Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#10
♨️♨️♨️


" இனியாவது நாம மறுபடி ஒன்னு மண்ணா இருக்கனும் மச்சான் " என்ற பூபதி தன் மகனை தோளோடு அணைத்து "
 உனக்குதான் தெரியுமே ?
இவன் மூத்தவன் முத்துபாண்டி ..
. படிச்சிட்டு எங்கூட விவசாயத்தை
பார்த்துக்கிறான் ....
இளையவன் சத்யன் இஞ்சினியருக்குப் படிச்சிட்டுஇன்னும் ஏதோ படிக்கனும்னு வடநாட்டுல போய் படிச்சுக்கிட்டு இருக்கான் ... கடைசி மக பொம்மி காலேசுக்கு போகுது ...
 அப்புறம்
அம்மாவும் உன் தங்கச்சி தெய்வாவும் நல்லாருக்காங்க ..
. கடவுள்
புண்ணியத்துல ஒரு குறையும் இல்லாம நல்லாருக்கோம் மச்சான் " என்றார் பூபதி ....

♨️♨️♨️

சந்தோஷமாக நண்பனின் கையைப் பிடித்துக் கொண்ட இசக்கி " உம் மனசுக்கு எப்பவுமே நல்லதே நடக்கும்வே....
 ஒரு குறையும் வராது
" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டு முத்துவைப் பார்தவர் "பெரிய மாப்ளைக்கு எந்தூர்ல பொண்ணெடுத்திருக்க பூபதி ?" என்று கேட்க...

♨️♨️♨️

உடனே முகம் வாடிய பூபதி
" எங்க மச்சான் ?
வயசு இருபத்தொம்போது ஆகுது ..
. ரெண்டு வருஷமா பொண்ணு தேடுறோம் ...
எதுவுமே சரியா அமையலை ....
ஏதாவது ஒரு காரணத்தால தட்டிப் போய்கிட்டே இருக்கு " என்று வேதனையாகக் கூறினார் ...

♨️♨️♨️

யோசனையுடன் பூபதியின் முகத்தைப் பார்த்த இசக்கி தனது பார்வையை முத்துவின் பக்கமாக மாற்றினார் .....
 ஏற இறங்க அவனைப் பார்த்தவர் "
ஏன் மாப்ள இவனுக்கென்னய்யா குறைச்சல்?
நம்ம பாண்டி முனி கணக்கா கத்தை மீசையோட கம்பீரமா இருக்கான் ...
இவனுக்கா பொண்ணு அமையலை?"
என்று கேட்டவர் பூபதியிடம் நேராகத் திரும்பினார் ...

♨️♨️♨️

" சரி மாப்ள ...
என்கிட்ட எப்பவுமே ஒரே பேச்சு தான் ...
எந்த நிலைமைலயும் பேச்சு மாற மாட்டேன்னு
ஒமக்கேத் தெரியும் ...
எம் மவ நாச்சியாவ
உன் மவனுக்கு கல்யாணம் செய்யது தர
எனக்கு சம்மதம்வே ...
 உமக்கு சரின்னு தோனுச்சினா
உம் வீட்டு ஆளுகளை கூட்டிக் கிட்டு
 நாளைக்கே என் வீட்டுக்கு பொண்ணு கேட்டு வா மாப்ள
 " என்றார் ..

♨️♨️♨️

தகப்பனும் மகனும் திகைப்புடன் இசக்கியைப் பார்க்க .... "
என்ன மாப்ள
 அப்புடி பாக்குறவே ?
எம் மவ ஒன்னும் லேசுப்பட்டவ இல்லவே ?
 நம்ம ஊரு திருவிழாவில
 ஊர் சுத்தி வர்ற அம்மன் சிலையாட்டம் இருப்பா ....
சுத்துப்பட்டு அத்தனை ஊர்லருந்தும் பொண்ணு கேட்டு வந்து என் மகளுக்குப் பொருத்தமில்லைனு
திருப்பி அனுப்பிட்டேன் ....
இப்பவும் உம் மவனைப் பத்தி எனக்கு கவலையில்லை மாப்ள... உம்மைப் பத்தித் தெரியும் ...


♨️♨️♨️

என் தங்கச்சி தெய்வநாயகி பத்தியும் தெரியும் .... உங்களுக்காவே
 என் பொண்ணைக் கொடுக்கத் தயார் ...
" என்றார் சவாலாக ....

♨️♨️♨️

திகைப்பு விலகாமல் நின்றிருந்த அப்பாவின் தோளில் கை வைத்து அசைத்து
" அவரே பேசிட்டு இருக்கார்ப்பா ...
நீங்க ஏதாவது பேசுங்க
" என்று கிசுகிசுத்தான் முத்து ...


நினைவு
வந்தவர் போல் தலையை உலுக்கிக் கொண்ட பூபதி "
 யோவ் மச்சான் ...
நீ சொல்றதென்ன?...
இப்ப நான் சொல்றேன் கேட்டுக்க.....
உம் மவ அழகா இருந்தாலும் சரி அசிங்கமா இருந்தாலும் சரிதான் ... உனக்காகவும்
என் தங்கச்சி நீலவேணிக்காகவும் உன் மவளை என் மவனுக்கு கட்டுவேன் மச்சான் ....
ரெண்டு தலைமுறைக்கு முன்னாடி விட்டுப் போன நம்ம குடும்ப பந்தம் இந்த தலைமுறையிலயாவது சம்மந்தமாகட்டும் " என்றார் சந்தோஷமாக ...

♨️♨️♨️




நெல் வியாபரத்துக்கு சந்தைக்கு வந்த இடத்தில் 
பழைய நட்பு இருவரையும் சம்மந்தியாக்கி விட .....
உடனடி மாப்பிள்ளையான முத்துபாண்டிக்கு
தனது
வருங்கால மனைவி நாச்சியா.
எப்படியிருப்பாளோ
என்ற கனவு அந்த நிமிடமே தொடங்கிவிட்டது ...

♨️♨️♨️

" ஏலேய் மவனே முத்துபாண்டி ...
மாமன் கேட்ட விலைக்கே நெல்லை ஏத்தியனுப்புடா "
 என்று பூபதி தன் மகனுக்கு உத்தரவிட .... "
ஆங் ...
அதாம்வே நடக்காது ...
எம் மருமவன் சொன்ன விலைக்குதான்
நெல்லை வாங்குவேன் "
என்று பிடிவாதம் செய்தார் இசக்கியான் ...

♨️♨️♨️

பார்க்க முரட்டுத்தனமாகத்
தெரிந்தாலும்
பாசம்
காட்டுவதில் குழந்தையைப் போல் தெரிந்தார்
இசக்கியான் ...


♨️♨️♨️

.நீண்ட
நாள் கழித்து
தனது
பால்ய நண்பனை கண்டுவிட்ட
 சந்தோஷம் மட்டுமே மிச்சமிருக்க
 தனது செல்ல மகள் நாச்சியா
 முத்துபாண்டிக்குத்
தான் என்று முடிவே செய்து விட்டார் ...

♨️♨️♨️♨️♨️ ♨️♨️♨️♨️மீண்டும்♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️
♨️♨️♨️♨️♨️ அடுத்த அப்டேட் 25ஆம் தேதி ♨️சந்திப்போம்♨️♨️♨️♨️♨️


 இது என் நண்பன்

♨️வினோத்தின் கதை♨️

 His mail id.

 ♨️Vinothyoung55k;♨️

♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
[+] 1 user Likes Iamzinu's post
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 23-04-2022, 04:10 PM



Users browsing this thread: