதோடு செய்தான் ....
♨️
விநாயகம் உடனிருந்த ஐந்து நாட்களும் இனிமையாகவும் இயல்பாகவும் சென்றது .... வார விடுமுறையின் போது ஊட்டியின் முக்கிய சுற்றுலாத் தளங்களுக்கு இருவரும் சென்று வந்தனர் .... 
விநாயகம் மூலமாக மான்சியைப் பற்றி சத்யன் தெரிந்து கொண்டதெல்லாம் மேலேப் படிக்க வேண்டும் என்றவளை பழைய நண்பனின் நட்பை உத்தேசித்து முத்துபாண்டிக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் இசக்கி .... அப்புறம் மான்சிக்கு இருட்டைக் கண்டால் பயம் ... எப்பவுமே இரவில் தனது அம்மாவுடன் தான் படுத்துகொள்வாள் ....மிகவும் பலகீனமானவள் என்பதால் உணர்ச்சிவசப் பட்டாலே ... அதிக குழப்பமோ வந்தாலோ ... டென்ஷன் என்றாலும் உடனடியாக மயக்கமாகி விடுவாள் ... மற்றபடி ஓவியம் பாட்டு டான்ஸ் என்று அத்தனையும் கற்று வைத்திருக்கிறாள்...தனது இரக்க சுபாவத்தால் சுலபமாக ஏமாறக் கூடியவள் ... இப்படி பல விஷயங்களை கூறினான் விநாயகம் ...
♨️
தங்கையைப் பற்றிப் பேசுவதென்றால் நாட்கணக்கில் பேசினான் ... அத்தனை அன்பு வைத்திருந்தான் தங்கையின் மீது ....
♨️
விநாகம் ஊருக்குச் சென்றதும் தனிமையை உணர்ந்தான் சத்யன் ....படிப்புக்காகப் பல வருடங்களாக ஹாஸ்ட்டல்களில் தங்கிய போது உணராத தனிமையை இந்த ஒரு மாதமாக குடும்பத்தோடு இருந்து விட்டு வந்த பிறகு உணர்ந்தான் ....
♨️
இத்தனைக்கும் இரு வேளையும் வீட்டிலிருந்து அத்தனை பேரும் இவனுடன் பேசிவிடுவார்கள் .... தினமும் இரவில் நேத்ராவுடனும் பேசிவிடுவான் ... அப்படியிருந்தும் ஏதோவொரு தனிமை வாட்டியது ....
♨️
காலையில் உடற்பயிற்சி முடிந்து அவனே சமைத்து சாப்பிட்டு பிளான்ட்டுக்கு கிளம்பிச் சென்று திரும்ப வரும் போது இரவாகிவிடும் ... வந்த களைப்பில் உட்காரக் கூட நேரமின்றி மீண்டும் இவனே சமைத்து உண்ண வேண்டும் .... ஒரே மாதிரியான வாழ்க்கை ....
மான்சியின் ஆலோசனையால் வீசிங் கூட அதிகமாக இல்லை ... ஓரளவுக்கு கன்ட்ரோலில் தான் இருந்தது ...
♨️
சமையலில் தெரியாததை மான்சிக்கு போன் செய்து கேட்டு அதன்படி செய்துகொள்வான் .... வார விடுமுறையின் போது இவனது மொத்தத் துணிகளையும் இவனே துவைத்து அயர்ன் செய்ய வேண்டும் .. கொஞ்சம் கடுப்பாகத்தான் இருந்தது .... இதுதான் தனக்கு விதித்தது என்று ஏற்றுக்கொண்டான் ...
இவன் உதகைக்கு வந்த இரண்டாவது வாரம் சனிக்கிழமை அன்று நேத்ரா வந்துவிட்டாள் .... ஆனால் இவனுக்குத்தான் அந்த வாரம் முழுக்க இரவு ஷிப்ட் வேலையாகப் போய்விட்டது ....
♨️
பகலில் வந்து உறங்கியவனை அழைத்துக் கொண்டு ஊர் சுற்ற முடியாமல் கோபமாகிப் போய் தனியாகவே ஊட்டியை சுற்றிவிட்டு வந்தாள் நேத்ரா....

♨️♨️♨️♨️....

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ 1 டு 40♨️ - by Iamzinu - 08-05-2022, 10:38 PM



Users browsing this thread: