23-04-2022, 03:21 PM
♨️♨️♨️
அத்தனை நேரம் அமைதியாக
உறங்கிக் கிடந்த வானத்தை அசுரக் கூட்டம் வந்து அசைத்து விட்டது போல் மேகங்கள் சிதறியோட..
. செங்குருதி சிந்தியதுப் போன்று பரபரவென பகலவன்
வெளி வரும்
இந்தக் காலைப் பொழுதிற்கு மட்டும் எத்தனை விதமான முன்னறிவிப்புகள்?
♨️♨️♨️
தண்ணீர் குடம் சுமந்து இடை அசைய ...
குடத்து நீர் தழும்ப...
கால் சலங்கை குலுங்க தழுக்கி நடக்கும் பெண்கள்....
கழுத்து மணியசைந்து ஓசையெழுப்ப கன்றினைத் தேடும் காரம்பசுவின்
" ம்மா........"
என்ற அழைப்பு ...
♨️♨️♨️
கால் குளம்பு சப்தமிட
காலை உழவுக்குச் செல்லும்
காளைகளின் குளம்படி ஓசை .
..கையில் சாட்டைக் கொம்புடன்
அக்காளைகளை விரட்டிச் செல்லும்
உழவனின் ட்டுர் ட்டுர் என்ற குரலோசை ....
♨️♨️♨️
தெருக்கோடி விநாயகரின்
தலையில் ஒரு குடத்து நீரை கொட்டி
அவசரமாக மந்திரத்தைச் சொல்லிவிட்டு
அடுத்த கோயிலை நோக்கி ஓடும் கற்றை
குடுமி வைத்த ஒற்றை பிராமணனின் உதடுகள் ஓயாமல் கூறும் மந்திர சொற்களின் ஒலி....
♨️♨️♨️
அந்த ஒற்றை ி
ராமணன் முன்பு சென்று விடக் கூடாதென்று
கவணமாக ஒதுங்கிச் செல்லும் ஊர்க்காரர்கள் ..
. பால்காரரின் சைக்கிள் மணியோசை ...
.. பால் வாங்க வரும்
பெண்களின்
கை வளையோசை என வித விதமான ஒலிகள் ஒலித்து விடிந்துவிட்டதை அடையாளம் கூறின ....
♨️♨️♨️
" ஏம்வே மூக்கையா,,
ஆடெல்லாம் புழுக்கையை
இங்கயே போட்டுட்டா வயக்காட்டுல
ஆடு கடை மடக்குறப்ப என்னத்தைவே போடும் ?" வயலுக்காட்டுக்கு
எருவாக ஆடுகளின் புழுக்கைக்கு முன் பணம் கொடுத்தவரின் கவலை இது ...