Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#15
♨️♨️♨️♨️♨️

♨️தெய்வா வேகமாகச் சென்று
 தனது மகள் பொம்மியை
அணைத்துக் கொண்டு "
காலைல நீ சொன்ன மாதிரியே நடந்துடுச்சே புள்ள ...
 உன் வாய்க்கு சர்கரை தான் போடனும் "
 என்றாள் ....

♨️


" நம்ம இசக்கியோட மவளையாச் சொல்ற?
அந்தக்குட்டி சின்னதுலயே
அம்பூட்டு அழகா இருக்குமே பூபதி?
இப்போ இன்னும் அழகாத்தான் இருப்பா ... "
என்ற சரசூ பாட்டி ....

♨️

 " நாம ஊர் ஊரா பொண்ணு தேடி அலைஞ்சோம் ...
இப்பப்பாரு
நம்ம உறவு முறைலயே பொண்ணு கிடைச்சிருச்சு
" என்றார்

♨️


அன்று இரவிலிருந்தே
 அந்த வீட்டிற்குக் கல்யாணக் கலை கட்டிவிட்டது ...
 மறுநாள் காலை இசக்கியின்
வீட்டிற்கு பெண் கேட்டு செல்வதற்காக
இரவிலிருந்தே தயாரானார்கள் ...

♨️


இளையவன்
சத்யனுக்கு தகவல் சொல்வதற்காக
அவனது நம்பருக்கு அழைத்தார் பூபதி ...
பிஸி என்று வந்தது ...
 சற்று பொறுத்து மீண்டும் அழைத்தார் ...
பிஸி என்றே வந்தது ...
" யார் கூடவோ முக்கியமா பேசிக்கிட்டு இருக்காப்லருக்கு .... கொஞ்ச நேரம் கழிச்சு பேசலாம்
 " என்று தனக்குத் தானே கூறிக்கொண்டு சாப்பிட சென்றார் ...

♨️♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 25-04-2022, 12:38 AM



Users browsing this thread: 1 Guest(s)