29-04-2022, 12:05 AM
♨️♨️
அத்தனை பேரும் சத்யனை சுற்றி நின்று
ஆறுதலாக முகத்தை வருடி நலம் விசாரித்தப்
பிறகு பூபதி சோபாவில் அமர...
♨️
அவரின் காலடியில் அமர்ந்து பின்புறமாக அவர் மடியில் தலை சாய்த்த சத்யன் "
கிட்டத்தட்ட மூணு நாள் டிராவல்ப்பா ...
♨️
. உடம்பிலிருந்த எனர்ஜி மொத்தமும் போய்ட்ட மாதிரி இருக்குப்பா " என்று களைப்புடன் கூறிய மறுநிமிடம் அவன் முன்பு பாதாம் கஞ்சி நிறைந்த பெரிய வெங்கல டம்ளர் நீட்டப்பட்டது ....
முகத்தைத் திருப்பிப் பார்த்தான் ...
மான்சிதான் ....
காதுகளில் சிறியதான
இரு ஜிமிக்கிகள் ...
மூக்கில் ஒற்றை சிவப்புக்கல் மூக்குத்தி ...
கழுத்தில் மெல்லிய செயின் ஒன்றைத் தவிர வேற எந்த நகையும் இன்றி ...
கூந்தலைப் பின்னலைப் பிரித்து
இரட்டைப் பின்னலாகப் போட்டு அதை முன்னால் விட்டுக் கொண்டு ...
தரையைத் தொடும் பச்சை நிறத்தில் ஆரஞ்சு நிற பார்டர் வைத்த பட்டுப் பாவாடையும் ...
அதற்கு மேட்சாக ஆரஞ்சு நிறத்தில் நிறைய சுருக்கம் வைத்த கப் கை மேல் சட்டையும் அணிந்திருந்தாள் ..
♨️♨️
திகைப்புடன் நிமிர்ந்து அமர்ந்த சத்யன் .....
" யாருப்பா இவங்க?
புதுசா இருக்காங்க?
" என்று கேலியாகக் கேட்க ...
♨️♨️
எல்லோரும் சிரித்துவிட ...
தெய்வா இளைய மகனின் தலையை வருடி
" உன் அண்ணி தான்டா...
எப்பவுமே இப்படித்தான் இருப்பா ..
.அவளுக்கு சீலையே கட்டத் தெரியாது
" என்றாள் ....
♨️♨️
" அய்யோடா சாமி ....
பெரிய பட்டுசேலைக் கட்டி நகைக் கடை
விளம்பரம் மாதிரி கொஞ்சம் முன்னாடி பார்த்தவங்களா இவங்க ? " என்று இன்னும் நம்பாமல் கேட்டான் ...
♨️
" அட போடா பேரான்டி ... ா
ங்க மூணு பேரும் சேர்ந்து அந்த சீலையை கட்டிவிடுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு ...
. " என்றார் சரசூ பாட்டி ...
♨️
" அவங்கதான் இவங்களா?....கடவுளே" என்று தனது தோள்களைக் குலுக்கியவன் "
பிப்டீன் இயர்ஸ் முன்னாடி மேலமடைல பார்த்த அதே கெட்டப் .... அன்பிலீவபிள்.....
" என்றான் சத்யன் ...
♨️
கூச்சமாக சிரித்தபடி
" இது பாதாம் கஞ்சி ..
. இப்போ இதைக் குடிங்க ..
. இன்னும் கொஞ்ச நேரத்துல நைட் சாப்பாடு ரெடியாகிடும் " என்றாள் மான்சி ...
♨️
" ம் தாங்க்ஸ் அண்ணி ...."
ன்றபடி டம்ளரை எடுத்துக் கொண்டான் .
தம்பியுடன் இணைந்து வீட்டுக்கு
வந்த முத்து தனது அறைக்குள் சென்று படுத்தவன்
இரவு உணவுக்குத்தான் எழுந்து வெளியே வந்தான் ....
♨️
மான்சியும் தெய்வாவும் அனைவருக்கும் உணவு பரிமாற ....
வெகு நாட்கள் கழித்து வயிறாற உண்டான் சத்யன் ...
. நிறைய உணவு வகைகள் மான்சி செய்ததாக
அவன் அம்மா கூறியதும் ...
உணவின் சுவையில் " நல்லாருக்கு அண்ணி....
இப்புடி சமைச்சிப் போட்டீங்கன்னா எங்கண்ணன் தொப்பையும் தொந்தியுமால்ல ஆகிடுவார் ?"
என்று சத்யன் கேலி பேசவும் சாப்பிட்டுக் கொண்டிருந்த முத்துவும் மான்சியும்
ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர் ....
♨️
" அண்ணனை விடு சின்னண்ணா...
ன் நிலைமைச் சொல்லு ... சீக்கிரமே குண்டாகிடுவேன் போலருக்கே"
என்று பொம்மி போலியான வருத்தத்துடன் கூறவும் அவளின் பின்னந்தலையில் தட்டிய மான்சி "
எதையும் சாப்பிட்டதும் தூங்கினா உடம்பு வெயிட் போடத்தான் செய்யும் ... சாப்பிடுற சாப்பாட்டுக்கு
ஏத்த மாதிரி உடற்பயிற்சி செஞ்சா ஒரு துளி சதை கூட ஏறாது " என்றாள் ...
❤️
பின்னந்தலையை தடவியபடி "
எங்க சாப்பிட்டதும் தூக்கம் தான் வருது
" என்ற பொம்மி சத்யனைப் பார்த்து
" சின்னண்ணா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? அண்ணி யோகாவில் பயங்கர எக்ஸ்பர்ட்
" என்றாள் பெருமையாக ....
♨️
" ஆமாலே சத்யா,,
னக்கு கூட மூட்டு வலிக்கு ஒரு யோகாசனம் சொல்லிக் குடுத்தா ... நைட்ல அதை பண்ண ஆரம்பிச்சதில்
இருந்து மூட்டு வலியே இல்லை " என்றாள் தெய்வா ...
♨️
.
மான்சியை ஆச்சர்யமாகப் பார்த்த சத்யன்
" அப்படியா அண்ணி ?" என்று கேட்க ... "
அதெல்லாம் இல்லீங்க ....
சும்மா கொஞ்சம் தான் தெரியும் ...." என்றாள் கூச்சமாக ....
♨️
அத்தனை பேருக்கும் சாப்பாடு பரிமாறி தானும் சாப்பிட்டு டேபிளை க்ளீன் செய்துவிட்டு எல்லாருக்கும் பால் எடுத்து வந்து கொடுத்து " மாமா இந்தாங்க உங்க மாத்திரை " என்று ப்ரஸருக்கான மாத்திரை பூபதிக்கு .... "
த்தை உங்களுக்கு இருமல் டானிக் " என்று தெய்வாவுக்கு டானிக் ... " இரு இரு நான் போட்டுத் தர்றேன் " என்று பொம்மிக்கு படிப்பு சம்மந்தமான அசைமெண்ட்க்கு படம் வரைந்து கொடுத்து விட்டு ..... " அம்மாச்சி ரெண்டு நிமிஷத்துல வந்துடுறேன் "
என்று கூறிவிட்டு ஓடிச்சென்று முகம் கைகால் கழுவி வந்து சிறிய விளக்கை ஏற்றி சாமி கும்பிட்டு விட்டு இராமயணத்தைப் பிரித்து வைத்து ஆரன்ய காண்டத்தை பாட்டிக்கு படித்துக் கூறினாள் ...
♨️
அசந்து போனான் சத்யன் ... இப்படியொரு பெண்ணா ? சுழற்றி விட்ட பம்பரமாக சுழன்று வரும் பெண் ...
ஒரு நிமிடம் கூட ஓய்வாக உட்காரவில்லை ... முகத்திலும் சோர்வின் அடையாளமில்லை ...
புதுமலர் போன்ற புன்னகை எப்போதுமே ....
♨️
" ஏய் பொம்மு காலைல காலேஜ் போட்டுக்கிட்டு போன என்னோட வளையலை எங்கடி வச்ச ?"
ன்று கேட்டபடி சத்யனிடம் வந்தவள் " உங்களுக்கு எதுவும் வேணுமா ?" என்று கேட்க ...
♨️
தலைக்கு மேல கையெடுத்துக் கும்பிட்டவன் " எனக்கு எதுவும் வேணாம் மேடம் ... மொதல்ல உங்க ரூமுக்குப் போங்க ... அண்ணன் மூணாவது முறையா கூப்பிட்டாச்சு " என்று கேலியாகக் கூறியதும் அவ்வளவு நேரம் இயல்பாக இருந்தவள் சட்டென்று முகம் வெட்கச் சிவப்பைப் பூசிக்கொள்ள யார் முகத்தையும் பார்க்காமல் தனது அறைக்கு ஓடிப் போனாள் ..
♨️
சிரிப்பு மாறா முகத்துடன் குடித்த பால் டம்ளரை எடுத்துச்சென்று வைத்துவிட்டு தனது அப்பாவிடம் வந்தவன்
" அப்பா இன்னைக்கு நான் உங்கக்கூட உங்க ரூம்ல படுத்துக்கிறேன்ப்பா " என்று கேட்க ..
♨️
" அதுக்கென்னய்யா ... வா .. வந்து படுத்துக்க சத்யா " என்று மகனை கை நீட்டி அழைத்தார் ...
♨️
பூபதியின் அறை ... கட்டிலில் படுத்தவரின் காலருகே அமர்ந்து மெதுவாக கால்களைப் பிடித்து விட்டவன் " உங்க ஹெல்த் ஓகேயா அப்பா ? ப்ரஸர் மாத்திரைலாம் போடுறீங்களேப்பா ?" வருத்தமான குரலில் கேட்டான் ....
♨️
" அதெல்லாம் ஒன்னுமில்லை ராசு .... ஒருநாள் லேசா மயக்கம் வந்துடுச்சு ... அதுக்கு அந்த டாக்டர் ரத்தக்கொதிப்பு இருக்குனு சொல்லிட்டார் ... அதுவும் உன் அண்ணி முன்னாடி சொல்லிடாரு ... அதுலருந்து உப்பை பாதியா குறைச்சிட்டா ... தினமும் மாத்திரை வேற ... ஆனா ஒண்ணு சத்யா ... என் உடம்பு சரியாகனும்றதை விட நாச்சியாவோட அன்புக்காகவே நானும் அந்த புள்ள சொல்றபடி கேட்டுக்கிறேன்" என்றவர் தனது கண்களை மூடிக்கொண்டு " நம்ம குலதெய்வம் பொம்மியம்மா தான் நாச்சியா ரூபத்துல வந்திருக்கா சத்யா " என்றார்
♨️
" ஆமாம்ப்பா .... எனக்கும் அதான் தோனுது .... தேவதை மாதிரியான பொண்ணுப்பா அண்ணி .... " என்றவன் அப்பாவின் முகத்தை நேராக நோக்கி " ஆனா அண்ணன் ? ... இன்னைக்கு அவங்களை எங்க நிறுத்திட்டு டாஸ்மார்க் போயிருந்தார் தெரியுமா? நல்லவேளை தற்செயலா நான் பார்த்தேன் ... அவ்வளவு நகையைப் போட்டுக் கிட்டு நடுங்கிப் போய் நின்றிருந்தாங்கப்பா ... இது சரியில்லைப்பா " என்றான் வேதனையான குரலில் ....
♨️
படுத்திருந்தவர் எழுந்து அமர்ந்தார் .... வியர்த்த முகத்தை தோளில் கிடந்த துண்டால் துடைத்துக் கொண்டு " ம் ம் ... நானும் பலமுறை மறைமுகமாவும் நேரடியாவும் சொல்லிப் பார்த்துட்டேன்யா ..... சொன்ன ரெண்டு நாளைக்கி சுதானமா இருக்கான் ... அப்புறம் மூணாவது நாள் மறுபடி டாஸ்மார்க் தேடிப் போயிடுறான் ... நாச்சியா இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட இதைப் பத்தி எங்ககிட்ட வேதனைப் பட்டதில்லை ... அதே போல அவளை பெத்தவங்ககிட்டயும் சொன்னதில்லை .... வந்த கொஞ்ச நாள்ல நம்ம குடும்பமே உலகம்னு இருக்கா ... அப்படிப்பட்ட பொண்ணுக்கு நாம முத்துவால கஷ்டம் வந்துடுமோன்னு ஒவ்வொரு நிமிஷமும் வேதனையா இருக்கு சத்யா " என்றார் ...
♨️♨️♨️

By. Zinu♨️❤