Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#45
♨️♨️♨️♨️

♨️

கடனா ? ....
வட்டி அதிகமாயிடுமே?
அதுவும் நிலத்தை அடமானம் வச்சு வாங்கனுமாப்பா?" கவலையாகக் கேட்டான் ...

♨️

" வேற என்ன ராசு செய்றது ? 
வீட்டுல நூறு பவுனுக்கு நகைகள் இருக்கு தான் ...
கல்யான நேரத்துல அதை அடமானம் வச்சிப்புட்டு வீட்டு பொம்பளைக எதை போட்டுக்குவாக?

♨️

அதுவுமில்லாம
அதெல்லாம் பொம்மிக்காக வாங்கி வச்சது ...
திடீர்னு மாப்ளை வீட்டுக்காரவுக வந்துடுவாங்க ... வயசுப்புள்ளையோட
நகைகளை தொடக்கூடாதுடா மவனே ...


♨️

விடுய்யா நிலப் பத்திரம் தானே?
அடுத்த வருஷம் அறுவடைக்கு மீட்டுட்டாப் போச்சு ....
எனக்கு எந்த கவலையும் இல்லை சத்யா...
நீ படிச்சு வேலைக்குப் போனதும்
எல்லாத்தையும் பார்த்துக்கப் போற ...
அப்புறம் எனக்கென்ன
" என்று தைரியமாகக் கூறினார் ...

♨️


தன்மீதான 
ப்பாவின் நம்பிக்கை மனதை என்னவோ செய்ய
 " சரிப்பா நீங்க ஏற்பாடு பண்ணுங்க ...
ஆனா நான்தான் அண்ணன்
 மேரேஜ்க்கு வரமுடியாது போலிருக்கு
" என்று வருத்தமாகக் கூறினான் ...

♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 26-04-2022, 02:58 PM



Users browsing this thread: