Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#58
♨️

நான் எங்கப் போட்டுக்கிட்டேன் ...
 இந்த அம்மாச்சி பண்ண வேலை ...
முதல் முதலா புருஷன் கூட வெளியேப் போற...
எல்லா நகையும் போட்டுக்கோன்னு எடுத்து மாட்டி விட்டுட்டுச்சு ... வீட்டுக்குப் போய் பேசிக்கிறேன் ....
 " கோபம் போல் கூறினாலும் அதில் ஒருவித குறும்புத்தனமிருந்தது ...

♨️

சிரித்துவிட்டான் சத்யன் .... " 
நீங்களும் சரசூவும் பெஸ்ட் பிரண்ட்னு பொம்மி சொன்னா.... பிரண்ட்டைப் போய்
 இது போல திட்டலாமா?"
என்றவன் தனது மொபைலை எடுத்து அண்ணனின் நம்பருக்கு கால் செய்தான் ....
ரிங் போய்க்கொண்டே இருந்தது...
 எடுக்கவில்லை ...

♨️

" ம்ம் அம்மாச்சி மட்டுமில்ல ...
அத்தை மாமா .. பொம்மி ...
எல்லாருமே எனக்கு பிரண்ட்ஸ் தான் ....
." என்றாள் புன்னகையுடன் ....

♨️


இவனுடன் பேசிக் ொ
ண்டிருந்தாலும் அவளது பார்வை
தனது கணவனைத் தேடி நாற்புறமும் அலசிக்கொண்டிருந்தது ... சத்யனும் அண்ணன் நம்பருக்கு அடுத்தடுத்து
கால் செய்தபடியே இருந்தான் ....
கிட்டத்தட்ட பதிணைந்து நிமிடம் கழித்து பைக்கில் வந்து இறங்கியவன் தம்பியைக் கண்டதும் உற்சாகமாகி
" டேய் தம்பி ...."
என்று ஓடி வந்து அணைத்துக் கொண்டான் ...


♨️

அன்போடு அண்ணனை 
ணைத்தவன்
அடுத்த நிமிடமே முகம் சுழித்தான் சத்யன் ....
மதுவின் நெடி ....
ஓ இதுக்குத்தான் பொண்டாட்டியை தனியா விட்டுட்டு போயிருக்கார் போலருக்கு என்று
 கோபமாக எண்ணியவன் அந்த கோபத்தை
வாழ வந்தவள் முன்பு காட்ட மனமின்றி " அண்ணியை இப்படியா தனியா நிக்க வச்சுட்டு போவ ?
 ரொம்ப பயந்து போய் நின்னிருந்தாங்க...,ஏதோ நான் வரவச்சி சரியா போச்சு ?
இல்லேன்னா ?"
என்று கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டான் ...

♨️

" டேய் தம்பி ... 
து நம்ம ஏரியாடா ....
எவன் வந்து என்ன செஞ்சிட முடியும் "
என்று தைரியமாகப் பேசியவன்
 மான்சியிடம் திரும்பி "
ஏ புள்ள ... பயந்தியா என்ன?
இங்கல்லாம் நம்மளை மீறி எதுவும் நடக்காது புள்ள" என்றான் ...

♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 28-04-2022, 11:50 PM



Users browsing this thread: