Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#7
♨️♨️♨️

அப்பாவின் வார்த்தையை மதிக்கும் அன்பு மகன் ....
 
BE மெக்கானிக்கல் முடித்து
அதிகப்படி தகுதியாக
 ME முடித்து
பெரியதொரு எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருந்து ....
ME ஒரு படிப்பா என்பது போல் அலட்சியமாக பார்க்கப்பட்டதும் இன்ஜினியரிங் படிப்பு எவ்வளவு தாழ்ந்து விட்டது
என்று புரிய...
வேறு வழியின்றி
ஒரு வருடம்
சென்னையில் ஒரு கார் கம்பெணியில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்தவனை
உடன் படித்தவர்களே
கேலி செய்யவும் வேலையை உதறிவிட்டு மீண்டும்
படிக்க முடிவு செய்தான் ...


♨️♨️♨️

மின் உற்பத்தியிலும் எலக்ட்ரிக்கல் வேலையிலும்
அவனுகிருந்த ஆர்வம் காரணமாக
“union ministry of power”
என்ற மத்திய சர்க்காரின் நேரடி பார்வையின்
 கீழ் செயல்படும்
national power training institute (npti)
என்ற இன்ஸ்டியூட்டால் நடத்தப்படும்
Post graduate in thermal power plant engineering
 என்ற கோர்ஸில் சேருவதற்கான பரிச்சை எழுதினான் ....

♨️♨️♨️

இந்தியா முழுக்க ஏழு இடங்களில் மட்டுமே நடத்தப்படும்
 இந்த தேர்வில் மொத்தமாக முன்னூற்றி இருபது இடங்களே இருக்கும் ...
தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களில் முப்பத்தியிரண்டாவது மாணவனாக
தேர்ந்தெடுக்கப்பட்டு
 இப்போது பஞ்சாப் மாநிலம் நங்கலில் இருக்கும் இன்ஸ்டியூட்டில் படித்து வருகிறான் ....
 இந்த ஒரு வருடப் படிப்பிற்காக கிட்டத்தட்ட
 நான்கு லட்சம் வரை செலவு செய்தாலும் படித்து முடித்து வெளியே வந்ததும் சிறப்பான எதிர்காலமுண்டு .....

♨️♨️♨️
[+] 1 user Likes Iamzinu's post
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 23-04-2022, 03:44 PM



Users browsing this thread: