Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#6
♨️♨️♨️அதேபோல்
 1965 ல் அந்த ஊரில் முதன் முதலாக அம்பாஸிடர் கார் வாங்கிய பெருமையும் இந்த மச்சுவீட்டுக்காரர்களையே சேரும் ....
அந்த காரை இன்னமும் விற்காமல் பாதுகாத்து வருவதும் அவர்களுக்கு சிறப்பு தான் ....

♨️♨️♨️

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மச்சு வீட்டுக்காரர் தான் பூபதிபாண்டி ...
அவர் மனைவி தெய்வநாயகி ..
மூத்த மகன் முத்துபாண்டி
இளையவன் சத்யபாண்டி
கடைக்குட்டித் தங்கை பொம்மி
இவர்கள்
அல்லாது
மூத்தகுடிமகளாகபூபதியின் அம்மா சரஸ்வதி
என்ற
சரசூ ....

♨️♨️♨️


அளவான குடும்பம் மட்டுமில்லாமல்
அழகான குடும்பமும் கூட.....
 பூபதியின் நேர்மையும் நாணயமும்
ஊருக்குள்
இன்னும் அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து
பெரிய மனிதராக நடமாட விட்டிருந்தது ....
தனது பிள்ளைகளின்
மீது அலாதியான அன்பு வைத்திருப்பவர் ....

♨️♨️♨️

அதிலும் 
ளைய மகன் சத்யனின் பெயரைச் சொன்னாலே
பூரிப்பில் முகம் மலர்ந்துவிடுவார் ....
இளைய மகன் மீதும் அவனது படிப்பின் மீதும் அதிக நம்பிக்கை வைத்திருப்பவர் ....
அந்த நம்பிக்கையில் அவனது படிப்பிற்காக
இவர் செலவு செய்த லட்சங்கள் ஏராளம் ...

♨️♨️♨️


பூபதியின் மனைவி தெய்வா .....
திரு மணமாகி முப்பத்தைந்து வருடம் கழிந்தும்
இன்றும் மாமியார் சரசூவுக்கு
பயந்து நடக்கும்
நல்ல குடும்பத் தலைவி ...
என்ன...
கொஞ்சம் இளகிய மனசு ...
அந்த
இளகிய மனதே மூத்தவன் முத்துபாண்டி
ஊதாரியாவதற்கு
உறுதுணையாகப் போய்விட்டது .....


முத்துபாண்டி ,,
வயது வருமாண்டு முப்பதைத் தொட்டுவிடும் .....
பெயருகேற்ற கம்பீரமானவன் ...
இவன் தவறுகள் செய்வான்...
அதைத் தன்னம்பிக்கையோடு செய்வான் ....
கல்லூரிப் படிப்பில் கால் வைத்த இருபதாவது வயதிலேயே
மது அறிமுகமாகிவிட படிப்பு பாதியில் நின்று போனது ...
 வீட்டிலிருந்த பணப் புழக்கமும்
அவனுக்கு வசதியாகிப் போனது ....

♨️♨️♨️

அப்பாவுக்கு விவசாயத்தில் உதவுகிறேன்
என்று கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுப்புகளை தனதாக்கிக் கொண்டவன் ...
குடி ஒன்றைத் தவிர மற்றபடி நல்ல மகன் ...
தம்பிக்கும் தங்கைக்கும் நல்ல அண்ணன் ....

♨️♨️♨️

இளைவன் சத்யபாண்டி ....
வயது இருபத்தியேழு .....
கவனக்குறைவாகக் கூட பாண்டி என்ற குடும்பப் பெயரை சேர்த்துக் கொள்ளாமல்
சத்யன் என்ற பெயரை மட்டுமே ஒத்துக்கொள்ளும்
நாகரீக இளைஞன் ....
 கல்லூரி படிப்பிலிருந்தே
சிறந்த கால்பந்தாட்ட வீரன் ....
விளையாட்டு அவனது உடலையும் மனதையும் மெருகேற்றியிருக்க கருப்பும் அல்லாது வெளுப்பும்
அல்லாது கோதுமை நிறத்தில்
நல்ல அழகனும் கூட ....
 குடும்பத்தின் மீது பாசமானவன்

♨️♨️♨️
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 23-04-2022, 03:40 PM



Users browsing this thread: