Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#65
♨️
இப்படி அத்தனையும் சந்தோஷ நிகழ்வுகள் மட்டுமே என்பது போல் நாட்கள் ஓடி மறைந்தது ... ஊட்டிக்குச் சென்று வேலையில் சேர இன்னும் ஒரு வாரமே என்ற நிலையில் ஒருநாள் மாடியில் தனது அறையில் அமர்ந்து லாப்டாப்பில் நேத்ராவுடன் சாட் செய்து கொண்டிருந்தான் ... அப்போது தோட்டத்தில் பொம்மியின் சப்தம் கேட்க " இரு வர்றேன் நேத்ரா" என்று காதலிக்கு தகவல் அனுப்பி விட்டு எழுந்து ஜன்னலருகே வந்துப் பார்த்தான் ...

♨️
தோட்டத்தின் நடுவே வலைக் கட்டி பொம்மியும் மான்சியும் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தனர் .... இருவருமே தப்புத் தப்பாக விளையாடி ஒருவர் மீது ஒருவர் புகார் செய்தபடி இருக்க... அவர்களின் விளையாட்டைக் கவனித்த சத்யன் " ஓ....... இது தான் டென்னிஸ்ஸா?" என்று கேலியாகக் கேட்க...
♨️
மேலே நிமிர்ந்துப் பார்த்த மான்சி " ஹலோ புட்பால் ப்ளேயர் ... என்ன நக்கலா? நீங்க விளையாடுறது புட்பால்னா ... நாங்க விளையாடுறது டென்னிஸ் தான் " என்றாள் ....

♨️
சிரித்து விட்டான் சத்யன் .... " ம் ஆமா இது டென்னிஸ் தான் ... லியாண்டர் பயஸ் மகேஸ் பூபதி கூட கலப்பு இரட்டையர் ஆட்டத்துக்கு உங்க ரெண்டு பேரையும் கூப்பிடுறாங்களாம் .... சும்மா காமெடி பண்ணாம ரெண்டு பேரும் போய் பல்லாங்குழி ஆடுங்க " என்றான் ...

♨️
மீண்டும் மறுத்து சொல்ல நிமிர்ந்து மேலேப் பார்த்த மான்சி விழிகள் சொருகிக் கொள்ள கையிலிருந்த டென்னிஸ் மட்டையைப் போட்டு விட்டு தலையைப் பிடித்தபடி சரிந்து விழுந்தாள் .... 
" என்னாச்சு அண்ணி ?" என்று அலறியபடி அருகே வந்த பொம்மி மான்சியின் தலையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு தாடையில் தட்டி " அண்ணி ... அண்ணி ... " என்று அழைத்தபடி அழ ஆரம்பிக்க... " இதோ வந்துட்டேன் " என்ற சத்யன் தலைதெறிக்க தாவி இறங்கி கீழே ஓடி வந்தான் ...

♨️
அதற்குள் மான்சியைச் சுற்றிலும் வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் கண்ணீருடன் நின்றிருந்தனர் ...

♨️
" மொதல்ல அழுகையை நிறுத்திட்டு கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க... அவங்களுக்கு காத்து வரட்டும் " என்று அதட்டிய சத்யன் " அம்மா கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாங்க " என்று உத்தரவிட மறு நிமிடம் அவனிடம் தண்ணீர் நீட்டப் பட்டது ...

♨️
மான்சியின் முகத்தில் நீரைத் தெளித்து " அண்ணி ... அண்ணி ... " என்று பதட்டமாக அழைத்துப் பார்த்தான் .... மயக்கம் தெளியவில்லை...
♨️
மான்சியின் மறுபக்கம் மண்டியிட்டு அமர்ந்திருந்த முத்து " என்னாச்சு நாச்சியா ? கண்ணைத் திறந்து பாரும்மா" என்றபடி அழ ஆரம்பித்து விட்டான் ...

♨️
மான்சியின் மணிக்கட்டைப் பிடித்துப் பார்த்த சத்யன் ... " பல்ஸ் ஓகே தான் ... அண்ணா ப்ளீஸ் அழறதை நிறுத்திட்டு மொதல்ல அண்ணியை தூக்கு .. நான் போய் வண்டியை எடுக்கறேன் ... ஆஸ்பிட்டல் போகலாம்" என்று கூறிவிட்டு " பொம்மி கார் சாவியை எடுத்துட்டு வா" என்றபடி கார் செட்டுக்கு ஓடினான்...

♨️
மனைவியை கைகளில் தூக்கிக் கொண்டு வந்து காரின் பின்புறம் படுக்க வைத்தான் முத்து.... சத்யன் காரை ஸ்டார்ட் செய்ய முயன்று பார்த்தான்... கார் இஞ்ஜின் உயிர் பெறவில்லை ... " அப்பா காரை மாத்துங்கப்பா... இப்பப்பாருங்க அவசரத்துக்கு தகராறு பண்ணுது " என்று அப்பாவிடம் வருத்தமாக சொல்லி விட்டு காரிலிருந்து இறங்கினான் ....

♨️
" அண்ணா நான் பைக்கை ஓட்றேன்... அண்ணியை நடுவுல உட்கார வச்சு நீ பின்னால உட்கார்ந்து உன்மேல சாய்ச்சுக்கோ ..." என்றுவிட்டு பைக்கை கிளப்பினான் .... அவன் கூறியது போலவே மான்சியை அவனுக்குப் பின்னால் உட்கார வைத்து முத்து அவளுக்குப் பின்னே உட்கார்ந்து தன்மீது சாய்த்துக் கொண்டான்..
♨️
" நீங்கல்லாம் பஸ்ல வாங்க ... நான் டவுன் ஆஸ்பிட்டல் கூட்டிப் போறேன்" என்று அம்மாவிடம் தகவல் சொல்லிவிட்டு கிளம்பினான் சத்யன் ...

♨️
மருத்துவமனைக்கு சென்று மான்சியை பரிசோதித்த லேடி டாக்டர் " சந்தோஷமான செய்திதான் .... உங்க குடும்பம் விருத்தியாகியிருக்கு " என்றுக் கூறிய மறுவிநாடி " வாவ் ... அண்ணா .. நீ அப்பா ஆகிட்ட" என்று சந்தோஷமாகக் கூச்சலிட்டபடி தனது அண்ணனை அலேக்காகத் தூக்கிக் கொண்டான் சத்யன் ... 

♨️
மீண்டும் அனைவரும் வீட்டிற்கு வந்ததும் தனது அறைக்குச் சென்ற பூபதி கையில் சில ஐநூறு ரூபாய் கட்டுகளுடன் வந்து " இந்தா சத்யா ... இதுல அஞ்சு லட்சம் இருக்கு... செட்டியாருக்கு குடுக்க வச்சிருந்தேன்... ஆனா அதைவிட இப்போ நாச்சியா இருக்கிற நிலையில் வீட்டுக்கு ஒரு நல்ல கார் அவசியம் ... நீ உடனே போய் உனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு கார் வாங்கிடுய்யா .... " என்றார் ...

♨️
பாட்டியின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த மான்சி " அய்யோ அதெல்லாம் வேண்டாம் மாமா" என்றாள் ...

♨️
" நீ சும்மாயிரும்மா... உன்னை ஆஸ்பத்ரிக்கு கூட்டிப் போகமுடியாம தவிச்சது எனக்குத்தான் தெரியும் ..." என்றவர் மகனிடம் திரும்பி " நீ போ வாங்கிடு சத்யா " என்றார்

♨️
" ம் சரிப்பா " என்று புன்னகையுடன் பணத்தை வாங்கிய சத்யன் .... " கவலைப்படாதீங்கப்பா ... நான் வேலைக்கு போன அடுத்த வருஷமே செட்டியாருக்குப் பணத்தைக் குடுத்துடலாம்" என்றான் ....

♨️
அன்று மாலையே திருநெல் வேலியில் இருந்து புதுகார் வந்துவிட்டது ... மான்சிக்காக ...

♨️
மறுநாள் காலை அஞ்சாறு ஆடுகள் .. பத்து பதினைந்து கோழிகள் ... தக்கலை மார்கெட்டில் இருக்கும் அத்தனை பழ வகைகள் ... இன்னும் தனது பத்து வீட்டு பங்காளிகள் மனைவி மகன் என தனது பரிவாரங்களுடன் லாரியில் வந்து இறங்கினார் இசக்கியான் ....

♨️
அவரது மீசையையும் உருவத்தையும் கண்டு சத்யனே கொஞ்சம் நடுங்கிவிட்டான் ... காட்டெருமை போன்ற உருவமும் நிறமும் கொண்ட இவருக்கா இந்த மான்க்குட்டிப் பிறந்தது? என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை ...

♨️
அப்பாவைக் கண்டதும் ஓடி வந்து அணைத்துக் கொண்ட மகளை தன் தோளில் சாய்த்துக் கொண்டு " இப்படிலாம் ஓடியாறக் கூடாது தாயி ..... பதுக்க நடக்கனும்டா" என்றவரின் கண்கள் கலங்கிப் போயிருக்க அதுவும் கூட சத்யனுக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது ... என்னைப் போல அப்பா பாசம் அதிகம் போலிருக்கு? என்று எண்ணிக்கொண்டான்.

♨️
முத்துவைக் கண்டதும் வேகமாக வந்து அணைத்துக் கொண்ட இசக்கி " என்னை இம்புட்டு சீக்கிரமாவே கிழவனாக்கிப்புட்டீகளே மாப்ள " என்றவர் அப்போதுதான் சத்யனைக் கண்டார் போலிருக்கு " ஏவே சின்ன மாப்ள ... வாருமய்யா வாருமய்யா? " என்று அழைத்த படி கைகளை விரித்துக் கொண்டு வேகமாக வந்தார் ...
வந்தவர் எங்கே தன்னையும் அணைத்து எலும்புகளை இடமாற்றி விடுவாரோ என்று பயந்தவனாக அவசரமாக கைகூப்பி " வணக்கம் மாமா " என்றான் ....

♨️
" வணக்கம்வே .... என்னய்யா படிப்பு முடிச்சு கரண்டு கம்பெணில வேலைக்கு சேர்ந்திருக்கீகளாமே ? பார்த்து சூதனமா இருந்துகங்க மாப்ள " என்றார் ...


♨️ஏதோ சொல்ல வந்தவன் ... சொன்னால் புரியுமா என்ற குழப்பத்துடன் " சரிங்க மாமா " என்று மட்டும் கூறினான் ....

♨️
இசக்கியான் கொண்டு வந்திருந்த ஆடுகளும் கோழிகளும் அன்று ஊர் மக்களுக்கு விருந்தானது ....

♨️
தேவதைகள் கருவுற்றால் இப்படித்தான் கொண்டாடுவார்களோ ? என்று எண்ணும் அளவிற்கு மான்சியைக் கொண்டாடினர் இரு குடும்பத்தினரும் ...
அதிலும் மான்சியின் அண்ணன் விநாயகம் தங்கை தனது உள்ளங்கையில் வைத்துத் தாங்குபவன் போல் இருந்தான்... " குட்டிம்மா... குட்டிம்மா" என்று மான்சியின் பின்னாலேயே சுற்றிய அவனது தங்கைப் பாசம் கூட சத்யனுக்கு வியப்பாகத்தான் இருந்தது ...

♨️
விருந்து முடிந்து மேலமடைக்குக் கிளம்பிய இசக்கி " நம்ம வீட்டுக்கு வந்து நாலுநாள் தங்கிட்டுப் போங்க சின்ன மாப்ள " என்றபடி சத்யனின் முதுகில் தட்டியதும் ... " யப்பா சாமி ... " என்று தரையில் அமர்ந்தவன் " அடுத்த முறை லீவுக்கு வரும் போது வர்றேன் மாமா " என்றான் பரிதாபமாக ....
♨️
" கண்டிப்பா வரனும் மாப்ள... நமக்கு ஒரு பண்ணையே இருக்கு மாப்ள...நாலுநாள் தங்கி நல்ல குரும்பாட்டுக் கறியா சாப்ட்டு உடம்பை தேத்திக்கிட்டு வாங்க சின்ன மாப்ள " என்றுபடி ஊருக்கு கிளம்பிச் சென்றார் ..

♨️
அவர்கள் சென்ற மறுநாள் மாலை திரும்பவும் வந்த மான்சியின் அண்ணன் விநாயகம் செட்டியாரிடமிருந்த பூபதியின் நிலப் பத்திரத்தை மீட்டு வந்து பூபதியிடம் கொடுத்து " மாமா அப்பா குடுத்துட்டு வரச்சொன்னார் " என்றான்...

திகைப்புடன் அவனைப் பார்த்த பூபதி ... " எதுக்குப்பா இதெல்லாம்? நான் அடுத்த அறுவடையில் மீட்டுடுவேனே?" என்றார் சங்கடமாக...

♨️
" இல்ல மாமா,, குட்டிம்மா கல்யாணத்துல நீங்கதான் கைப்பணம் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க ... அதனால அந்த பணத்தை அப்பா குட்டிம்மா பேர்ல பேங்க்ல போட்டுட்டார்.... சும்மா வேஸ்ட்டாத் தானே கிடக்குன்னு குட்டிம்மா தான் நேத்து இந்த யோசனையைச் சொல்லுச்சு... அதான் அப்பா உடனே சரி பண்ணிட்டார்" என்று விநாயகம் பணிவுடன் கூறினான்...

♨️
இன்னும் சங்கடமாக நின்றிருந்தவரின் அருகே வந்த மான்சி " எனக்காக நீங்க எல்லாரும் என்னல்லாம் செய்றீங்க? நான் இதைக் கூட செய்யக் கூடாதா? இப்ப என்ன? நம்ம பொம்மி கல்யாணம் முடிஞ்சதும் வர்ற வருமானத்தில் எனக்கு நகையா பண்ணிப் போட்டுடுங்க " என்று கூறி விட்டு சிரிக்க.... அவளின் வெள்ளை மனம் கண்டு சத்யனின் கண்கள் பனித்தன.....
சத்யன் ஊட்டிக்குப் புறப்படும் நாளும் வந்தது.... ஆளாளுக்கு அவனுக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்தனர் .... காலையிலிருந்தே பொம்மி விசும்பிக்கொண்டேயிருக்க ..... " ஏய் வாலு ... லீவு கிடைக்கும் போதெல்லாம் வந்துடுவேன்டா ... அதே போல உனக்கு காலேஜ் லீவு விட்டதும் நீ அங்கே வந்துடு ... ஊட்டியை நல்லா சுத்திப் பார்க்கலாம் " என்று தங்கையை அணைத்து ஆறுதல் படுத்தினான் ...
♨️
இரவு கிளம்ப வேண்டும் எனும் போது மதியமே மான்சியின் அண்ணன் விநாயகம் வந்து சேர்ந்தான் ... தம்பியிடம் வந்த முத்து " எனக்கு உன் கூட வந்து அங்கே ஹெஸ்டவுஸ்ல எல்லாத்தையும் செட்டில் பண்ணி வச்சுட்டு வரத்தான் ஆசை... ஆனா நாச்சியா இப்படியிருக்கும் போது அவளை விட்டு வர முடியலை ... அதோட வயக்காட்டுலயும் நிறைய வேலையிருக்குடா ... அதான் நாச்சியா காலைல போன் பண்ணி விநாயகத்தை வரச் சொன்னா... விநாயகம் உன் கூட வந்து எல்லாத்தையும் வச்சிட்டு வருவாப்ல" என்றான்...
♨️
" அய்யோ என்னண்ணா ? நான் என்ன சின்னப்புள்ளையா? பாவம் அவரை வேற சிரமப்படுத்திக்கிட்டு " என்றான் சங்கடமாக ..

" எனக்கொன்னும் சிரமமில்லா மாமா " என்று விநாயகம் கூற.... " நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே வயசாத்தான் இருக்கும்... அதனால பேர் சொல்லியே கூப்பிடு விநாயகம் " என்றான் சத்யன் தோழமையுடன் ...
♨️
அழக்கூடாது என்று உதட்டைக் கடித்து அடக்கிக் கொண்டிருந்த அம்மாவை அணைத்து " என்னம்மா நீயும் ? அதான் இனி அடிக்கடி வருவேன்னு சொல்றேன்ல " என்று இவனும் கண்கலங்கினான்...

அப்பாவிடம் வந்து மவுனமாக கைகளைப் பற்றிக்கொண்டிருந்துவிட்டு மான்சியௌப் பார்த்து " எல்லாரையும் பார்த்துக்கங்க அண்ணி " என்றான்...
♨️
" அதுதானே என் வேலையே? நீங்க எந்த கவலையும் இல்லாம போய்ட்டு வாங்க... " என்று புன்னகையுடன் கூறினாள் மான்சி ...

" ஆசிர்வாதம் பண்ணு அப்பத்தா" என்று பாட்டியின் காலில் விழுந்து கும்பிட்டு எழுந்தவனின் நெற்றியில் பெரியதாக விபூதி பட்டையடித்து அனுப்பி வைத்தாள் பாட்டி ..

வாசலுக்கு வந்தவர்களிடம் ஒரு கவரை நீட்டி " இதையும் பைல வச்சுக்க " என்றாள் பொம்மி...

தங்கைக் கொடுத்ததை வாங்கிப் பார்த்தவன் " ஏய் நான் தான் ஊறுகாய் தொட்டுக்க மாட்டேனே?" என்றான் ..

" ம் ... உனக்கில்லை அது ... உன் கூட வர்றாரே மேலமடைக்காரர் ... அவருக்கு ஊறுகாய் இல்லாம சோறு இறங்காதாம் .... அதான் " என்றாள் பொம்மி ....
♨️
விநாயகம் தலையை சொரிந்தபடி வேறு எங்கோ பார்க்க .... சிரித்துவிட்ட சத்யன் " பாருடா இதுவேறயா? ... ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் " என்றான் ...

திருநெல்வேலி ரயில் நிலையம் செல்ல புதுகாரில் சத்யனது பொருட்கள் ஏற்றப்பட்டது ... எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு சத்யனும் விநாயகமும் ஊட்டிக்கு கிளம்பினார்கள் ...


♨️♨️♨️♨️♨️♨️

" பெண்"
" இவளைப் போற்றத்தான் வேண்டும்...
" கண்ணுக்குள் வைத்து எனை காக்கும் தாயாக!
" தன் துயர் மறந்து என் துயர் தாங்கும் தங்கையாக!
" உலகில் எனக்கான அங்கீகாரத்தை தரும் மனைவியாக!
" சுகத்திலும் துக்கத்திலும் நான் தோள் சாயும் தோழியாக!
" சமயத்தில் தாதியாகவும் வாழ்ந்துவிடும்..
" பெண்ணைப் போற்றத்தான் வேண்டும்!

♨️♨️♨️♨️ 6.......

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 08-05-2022, 02:13 AM



Users browsing this thread: 2 Guest(s)