Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#44
♨️♨️♨️

♨️

சின்ன வயசுலயே அமைதியா அழகா இருப்பா "
என்றவன்
முதல்நாள் அப்பா எச்சரித்தது ஞாபகம் வர ...
 " ஸாரிப்பா ...
அண்ணி அழகா அமைதியா இருப்பாங்க
 " என்றான் ....

♨️


" ஆமாய்யா ....
அடக்கமான பொண்ணு ....
 பார்த்ததும் ரெண்டு குடும்பத்துக்கும்
பிடிச்சுப் போய்ட்டதால
அங்கயே உடனே தட்டு மாத்திக்கிட்டோம் ....
கல்யாணம் கூட அடுத்த மாசம்
இருபத்திரெண்டுல தேதி வச்சாச்சு சத்யா"
என்றார் ...

♨️


இவ்வளவு அவசரமாகவா? 
 என்று  கேட்க நினைத்து கேட்காமல் "
ஒரு மாசம் தானேப்பா இருக்கு ?
அதுக்குள்ள எல்லா ஏற்பாடும் செய்ய முடியுமா? "
என்றவன் கொஞ்சம் தயங்கி "
பணம் வச்சிருக்கீங்களாப்பா ?"
என்று கேட்டான்...

♨️


இளைய மகன்
அக்கரையுடன் கேட்டதும் நெகிழ்ந்து
 போன பூபதி "
நம்ம வீட்டுலயா காசுக்கு பஞ்சம் வந்திடப் போகுது ?

♨️

அந்த மசானி புண்ணியத்தில்
ஒரு குறையும் இல்லை சத்யா ....
என்ன ஒண்ணு?
நம்ம வீட்டு மொத கல்யாணம் ...
கொஞ்சம் சிறப்பா செய்யனும் ....
கறிக்கஞ்சி போடலைன்னா
 காறித்துப்பிட்டு போய்டுவானுக பயபுள்ளைக ...
கை வசம் நாலு லட்சம் இருக்கு ...

♨️

பத்தாததுக்கு
 வள்ளியூர் செட்டியார் கிட்ட நிலத்துப்
பத்திரத்தை அடமானம் வச்சு நாலு லட்சம் வாங்கலாம்னு யோசனைல இருக்கேன் ...

♨️

வீட்டுல யாருக்கும் இன்னும் சொல்லலை ...
உனக்குத்தான் மொதல்ல சொல்றேன் "
என்றார் ...

♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 26-04-2022, 02:55 PM



Users browsing this thread: