Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#4
ஏம்வே மூக்கையா,,
ஆடெல்லாம் புழுக்கையை இங்கயே போட்டுட்டா
வயக்காட்டுல ஆடு கடை மடக்குறப்ப என்னத்தைவே போடும் ?" வயலுக்காட்டுக்கு எருவாக ஆடுகளின்
 புழுக்கைக்கு முன் பணம் கொடுத்தவரின் கவலை
 இது ...

♨️♨️♨️

" அதுக்கு நா என்னா சாமி செய்ய முடியும் ? 
றுபடியும் தீனி வச்சா புழுக்கைப் போடும் சாமி "
ஆட்டுக்காரனின் பதில் சமாதானம் இது ....



♨️♨️♨️


கட்டாங்கிச் சேலை கட்டி ஒரு கையில் வெங்கலத் தூக்கில் கஞ்சியும்
மறு கையில் சலங்கைக் கட்டிய கொம்புமாக வாத்துகளை ஓட்டிச்செல்லும் வாத்துகாரியின்
வெற்றிலைச் சிவப்பேரிய உதடுகளில் புத்தம் புதிய சினிமாப் பாடல் முனுமுனுப்பாக வந்து விழுந்தது ....

♨️♨️♨️

" ஓய் வாத்து ,, நடவு போட்ட காட்டுல வாத்தையெல்லாம் எறக்கிப்புடாத ..... அ
ப்புறம் எல்லாத்தையும் பிடிச்சு அவிச்சுப்புடுவேன் "
என்ற நடவுக்கழனியின் சொந்தகாரருக்கு
இடுப்பளவு வளைந்து ஒரு கும்பிடுப் போட்டு " நான் கம்மா பக்கம் போய் மேய்க்கப் போறேனுங்கோவ்
" என்றாள் வாத்துக்காரி ...

♨️♨️♨️

இப்படிப் பேச்சுப் பேச்சாக இருந்தாலும் வேலைக்கு கவணமாக சென்று கொண்டிருந்த கிராம மக்கள் ...

♨️♨️♨️


திருநெல்வேலி மாவட்டம்

♨️♨️♨️

 கள்ளிடைக்குறிச்சி ஊராட்சியை

♨️♨️ ♨️

சேர்ந்த சேந்தம்பட்டி கிராமம்
தான் இத்தனை சிறப்புகளைக் கொண்டது


♨️♨️♨️

நகரத்து நாகரீகத்தில்
 கால் வைத்துள்ள
ஒரு நடுத்தர கிராமம் ....
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஈர காற்றால்
எப்போதுமே பசுமையுடன் காணப்படும் கிராமத்தில்
 தாமிரபரணி ஆறும்
தன் பங்கிற்கு செழிப்பை வாரி வழங்கியிருந்தது ....
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 23-04-2022, 03:27 PM



Users browsing this thread: 1 Guest(s)