Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#9
Photo 
♨️♨️♨️

இப்படி படிப்பே வாழ்க்கையென்று இருக்கும் சத்யனுக்கும்
காதல் வந்தது ....
ME இரண்டாம் ஆண்டு படிக்கும் போது முதலாமாண்டு படித்த நேத்ராவின் மீது வந்த நேசம்
இன்று வரை நிறம் மாறாமல் நேசிக்கப்படுகிறது .....
நேத்ரா சத்யனின் அ
ழகில் கம்பீரத்தில் படிப்பில் வீழ்ந்து
இவனை நேசிக்கவில்லை என்றால்
தான் ஆச்சரியம்....

♨️♨️♨️


வடநாட்டு குடும்பத்துப் பெண்ணான
 பால் நிறத்தில் பதுமை போன்ற உடமைப்பிலும்
கராராகப் பேசும் குணத்திலும்

சத்யனுக்கு மிகுந்த காதல் ...
 இந்த இரண்டு வருடத்தில்
இவர்கள் அதிகமாக நேரில் சந்தித்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் மெசேஜ்கள் ,
 சாட்கள் மூலமாக மிக நெருக்கமாகவே இருந்தனர்...
 நேத்ராவின்
யோசனையின் பேரில் தான் சத்யன் npti
தேர்வு எழுதியதே ...
சத்யனுக்கு ஆர்வம் இருந்தது என்றாலும்
 இந்த படிப்பின் மூலம் அவனுக்கு
 நல்லதொரு எதிர்காலம் அமைந்தால் அதற்கு நேத்ராவின் வழி நடத்தல் தான் காரணம் ..

...
♨️♨️♨️


சத்யனுக்கு அடுத்துக் கடைக்குட்டியாக
 வந்த பொம்மி ..... ச
த்யனை விட எட்டு வயது இளையவள் ...
குலதெய்வத்தின் பெயரை வைத்துவிட்டு
அதைச் சொல்லி அழைக்கும் போதெல்லாம் "
பேரா இது ?
நல்லாவேயில்லை "
என்று கைகால்களை உதறிக்கொண்டு அழும் குட்டி தேவதை .... கல்லூரியில்
 இரண்டாம் ஆண்டு படித்து வரும் பொம்மிக்கும் சின்ன அண்ணன் சத்யன் என்றால் உயிர் ....

♨️♨️♨️


இப்படி மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருந்தாலும் சமீபகாலமாக 
வர்களுக்கும் ஒரு வருத்தம் இருந்து வந்தது ...
அது முத்துப்பாண்டியின் திருமணம் தான் ....
முப்பது வயதை நெருங்கும் நிலையில் பார்க்கும் இடமெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தால் தட்டிப் போனது ...
ஜாதகம் பொருந்தினால் பெண் பொருத்தமில்லை ... ...
பெண் பொருத்தமாக இருந்தால்
குடும்பம் சரியில்லை
என்று
கடந்த இரண்டு வருடமாக
தட்டிப் போய்க்கொண்டேயிருந்தது ...
முத்துவுக்கான பெண் எங்கிருக்கிறாளோ
என்ற எதிர்பார்ப்பு
எகிறிக் கொண்டே போனது ...

♨️♨️♨️


அன்றும் அப்படித்தான் ... ா
லையிலேயே பூபதியின் அம்மா தொடங்கிவிட்டாள் ....
 கையுரலில் வெற்றிலை பாக்கைப் போட்டு இடித்துக்கொண்டே " இவன் வயசில
உனக்கு மூணு புள்ளைக பொறந்து ஊருக்கே
பெரியமனுசன் ஆகிட்ட ...
இந்த பயலுக்கு இன்னும் எவளும் சிக்கலை....
கருமத்துல காதலிச்சாவது எவளையாவது இழுத்துட்டு வருவான்னு பார்த்தா
அதுவும் செய்ய மாட்றான்...

♨️♨️♨️

இவனுக்கு எப்ப கண்ணாலம் முடிஞ்சி
என் செல்லப் பேரன் சத்யனுக்கு எப்ப கண்ணாலம் ஆவுறது ... அந்த சந்தனக் கருப்பு தான்
இவனுக்கு ஒரு வழி சொல்லனும் "
 என்று புலம்பினாள் பாட்டி...

♨️♨️♨️


கல்லூரிக்கு கிளம்பும் அவசரத்தில்
 தெய்வானை  அவசரமாக இட்லியை ஊட்டி விட புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஓடியபடி
 " ஏ.... அப்பத்தா ...
சந்தன கருப்பு என்ன கல்யாண புரோக்கரா?
அவரு சாமி ....
இதுக்கெல்லாம் கூப்ட்டா வரமாட்டாரு ....
நீ கவலையேப்படாத அப்பத்தா .
.. இன்னைக்கு அப்பா பணையூர் சந்தைக்கு போறாருல்ல... நிச்சயம் ஏதாவது பொண்ணை பார்த்துட்டு வருவாரு "
என்றாள் பொம்மி ...

♨️♨️♨️

" அடிப்பாவி சந்தைல பிடிக்க இதென்ன
ஆடா? மாடா ?
கல்யாணத்துக்குப் பொண்ணு பாக்குறது ...
. நிறுத்தி நிதானமாத்தான் பார்க்கனும் "
என்று தெய்வா தன் மகளுக்கு சொல்ல.... " ஆமா இன்னும் நிதானமா பாருங்க ...
அதுக்குள்ள நான் கிழவியாகிடுவேன் ...
இவருக்கு எப்ப கல்யாணம்
ஆகி என் ரூட் எப்ப க்ளியர் ஆகிறது ?"
 என்று போலியான வருத்தத்துடன் புலம்பியபடி
தனது ஸ்கூட்டியில் கல்லூரிக்குப்
புறப்பட்டாள் பொம்மி ...

♨️♨️♨️


பூபதியும் முத்துவும் மூன்று டிராகடர்களில் ெ
ல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பணையூர் சந்தைக்கு வந்திருந்தனர் ....
நெல் சந்தை அது ....
ஆங்காங்க நெல் மூட்டைகள்
அடுக்கப்பட்டு சாம்பிள் நெல்மணிகளை ஒரு பிளாஸ்டிக் கப்பில் எடுத்து வைத்திருந்தனர் ...
வாங்கும் வியாபாரிகள்
நெல்லின் தரத்தைப் பார்த்து விலையை நிர்ணயம் செய்தனர் ...

வியாபாரிகளின்
போட்டி அதிகமாக இருந்தால் சில நெல் ரகங்கள்
ஏலமும் விடப்பட்டது ...


♨️♨️♨️

வழக்கமான தங்களின் இடத்தில் முட்டைகளை இறக்கிவிட்டு குத்தூசியால் குத்தி நெல்லை பிளாஸ்டிக் கப்பில் எடுத்து மூட்டையின் மீது சாம்பிள் வைத்த முத்து "
அப்பா,, ...
நெல்லு நல்ல ரகம் ...
போட்டி அதிகமாகி
 நம்மது இன்னைக்கு ஏலத்துல தான் போய் முடியும் "
என்றான் ...

♨️♨️♨️

" ம்ம் நானும் அதான் நினைக்கேன்டா மவனே ....
ஏவாரி எவன் வர்றான்னு பார்க்கலாம் "
என்று கூறிவிட்டு
ஒரு மூட்டையின் மீது ஏறியமர்ந்தார் ....

♨️♨️♨️

யார் யாரோ வந்து பார்த்துவிட்டு பேரம் பேசினார்கள் .. பேரம் படியாமல் சிலர் சென்றுவிட ...
சிலர் நெல்லின் தரத்தை நினைத்து
அங்கேயே நின்றிருந்தார்கள் ...

♨️♨️♨️

அப்போது
 " ஏம்ப்பா நாங்க ஒன்னும் புதுசா ஏவாரத்துக்கு வரலை ..
. எங்க பாட்டன் பூட்டன் காலத்துலருந்து
நெல்லு ஏவாரம் தாம்யா பார்க்குறவ......
நீ என்னமோ இம்புட்டு விலை சொல்லுற ...
ம்ஹூம் இது படியாதுவே
" என்ற கரகரத்த குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார்
பூபதி ...

♨️♨️♨️

வெள்ளை வேட்டி சட்டையில் கக்கத்தில் வைத்திருக்கும்
லெதர் பையோடு யாரோ
ஒரு நபர் முத்துவிடம் விவாதம்
பண்ணிக்கொண்டிருக்க ....
மகன் கோபக்காரன் ..
ஏதாவது தகராறில் முடிந்துவிடப் போகிறது
என்று எண்ணி
வேகமாக அங்கே வந்தார் ...

" இதான் விலை ...
சவுரியப்பட்டா வாங்குங்க ..
இல்லேன்னா வேற பட்டரையைப் பாருங்க
" கராராக பேசிக் கொண்டிருந்தான் முத்து ...

♨️♨️♨️

மகனின் தோளில் கைவைத்து
 சமாதானமாகத் தட்டியவர் .... "
விலை படியலைன்னா விடுமய்யா
" என்று வந்தவரைப் பார்த்துக் கூறினார் ...

♨️♨️♨️

கோபமாக ஏதோ சொல்வதற்காக நிமிர்ந்தவர்
பூபதியைப் பார்த்ததும்
புருவங்கள் சுருங்க உற்றுப் பார்த்தார் வியாபாரி ....
அவர் யோசிப்பதற்குள் பூபதி கண்டுகொள்ள "
ஏலேய் மச்சான் எசக்கியாவே நீ ?
ஏன்னமய்யா இப்புடி பெருத்துப் போயிட்டீரு ?"
என்று எதிரில் இருந்தவரைப் பார்த்துக் கேட்க ....


" ஏவே பூபதி..... "
என்று வாய் பிளந்த வியாபாரி "
 யோவ் மாப்ள ....
 உம்மைப் பார்த்து எத்தனை வருஷமாச்சுவே "
என்றபடி பூபதியை இழுத்து அணைத்துக்கொள்ள ...
இவ்வளவு நேரம் பேரம் பேசி தகராறு செய்தவர்

♨️♨️♨️

இப்போது நட்பான நிகழ்வை காமெடியாக வேடிக்கைப் பார்த்தான் முத்து ...

♨️♨️♨️

மகனிடம் திரும்பிய பூபதி
 " ஏவே முத்து .... யாருன்னு தெரியலையாலே ?
நம்ம இசக்கியான் மாமாடா ....
மேலமடை மாமன்டா ....
சின்னப்புள்ளை பள்ளிக்கூட லீவுக்கு மாமா வீட்டுக்கு தான் போவேன்னு அழுது அடம்பிடிப்பயே முத்து ?
 அந்த மாமா தான்டா "
என்று சொல்லிக்கொண்டே போனார் ...

♨️♨️♨️

எப்படி ஞாபகப்படுத்தினாலும்
 இசக்கியின் முகம் ஞாபகம் வராமல் தலையை
சொரிந்து அசடு வழிந்த முத்து "
 வணக்கம் மாமா "
என்று ஒரு கும்பிடு வைத்தான்...

♨️♨️♨️


" நம்ம முத்துபாண்டி மாப்ள தானே....
என்னமா வளர்ந்துன்டான்யா பய.... "
என்று முத்துவையும் இழுத்து அணைக்க ...
சங்கடமாக நெளிந்தான் முத்து ...

♨️♨️

" சரி உன்னைப் பத்தி சொல்லு மச்சான் .....
பார்த்து பதினைஞ்சு வருஷத்துக்கு மேல ஆச்சு ...
ஆத்தா எப்படியிருக்கு?
எம் தங்கச்சி நீலவேணி எப்படியிருக்கா ?"
என்று பூபதி கேட்டதும் ...

♨️♨️♨️




" ஆத்தா செத்து அஞ்சாறு வருஷமாச்சு மாப்ள ...
 உன் தங்கச்சிக்கென்ன நகையும் நட்டுமா சௌக்கியமா இருக்கா ... பெரியவன்
விநாயகம் படிச்சு முடிச்சிட்டு ரைஸ்மில்லை பார்த்துக்கிறான் ... சின்னவ
நாச்சியா படிச்சு முடிச்சிட்டு வீட்டுல தான் இருக்கா ...
இப்போ மாப்பிள்ளைத் தேடிக்கிட்டு இருக்கேன் "
என்று தனது குடும்ப விபரத்தை சுருக்கமாகச் சொன்னார் இசக்கியான் ...

♨️♨️♨️

 ஆத்தா சாவுக்குக் கூட தகவல் சொல்லலையே மச்சான் "
என்று உண்மையான வருத்தத்துடன் கூறியவரின்
தோளில் தட்டிய இசக்கி "
எங்க மாப்ள...
நமக்கு பந்தம் விட்டுப் போயி பல வருஷம் ஆச்சு ....
நானும்
என் மாமியார் ஊரு பொள்ளிச்சி பக்கம் பொழைக்கப் போய் அங்க வியாபாரம் சரியா வராம மறுபடியும்
சொந்த ஊருக்கே வந்துட்டேன் ...


♨️♨️♨️

இதுல நம்ம பழைய சினேகிதம் எல்லாம் சுத்தமா விட்டுபோச்சு மாப்ள...
 யாரு எங்க இருக்காகன்னே
தெரியாம எந்த தகவலும் சொல்லிக்க முடியலை
" என்றார் வருத்தமாக...
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 23-04-2022, 03:59 PM



Users browsing this thread: