Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#55
♨️

ஏய் ஏன்ப்பா ஒன் மந்த் அங்க இருக்கனும்?
 ஒன் வீக் போதும் சத்யன் ....
 அப்புறம் கிளம்பி பெங்களூர் வந்துடு ...
இங்க ஜாலியா சுத்தலாம் " என்று உற்சாகமாகப் பேசினாள் ...


"♨️ நெவர் நேத்ரா ....
. அண்ணனுக்கு மேரேஜ் ஆகி இன்னும்
நான் போய் பார்க்கலை ...
அதுமட்டுமில்லாம கிட்டத்தட்ட ஏழு வருஷமா
அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன் ....
 இந்த முறை ஒரு நாளைக் கூட வேஸ்ட் பண்ணாம
 அப்பாக் கூடவே இருக்கனும்னு ஆசைப்படுறேன் நேத்ரா
 ... ப்ளீஸ் புரிஞ்சுக்கோ " என்று கெஞ்சுதலாகக் கூறினான் ...


♨️

சில நிமிட மவுனத்திற்குப் பிறகு
" உன்கிட்ட எல்லாம் ஓகே சத்யா ..
. ஆனா உன்னோட
இந்த அப்பா பாசம் இருக்குப் பாரு ?
இதுதான் எனக்கு பயங்கர தலைவலி ....
இந்த பாசம் எங்க என்னை ஓரங்கட்ட வச்சிடுமோனு கொஞ்சம் பயமாவும் இருக்கு சத்யா " என்றாள் ...


♨️

நேத்ராவின் மனது புரிய "
ஏய் டியர் என்ன இப்படிலாம் யோசிக்கிற?
உனக்கு ஒண்ணு தெரியுமா?
நம்ம லவ் மேட்டரை யார் எதிர்த்தாலும்
நமக்கு முழு சப்போர்டிவ்வா இருக்கப்போறது
என் அப்பாவாத்தான் இருக்கும் ...
எனக்காக எதையும் செய்வார் என் அப்பா....
 அதனால நீ இந்த மாதிரி சில்லியா யோசிக்காம
இரு " என்று தெளிவுப்படுத்தினான் ...

♨️♨️♨️♨️

" ம் ம் ... பார்க்கலாம் .....
" என்றாள் ... அதன் பின் வழக்கமான காதல் பேத்தல்களுடன் கைப்பேசியிலிருந்த
காசை கரைத்துவிட்டு வெகுநேரம் கழித்து உறங்கச் சென்றனர் ....

♨️♨️♨️♨️


சத்யனின் தேர்வுகள் முடிந்தது ...
. ஹாஸ்டல் அறையை காலி செய்து கொண்டு ஊருக்குக் கிளம்பினான் ...
பஞ்சாப்பிலிருந்து டெல்லி வந்து அங்கிருந்து ரயில் மூலமாக நல்லிரவு ஒன்று நாற்பதுக்கு
சென்னைக்கு வந்தான் ...
♨️♨️♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 28-04-2022, 12:32 AM



Users browsing this thread: