Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#53
♨️♨️♨️♨️

ஊட்டிலயா?
தம்பி அங்க ரொம்ப குளிரும்னு சொல்லுவாங்களே ?
 உனக்கு குளிர் ஒத்துக்காதேய்யா ?
வேற இடத்துல வேலை தேடலமே சத்யா?"
என்று கவலையுடன் கேட்டார் பூபதி ...

♨️

" இல்லப்பா அது சின்ன பவர் ஸ்டேஷன் ...
முதல்ல இதுபோல சின்ன இடத்திலிருந்து ஆரம்பிக்கலாம்னு நான்தான் இந்த இடத்தை செலக்ட் பண்ணேன் ....
குளிர் ஒத்துக்காது தான் ...
 வீசிங் வரும் தான் ....
மருந்து எடுத்துக்கிட்டா சரியாப் போகும்ப்பா "
 என்று சமாதானம் செய்தான் ...
♨️
♨️

♨️


ஆனாலும் பெற்ற மனம் கேட்கவில்லை .... "
 யோசிச்சு செய் சத்யா .....
 எனக்கு உன் உடல்நிலைதான் முக்கியம் "
என்றார்...


♨️


" அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்ப்பா ... ீ
விட்டுல எல்லாரும் எப்படியிருக்காங்க ?
அண்ணிக்கு நம்ம வீடு பிடிச்சிருக்காவாம் ?
 நம்ம வீட்டுல எல்லார் கூடவும் சகஜமா
பழகுறாங்களா?"
என்று சத்யன் பேச்சை திசை திருப்பியதும்
 அதற்கேற்றார் போல் உடனே உற்சாகமானார் பூபதி ..


♨️

குரலில் சந்தோஷம் தெரித்து ஓட ... "
அருமையான பொண்ணு சத்யா .....
வந்து சில நாள்லயே
 எல்லாரையும் புரிஞ்சி நடந்துக்குது ....
அந்த புள்ளை நம்ம வீட்டுக்கு மருமக இல்லைய்யா...
பொம்மி மாதிரி அதுவும் ஒரு மகதான் .... "
 என்று உற்சாகமாகப் பேசிக்கொண்டே போனவர் ....
" உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ".
என்று கேட்க ....

♨️



" என்ன விஷயம்ப்பா ?"
சத்யனும் ஆர்வமானான் ...
" உங்கம்மாவோட
பூர்வீக சொத்து கொஞ்சம் வழக்குல இருந்ததுல்ல?
 அது நாலு நாளைக்கு முன்னாடி அந்த வழக்குல தீர்ப்பாகிடுச்சு சத்யா "
என்றார் ...

♨️

தனது அம்மா ஒரே பெண்ணாக இருந்ததால் 
அவருக்கு சேரவேண்டிய சொத்துக்களை
தர மறுத்த அம்மாவின் சித்தப்பாவின்
மீது வழக்குத் தொடர்ந்து கிட்டத்தட்ட
பனிரென்டு வருடங்களாக இழுப்பறியில் இருந்து வந்தது சத்யனுக்கும் தெரியும் "
ஆமாம்ப்பா ... தீர்ப்பு என்னனு வந்திருக்கு ?
" என்று அவசரமாகக் கேட்டான்  ..

♨️♨️♨️♨️...

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 28-04-2022, 12:24 AM



Users browsing this thread: