08-05-2022, 10:25 PM
♨️6....
♨️மரணமில்லா உணர்வுகள் - அத்தியாயம் - 6
திருநெல்வேலி ரயில் நிலையம் .... கலங்கிய கண்களுடன் தம்பியை அணைத்துக் கொண்டான் முத்து ... " குளிர் அதிகம்டா தம்பி .... பார்த்து கவனமா இருந்துக்கோ... ஸ்வெட்டர் போடாம வெளியே போகாதே " என்றான் ...
♨️
அண்ணனின் அன்பில் நெகிழ்ந்த சத்யன் " சரிண்ணே .... அண்ணி ஸ்வெட்டர்லாம் ரெடியா எடுத்து வச்சிட்டாங்க " என்றான் ..
♨️
" அது அவளே தைச்ச ஸ்வெட்டர் சத்யா ... எனக்கும் கூட ஒண்ணு ரெடி பண்ணி குடுத்திருக்கா ..." என்று புன்னகையுடன் முத்து கூறியதும் " ஓ... ரியலி ?" என்று அதிசயித்தான் சத்யன் ...
♨️
" குட்டிம்மாக்கு ஓவியம் கூட வரைய தெரியும் ... ஸ்கூல்ல காலேஜ்ல எல்லாம் நிறைய பரிசு வாங்கியிருக்கு " என்று விநாயகம் பெருமையாகப் பேசினான் ...
♨️
" உங்க தங்கச்சிக்கு தெரியாதது எதுவுமே இல்லை போல ?" என்று விளையாட்டாகக் கூறி சிரித்த சத்யன் ... அண்ணனை தோளோடு அணைத்து ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்று " அண்ணா எனக்குக் குடுத்த வாக்கை மீற மாட்டியே ?" என்று முத்துவின் கைகளைப் பற்றிக் கொண்டு கேட்க ....
♨️
" என்னடா தம்பி ? நீயே நம்பலைன்னா எப்படி? பொஞ்சாதி வந்ததும் பாதி விட்டேன் .. இப்போ குழந்தை வந்ததும் மீதியையும் விட்டுடுவேன் ...." என்றான் முத்து..
♨️
" விட்டுடுவேன்னா? அப்போ இன்னும் விடலையா? அண்ணே நானும் ப்ரண்ட்ஸ் கூட சேர்ந்து ட்ரிங்க் பண்ணுவேன் தான் ... ஆனா அதுக்கு ஒரு வரம்பு வச்சிருப்பேன் ... என்னைக்கும் அதை மீற மாட்டேன் ... மனசுல உறுதியோட இருந்தால் போதும்ண்ணே" என்று வருத்தமாகப் பேசினான் ...
♨️
" இல்ல சத்யா சீக்கிரம் குடியை தலை முழுகிடுவேன் ..... என்னோட சேக்காலி பயலுகளைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே ? நான் அப்பாவாகிட்டேன்னு தெரிஞ்சதும் கண்டிப்பா பார்ட்டி வேணும்னு தகராறு பண்றானுங்க .... கடைசியா அவனுங்க கூட சேர்ந்து ஒரே ஒரு முறை மட்டும் தான் .... அதுக்கப்புறம் அந்த பக்கமே திரும்ப மாட்டேன் " என்று கூறி தம்பியின் கையிலடித்துக் கூறினான் முத்து ...
♨️
" புரியுதுண்ணே ... ஆனா நான் எதுக்காக இவ்வளவு வற்புறுத்தி சொல்றேன் தெரியுமா? அண்ணியோட பேமிலி பார்த்தியே? எல்லாரும் அண்ணியை ஒரு குழந்தை மாதிரி ட்ரீட் பண்றாங்க .... நம்ம வீட்டுலயும் அண்ணி ஒரு தேவதை தான் .... அப்படிப்பட்டவங்களுக்கு தகுதியானவனா நீ இருக்கனும்னு நான் ஆசைப்படுறேண்ணே " உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய தம்பியை அணைத்துக் கொண்டான் முத்து ...
" நிச்சயம் சத்யா ..... நீ மறுபடி வரும்போது புது அண்ணனைப் பார்ப்ப....." என்று கூறி தம்பியை அனுப்பி வைத்தான் ....
♨️
அண்ணன் கொடுத்த வாக்குறுதி மனதை நிம்மதிப்படுத்த அதே சந்தோஷத்துடன் பயணமானான் .... மான்சி செய்து கொடுத்திருந்த உணவினை சாப்பிட்டு உறங்கி எழும் போது மதுரை வந்துவிட்டிருந்தது ... அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரயிலுக்கு மாறினர் இருவரும் ....
♨️
மேட்டுப்பாளையத்தில் வந்து இறங்கியதும் வாடகைக்கு ஒரு கார் பிடித்து லக்கேஜ்களை ஏற்றிக்கொண்டு உதகை வந்தடையும் போது பகல் ஒரு மணியாகியிருந்தது .... அந்த பகல் வேளையிலும் குளிர் உடலை ஊடுருவியது ....
♨️
உதகைக்குள் நுழைந்ததுமே ... அந்த மலையரசியின் அழகும் .... அடுக்கடுக்காக கட்டப்பட்டிருந்தக் கட்டிடங்களும் .... தேயிலைத் தோட்டங்களும் .... பைன் மர காடுகளும் சத்யனுக்கு அதிசயமாக இருந்தது ....
♨️
உதகை ரயில் நிலைய வாயிலில் இருந்து கொண்டு வேலைக்கான நியமனத்தின் கவரில் உதகை வந்ததும் தொடர்புக்கொள்ளச் சொல்லிக் கொடுத்திருந்த நம்பருக்கு கால் செய்தான் ...
♨️
உடனடியாக எடுத்தவர் சத்யன் யாரென்று விசாரித்துவிட்டு " வெல்கம் சத்யன் ... நான் சொல்ற அட்ரஸ்க்குப் போய் வெயிட்ப் பண்ணுங்க ... கெஸ்டவுஸ் சாவியோட ஒருத்தர் வருவார் அவர்கிட்ட உங்களை அறிமுகப்படுத்திக்கிட்டு சாவியை வாங்கிக்கோங்க ..." என்றார் ...
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அவர் கூறிய முகவரியை கார் டிரைவரிடம் கூறினான் ....
♨️
பைக்காரா அணைகட்டு கடந்து பைக்காரா அருவியையும் கடந்து படுகர் இன மக்களின் கிராமம் ஒன்றையும் கடந்து கிட்டத்தட்ட நீர்மின் நிலையத்திலிருந்து இருபத்தைந்தாவதுக் கிலோமீட்டரில் இருந்தது கெஸ்டவுஸ் ...
♨️
" என்ன சத்யா ஊரை விட்டு இவ்வளவு தூரமா இருக்கு ? நைட்ல பாதுகாப்பாக இருக்குமா?" என்று விநாயகம் கேட்க...
♨️
" பிளான்ட் கெஸ்டவுஸ்னா தனியா இருக்க வாய்ப்பில்லை விநாயகம் .... எப்படியும் பக்கத்துப் பக்கத்துல மற்ற லேபர்ஸ்க்கு வீடுகள் இருக்க வாய்ப்பிருக்கு .... அப்படியே தனியா இருக்கிறதுனாலும் எனக்குப் பயமில்லை மாப்ள ...." என்று கூறிவிட்டு சத்யன் சிரிக்க .... அவன் கூறிய " மாப்ள" என்ற அழைப்பில் வியந்து பிறகு புன்னகைத்தான் விநாயகம் ....
கார் செல்லும் வழியெங்கும் காடுகளும் மனித நடமாட்டம் உள்ள சில இடங்களில் தேயிலைத் தோட்டங்களும் தான் .... மலை கிராமங்களில் மட்டும் காய்கறி வகைகள் பயிர் செய்திருந்தனர் ....
♨️
பிளான்ட் முகவரியுடன் இருந்த ஒரு ஆர்ச்க்குள் நுழைந்தது கார் ... கால் கிலோமீட்டருக்கு ஒரு வீடு என்று ஆங்காங்கே சில வீடுகளும் சற்று தொலைவில் மேடான ஒரு இடத்தில் பங்களா போன்ற பெரிய கட்டிடம் ..... அதைக் கடந்து E பிளாக் என்று எழுதப்பட்ட வீட்டின் முன்பு கார் நின்றது ...
♨️
போர்ச்சுகீசியர்களின் கட்டிட அமைப்பில் இருந்தது ஹெஸ்டவுஸ் .... நிறைய கண்ணாடி ஜன்னல்களும் கதவுகளும் கொண்டிருந்த வீட்டைச் சுற்றிலும் தோட்டம் ... மூங்கில்கள் கொண்டு அழகாக வேலியடைக்கப் பட்டிருந்தது...
♨️♨️♨️♨️.......

By. Zinu♨️❤