Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#26
♨️♨️♨️

♨️

வேறு வழியில்லாமல்
" ஓகே ஆன்ட்டி ..
 நீங்க நேத்ராவை பார்த்துக்கங்க..
நான் காலேஜ்க்கு
 இன்பார்ம் பண்ணிட்டு கிளம்பி வர்றேன்
" என்று கூறிவிட்டு
மொபைலை அனைத்து வைத்தான் ...

♨️


சற்று நேரம் வரை கண்மூடி அமர்ந்திருந்தான் ...
 நேத்ராவின் இந்த கோபம் தான்
அவனை அதிகமாகப் பயபடுத்தியது ....
அவள்
இது போல் தற்கொலைக்கு முயல்வது
 இது இரண்டாவது முறை ...
முன்பு கல்லூரி விழா
 ஒன்றில் சக பெண் தோழியுடன்
இவன் மேடையில் நடனமாடியதற்காக
ஒரு முறை இதேபோல் செய்திருந்தாள் ...

♨️

கவலையுடன் தாடையில் ை
வைத்து அமர்ந்திருந்தவன்
ஒரு நீண்ட மூச்சுக்குப்
பிறகு தனது மொபைலை எடுத்து
பிரின்ஸிபால் நம்பருக்கு கால் செய்தான் ....

♨️

முதலில் எடுக்கவில்லை 
ன்றதும் மீண்டும் முயன்றான் ....
இம்முறை எடுத்தவர் நம்பரை வைத்து
 சத்யனை அடையாளம் கண்டு "
சொல்லு சத்யா ?"
என்று ஆங்கிலத்தில் கேட்டார்...

♨️


" தொந்தரவுக்கு மன்னிச்சிடுங்க சார் ....
என் காலேஜ் பிரண்ட்
ஒருத்தனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு ...
இப்பதான் போன்கால் வந்தது ..
நான் போகனும் சார் ...
ஐந்து நாள் லீவு வேணும் "
என்று இவனும் ஆங்கிலத்தில் கூறினான் ..

♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 25-04-2022, 04:05 PM



Users browsing this thread: