Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#68
♨️
இடப்பக்கமாக ஒரு சிறிய அறை ஹீட்டர் வசதி எதுவும் இல்லாமல் இருந்தது ... ஸ்டோர் ரூமாக இருந்திருக்கும் போல ... தேவையில்லாத மர சாமான்களை போட்டு வைத்திருந்தனர் ... அதன் பக்கத்தில் ஒரு சமையலறை ....அதன் பக்கத்திலும் குளியலறை இருந்தது... பின்புறமாக தோட்டத்துக்கு செல்லும் கதவு ...
" வீடு சகல வசதியோட கச்சிதமா இருக்கு மாப்ள.... ஆனா பெட்ரூம்ல மட்டும் தான் ஹீட்டர் வசதி இருக்கு .... " என்ற சத்யன் எடுத்து வந்திருந்த பொருட்களை சமைலறையில் கொண்டு போய் வைத்தான் ...
♨️
தனது உடைகளை படுக்கையறையில் இருந்த அலமாரியில் அடுக்கி விட்டு பாத்ரூமில் ஹீட்டரைப் போட்டு குளித்துவிட்டு வரும் போது " குட்டிம்மா உங்ககிட்ட பேசனுமாம் " என்று தனது மொபைலை சத்யனிடம் நீட்டினான் விநாயகம் ....
♨️
புன்னகையுடன் வாங்கிய சத்யன் " சொல்லுங்க அண்ணி ?" என்றான்...
♨️
" அண்ணன் சொல்லுச்சு ... வீடுலாம் நல்ல வசதியா இருக்காம் ... ஆனா ரொம்ப தொலைவில் இருக்காமே ? " என்று கவலையுடன் கேட்டாள் மான்சி ...
♨️
" கொஞ்சம் தொலைவு தான் அண்ணி .... ஆனா நம்ம யூஸ்க்கு ஜீப் குடுத்திருக்காங்க .... அதனால போக்குவரத்துப் பிரச்சனையில்லை " என்றான் ...
♨️
" போக்குவரத்துப் பிரச்சனை இல்லைதான்... ஆனா நீங்க ஹில்ஸ்ல ஜீப் ஓட்டிப் பழக்கமில்லாதவர் ஆச்சே?... கொஞ்ச நாள் பழகுற வரைக்கும் யாராவது டிரைவர் அரேஞ்ச் பண்ணிக்கங்க " என்றதும்.. " சரி அண்ணி " என்று ஒத்துக் கொண்டான்...
♨️
அப்புறம் உங்களோட டிராவல் பேக்ல வலதுபக்க ஜிப் திறந்தா அதுல விக்ஸ் டப்பா அப்புறம் அத்தியாவசிய மாத்திரைகள் எல்லாம் வச்சிருக்கேன் ... இடது பக்க ஜிப் திறந்தா அதுல ஒரு டப்பா இருக்கும் பாருங்க ..." என்றாள் ...
♨️
கட்டிலுக்கடியில் இருந்த பேக்கை இழுத்து ஜிப்பை திறந்து பார்த்தான் ... " ம் இருக்கு அண்ணி " என்றதும் ... " ம் தினமும் காலைல எழுந்ததும் அந்த டப்பால இருக்கிற பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து வெந்நீர்ல கலந்து குடிங்க.... வீசிங் பிரச்சனைக்கு கொஞ்சம் இதமா இருக்கும் ...." என்றாள் மான்சி ...
♨️
அவளின் அக்கறையில் சத்யனின் கண்கள் லேசாக கலங்கியது .... " ம் தாங்க்ஸ் அண்ணி " என்றான் ...
♨️
அவனது உணர்ச்சிவசப்பட்டக் குரல் கேட்டு எதிர் முனையில் சிறிது நேரம் மவுனம் ... பிறகு " காலைல வாக் போகும் போது மறந்துடாம கேப் போட்டு காது ரெண்டுலயும் பஞ்சு வச்சுக்கிட்டுப் போங்க " என்று கூறிவிட்டு " அண்ணன் கிட்ட போனை குடுங்க " என்றாள் ...
விநாயகத்திடம் போனை கொடுத்துவிட்டு சமையலறைக்கு சென்றவன் வெந்நீர் வைத்து கொண்டு வந்திருந்த பால் பவுடரில் டீ தயாரித்து எடுத்து வந்து விநாயகத்திடம் ஒரு கப் கொடுத்தான் ...
♨️♨️.....

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ 1 டு 40♨️ - by Iamzinu - 08-05-2022, 10:33 PM



Users browsing this thread: 1 Guest(s)