Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#57
♨️♨️♨️

♨️

ம்ம் ஒரு வழியா புத்தக மூட்டைக்கு விடுதலை குடுத்துட்டு வந்துட்டேன்
" என்று கூறி சிரித்தவன் .... "
அதுசரி
நீங்க எங்க இந்த நேரத்துல இங்க வந்து நிக்கிறீங்க ? அதுவும் இவ்வளவு நகைகளைப் போட்டுக்கிட்டு ? "
 என்று புருவம் சுருங்க குழப்பமாகக் கேட்டான் ...

♨️


சற்று தயங்கி சுற்றிலும் தனது பார்வையை ஓட்டியவள்
 " அது வந்து ...
நானும் உங்கண்ணாவும் சினிமா பார்க்க வந்தோம் ...
மாட்னி ஷோ பார்த்துட்டு வீட்டுக்கு கிளம்பினோம் ...
 வரும் போது என்னை கொண்டு வந்து
 இங்க விட்டுட்டு கொஞ்ச நேரம்
 இரு இதோ வந்துடுறேன்னு சொல்லிட்டுப் போனார் ...
நாற்பது நிமிஷம் ஆச்சு இன்னும் காணோம்
 " என்றாள் கவலையாக .....

♨️


அண்ணன் மீது கோபமாக வந்தது ... 
இவ்வளவு நகைகளைப் போட்டு
 ஒரு பெண்ணை தனியா இந்த நேரத்துல இங்க விட்டுட்டு இவர் எங்க போனார் ?
என்று எண்ணியவன் ....
" ஏதாவது அவசர வேலையா போயிருப்பார் ...
நீங்க வாங்க அதோ அங்கே உட்காருங்க ..
 அண்ணன் வர்ற வரைக்கும் நான் கூட இருக்கேன்
" என்று கூறிவிட்டு பேருந்து நிலையத்தில் போடப்பட்டிருந்த ஸ்டீல் சேரில் மான்சியை அமரச் சொன்னான் ...

♨️


தனியே நிற்க பயந்து போய் கழிவறை ஓரமாக நின்றிருந்தவள் சத்யன் கூறியபின் தைரியமாக
 வந்து சேரில் அமர்ந்தாள் ...

♨️

அவளருகே தனது லக்கேஜ்களை 
இறக்கி வைத்து விட்டு பாதுகாப்பாக இருக்கைக்குப் பக்கத்தில் நின்றுகொண்டவன் ... "
 சினிமாக்கு வர்றதுக்கு இவ்வளவு நகைகள் அவசியமா அண்ணி?..
ஊர் கெட்டு கிடக்கே?"
என்றான் வருத்தமாக ...

♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 28-04-2022, 11:46 PM



Users browsing this thread: