08-05-2022, 02:09 AM
♨️ 5♨️
♨️
அப்பாவின் வேதனை புரிந்தது ஆறுதலாக அவரது தோளில் கை வைத்து " அதெல்லாம் எதுவும் ஆகாதுப்பா ...அண்ணி அண்ணன் கூட சந்தோஷமாத்தான் இருக்காங்கன்னு தெரியுது ... இதைப்பத்தி நான் அண்ணன் கிட்ட பேசுறேன் ..... நீங்க கவலைப்படாம இருங்கப்பா " என்றான் ...
♨️
" ம் ம் ... ஆனா சத்யா ... எந்த நிலைமையிலும் நான் என் மருமகளை விட்டுக்கொடுக்க முடியாது ... என் வீட்டு மகாலட்சுமி என் மருமக நாச்சியா ... " என்றார் உணர்ச்சிவசப்பட்ட குரலில் ....
♨️
" அப்பா ... அண்ணன் ஒன்னும் மொடாக் குடிகாரர் இல்லை ... இதுபோல இருக்கிறவரை சீக்கிரம் சரி பண்ணிடலாம் ... அண்ணியோட நல்ல குணம் அவரை நிச்சயம் மாத்திடும்ப்பா ... " என்றவன் அவரைப் படுக்க வைத்து அவரது கழுத்து வரை பெட் சீட்டால் மூடி " தூங்குங்கப்பா ... நான் இன்னும் ஒரு மாசம் இங்கதான் இருப்பேன் ... அதுக்குள்ள எல்லாத்தையும் சரி பண்ணிட்டு தான் ஊட்டிக்கு கிளம்புவேன் " என்றான் ...
♨️
மகன் கால்களைப் பிடித்து விட அமைதியாக உறங்கிப் போனார் பூபதி ...
அப்பா உறங்கியதும் அறையிலிருந்து வெளியேறி தோட்டத்திற்கு சென்று பாக்கெட்டிலிருந்து தனது மொபைலை எடுத்து நேத்ராவுக்கு கால் செய்தான் ..
♨️
" பரவால்லயே? உன் பேமிலியைப் பார்த்ததும் என்னை மறந்திருப்பேன்னு நினைச்சேன் .. ஞாபகம் வச்சிருக்கயே " என்று கேலியாகக் கேட்டவளுக்கு சத்தமாக ஒரு முத்தத்தை வழங்கி சமாதானம் செய்துவிட்டு " யாராவது மூச்சு விடுறதை மறப்பாங்களாடி செல்லம்" என்று பேச ஆரம்பித்தான் ...
♨️
கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடம் பேசிவிட்டு அப்பாவின் அறைக்கு வந்து தரையில் படுக்கையை விரித்துப் படுத்துறங்கினான் ...
♨️மறுநாள் காலை எழுந்து அப்பாவுக்கு குட்மார்னிங் சொல்லி விட்டு வெளியே வந்தான் ... பொம்மி கொடுத்த காபியை வாங்கிக் குடித்துவிட்டு தோட்டத்தில் தனது உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு தனது அறைக்குச் சென்று குளித்துவிட்டு சாப்பிட வந்தான் .
♨️
முத்து வெள்ளை வேட்டி சட்டையில் புத்துணர்ச்சியுடன் அமர்ந்திருக்க " குட்மார்னிங்ண்ணா " என்று கூறிவிட்டு அண்ணன் பக்கத்தில் அமர்ந்தான்..
♨️
எல்லோருக்கும் தட்டு வைத்து தோசைகளை பரிமாறிய மான்சி சத்யனின் தட்டிலும் தோசையை வைத்தாள் ...
♨️
தனதுத் தட்டைப் பார்த்தவன் திகைத்து " என்னதிது ? என் தோசை மட்டும் பச்சைக் கலர்ல இருக்கு ?" என்று கலவரமாகக் கேட்டான் ...
" ♨️அய்ய அதுக்கு ஏன் இப்படி கத்துறீங்க ? ... உங்களுக்கு வீசிங் இருக்குன்னு அத்தை சொன்னாங்க ... அதனால உங்களுக்கு மட்டும் தூதுவளை தோசை .... இதை தினமும் சாப்பிட்டா வீசிங் கன்ட்ரோலுக்கு வரும் " என்றாள் மான்சி ...
♨️
" அண்ணா இதெல்லாம் ரொம்ப கொடுமைண்ணா " என்று போலியாக அழுதபடி தூதுவளை தோசையைப் பிய்த்து சாப்பிட்டான் ...
♨️
சாப்பிட்டு விட்டு வயக்காட்டுக்குப் புறப்பட்ட அண்ணனுடன் " நானும் வர்றேண்ணா" என்று பின்னால் பைக்கில் அமர்ந்தான் ...
♨️
இருவரும் தங்களது பால்ய கதைகளை ஞாபகப்படுத்தும் விஷயங்களைப் பற்றி பேசியபடி வயக்காட்டுக்கு வந்து சேர்ந்தனர் ...
♨️
வேட்டியை மாற்றிக்கொண்டு சேற்று வயலில் இறங்கிய முத்து கூடவே சத்யனும் இறங்குவதைக் கண்டு " நீ எங்கடா வர்ற? அப்படியே வரப்புல உட்காரு ... " என்று தம்பியைத் தடுத்தான் ...
♨️
" பரவால்லண்ணா... முன்னாடி நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்த வேலை தானே ?" என்ற சத்யன் தனது பேன்ட்டை முழங்கால் வரை மடித்துக்கொண்டு மண் வெட்டியுடன் வயலில் இறங்கினான் ...
♨️
இருவரும் பக்கம் பக்கமாக வரப்பைக் கொத்திக் கொண்டே நகர்ந்தனர் ..... பழசை மறக்காமல் அதே லாவகத்துடன் வரப்பை சீவிய தம்பியைப் பார்த்து பெருமையுடன் சிரித்தவன் " நீ சிங்கக்குட்டிவே ... எதையும் மறக்கலைப் பார்த்தியா?" என்றான் ...
♨️
" இந்த வயல்ல விளைஞ்சது தானே நான் படிச்சு வாங்கின பட்டமெல்லாம் ... அப்புறம் எப்படிண்ணே மறக்கும் ?" என்றான் சத்யன்...
♨️
" சரிதாம்லே ... ஆனா சேத்துல கால் வச்சா உனக்கு ஒத்துகாதே?" என்று வருத்தப்பட்டவனைப் பார்த்து சிரித்த சத்யன் " அதான் உன் வீட்டம்மா தூதுவளை தோசை சுட ஆரம்பிச்சிருக்காங்களே ... எனக்கு எதுவும் ஆகாதுண்ணா " என்றுவிட்டு வேலைப் பார்த்தான் ...
♨️
ஒரு வயலை செதுக்கிவிட்டு முடித்துவிட்டு வரப்பில் வந்து அமர்ந்தனர் .... முத்து எழுந்து சென்று இரண்டு சொம்பில் மோர் ஊற்றி எடுத்து வந்து தம்பியிடம் ஒன்றைக் கொடுத்து " இஞ்சிப் போட்ட மோர் ... உடம்புக்கு நல்லது ... உன் அண்ணி குடுத்தனுப்பினா" என்றான் ..
வாங்கி குடித்துவிட்டு அண்ணனை யோசனையுடன் பார்த்தான் .... பிறகு " அண்ணே .... அண்ணி எப்படிண்ணே? உன்கூட சந்தோஷமா இருக்காங்க தானே?" என்று மெல்ல ஆரம்பித்தான் ...
♨️
" என்னலே இப்புடி கேட்டுட்ட? அவ வந்தப் பிறகு தான் நான் மனுசனாவே மாறின மாதிரி இருக்கு ... எனக்காகவே பிறந்த தேவதைடா நாச்சியா .... ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கோம்வே" என்ற முத்துவின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது அவனது சந்தோஷம் ...
♨️
" அப்போ ஏன்ண்ணே அந்த கருமத்தை குடிக்கனும் ?... நேத்து அவங்களை தனியா நிக்க வச்சிட்டு நீ போய் குடிச்சிருக்க ... இது தேவையாண்ணே ? இப்படி ஒரு தேவதையை உன் கைல குடுத்திருக்காங்க... இவங்களை விட குடி உனக்கு முக்கியமா? நான் அதிகமா பேசுறதா நினைச்சா மன்னிச்சிடுண்ணா ... ஆனா எனக்கு இது சுத்தமாப் பிடிக்கலை... அப்பாவும் ரொம்ப சங்கடப்படுறார் " என்றான் வேதனையாக..
♨️
சற்றுநேரம் வரை தலைகுனிந்து அமர்ந்திருந்த முத்துப்பாண்டி " எனக்கும் புரியுது சத்யா .... ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி இருந்ததை விட நாலில் ஒரு பங்கு குறைச்சிட்டேன் ...ஒரேடியா விட முடியலைடா தம்பி ... போகப் போக சுத்தமா நிறுத்திடனும்னு தான் முடிவு பண்ணிருக்கேன் ... நாச்சிவுக்காக .... " என்றான் ...
இந்த வார்த்தைக்காகவே காத்திருந்தவன் போல் அண்ணனின் கைகளைப் பற்றிக் கொண்ட சத்யன் " இந்த வார்த்தைப் போதும்ண்ணா ...குடியை சுத்தமா விட்டுடுவேன்னு நம்புறேன் " என்றான் ....
♨️
தம்பியே தோளோடு அணைத்துக் கொண்டவன் " சரி நீ வீட்டுக்குப் புறப்படு ... நான் இருக்குற வேலையை முடிச்சிட்டு ... நாளைக்கு கூலிக்கு ஆள் சொல்லிட்டு வர்றேன் " என்று தம்பியை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் ...
♨️
அதன் பிறகு வந்த நாட்கள் அத்தனையும் சத்யனின் வாழ்க்கையில் பொன்னேட்டில் பொரிக்கப் படவேண்டிய நாட்கள் தான் ...
♨️அடிக்கடி வெள்ளை வேட்டி சட்டையணிந்து அப்பாவுடன் ஊரை சுற்றி வந்து கன்னிப் பெண்களின் காதல் பார்வைகளையும் இளவட்ட பசங்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டான்.
♨️
மதிய வேளையில் வயிறாற உண்டு விட்டு மணிக்கணக்காக அம்மாவின் மடியில் படுத்துறங்கினான்...
♨️
தங்கை பொம்மியுடன் சேர்ந்துகொண்டு சரசூ அப்பத்தாவை கலாய்த்து விட்டு கையில் குச்சியுடன் பாட்டி விரட்டி வர தனது அண்ணனின் பின்னால் போய் மறைந்து கொள்வான் ...
♨️
வீசிங் வராமல் இருக்க மான்சி கற்றுக் கொடுத்த சில மூச்சுப் பயிற்சிகளை கற்றுக்கொண்டான் ....
பொம்மியும் மான்சியும் பாவாடை சட்டையுடன் தாமிரபரணி ஆற்றில் குதித்து நீச்சலடிக்க .... நீச்சல் தெரியாத இவன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கரையில் அவர்களுக்காக காத்திருந்தான் ...
♨️
" தாமிரபரணிக் கரையில் பிறந்து வளர்ந்துட்டு நீச்சல் கத்துக்கலையா நீங்க ?" என்று கேலி செய்த அண்ணியை முறைத்து விட்டு அப்பத்தாவிடம் போய் கோபமாக நின்றான் ...
♨️
" அது வந்து நாச்சியா ... இவனுக்கு ஜாதகத்துல தண்ணில கண்டமிருக்குன்னு சொல்லிட்டாங்க... அதனால நாங்க இவனை தண்ணி பக்கமே விடமாட்டோம்" என்று அப்பத்தா விளக்கம் குடுத்ததும் ...
♨️
" தண்ணிக்கிட்டயே விடலைன்னா இவுக எப்புடி குளிச்சாக?" என்று கேட்டு விட்டு மான்சி வாய் பொத்தி சிரிக்க ... பொம்மியும் அவளுடன் இணைந்து கொண்டாள் ....
♨️
" பாரு கிழவி கிண்டல் பண்றாங்க " என்று சிறு பையன் போல் கை கால்களை உதறிக்கொண்டு புகார் செய்த தம்பியை ரசித்து சிரித்தான் முத்து ....
♨️
முத்து கூட தனது குடிப் பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து விட்டிருந்தான் .... நன்றியுடன் பார்த்த தம்பியின் தோளில் தட்டி " அடுத்த முறை நீ வரும் போது நம்ம அண்ணனா இவருன்னு ஆச்சர்யப்படுற மாதிரி மாறியிருப்பேன் பாரு சத்யா" என்றான் ...

By. Zinu♨️❤