21-05-2019, 01:25 PM
ஒரு வாரம் கழித்து ஊர்மன்றத்தில் நானும், எனது கபடி குழுவும் உள்ள போட்டோவை வைத்தார்கள்.நடுவில் நான் கோப்பையுடன் நின்று இருந்த்தேன். அதற்கு முழுகாரணமும் ப்ரியாதான்..இப்போது அவள் மீண்டும் பாட்டிவீட்டுக்குச் சென்று விட்டாள், ஸ்கூல் செல்லதான்.
இந்த வருடம் அவள் 10வது வகுப்பு பொதுத்தேர்வு எழுதப் போகிறாள்.10வது வகுப்பு தேர்வு அட்டவனையை நியுஸ் பேப்பரில் பார்த்தவுடன் வெட்டி எடுத்து எனது கல்லூரி நோட்டில் ஒட்டி வைத்துக்கொண்டேன். எனக்கு 4 வது செமஸ்டர் முடிவதற்கும், அவள்து தேர்வு முடிவதற்க்கும் சரியாக இருந்தது.
இந்த முறை அவள் வந்தவுடன் எனது காதலை தெரிவித்துவிடும் முடிவில் இருந்தேன்.கொஞ்சம் பயமாகதான் இருந்தது...என்ன செய்ய..விழுந்து விழுந்து காதலித்து கடைசியில் அவள் உங்களை “அண்ணன்” என்ற முறையில்தான் பழகினேன் என்று சொல்லி விட்டால்......
அதுசரி அவள் என் காதலை ஏற்றுக்கொள்வாளா என்ற சந்தேகமும் எனக்கு வந்தது. அவள் தேவதையைப் போல் இருந்தாள்.
என்னை பற்றி கொஞ்சம் சொல்லி கொள்கிறென்.[ சுமார் 6 அடி உயரத்தில் சும்மா கோதுமை கலரில், சல்மான் கான் போலவோ இல்லை சின்ன வயது கமலஹாசன் போல இருப்பேன் என்று சொன்னால்...அதுதான் இந்த இணையத்தில் இருக்கும் பபெரிய கதையாக இருக்கும்..
நான் 51/2 அடி உயரம், கருப்புக்கும் மாநிறத்த்க்கும் நடுவில்[ஹி ஹி... கருப்பதான்..] கொஞசம் ஒல்லியாக இருப்பேன்..ஆனால் மன தைரியம் கொஞசம் அதிகம்தான்..அதனால்தான் என்னவொ ப்ரியாவை காதலிக்கிறேன் என்று சொல்லுகிறேன்.
இன்னும் 2 நாளில் 10வது வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து விடும்.. அவளும் வந்து விடுவாள்.....
நான் பத்தாவது படிக்கும்போது கூட பரீட்சை அட்டவணையை நியூஸ்பேப்பரிலிருந்து எடுத்து நோட்புக்கில் ஓட்டிவைக்கவில்லை. ஆனால் இப்போது அவளுக்காக , அவள் வருகைக்காக இதை ஓட்டி வைத்து நாளை எண்ணிக்கொண்டு இருந்தேன்.. இன்னும் 2 நாள்கள் மட்டும் இருந்தது அவள் பரீட்சை முடிய,அந்த நாள் வியாழக்கிழமையாக வந்தது. பப்ரியாவின் அப்பா அனேகமாக சனிக்கிழமை கடைக்கு லீவு போட்டு அடுத்த நாள், அவளை கூப்பிட்டு வருவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் சனிகிழமை லீவு போடவில்லை.ஏனென்று எனக்கு காரணம் தெரியவில்லை.
அடுத்தநாள் மதியம் அவர் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்,நான் அவரிடம் சென்று “என்னஙக மாமா இன்னைக்கு லீவா? என்று கேட்டேன்.அவர் “இல்லை ராஜ் “ என்று சொன்னார்.எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
அடுத்த நாளும் அவர் லீவு போடவில்லை. எனக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல இருந்தது.அடுத்தநாளும் நான் முன்புகேட்டமாதிரியெ “என்னஙக மாமா இன்னைக்காவது லீவா?” என்று கேட்டேன்.”இல்லையே மாப்பிள்ளை ,, ஏன் என்ன விசயம்” என்றார்.நான் ஒன்றுமில்லை சும்மாதான் கேட்டேன்” என்றேன். “பார்த்தியாடி மாப்பிள்ளையை என்மேல் எவ்வளவு அக்கறை என்று? “ என்று ப்ரிய்யாவின் அம்மாவை பார்த்து சொன்னார்.
“ அது எல்லாம் ஒன்றுமில்லை..நீங்கள் லீவு போட்டு எப்ப ப்ரியாவை கூப்பிட்டுகிட்டு வருவிஙக “என்று கேட்க விரும்புவதைதான் அப்படி கேட்கிறாப்ல.. என்று சொன்ன ப்ரியாவின் அம்மா” சொந்த ஊரில்,பக்கத்து வீட்டில் நான் இருந்த்தால் உங்களுக்கு என்னை காதலிக்க சிரமமே இல்லாம போச்சு, ஆனா ராஜுக்கு அப்படியா? என்ன ராஜ்? என்றாள் என்னை பார்த்து.....எனக்கு எந்த பக்கம் ஒடுவது என்றே தெரியாமல் நின்றுக்கொண்டு இருந்தேன்
ஒ/ அப்படியா விசயம்? அவள் என் தம்பி விட்டிற்கு பெங்களுர் போய் இருக்காளே.. இங்க வர இன்னும் பதினைந்து நாளாவது ஆகுமே ராஜ்’ என்றார்..எனக்கு என்னவோ ஆயிற்று.” இல்லை அவள் என்னை காதலிக்கவில்லை.. அதனால்தான் அவள் இங்கு வராமல் அவள் சித்தப்பா விட்டிற்கு சென்று விட்டாள்” என்று என் ஓரு மனம் சொன்னது.
அவள் சித்தப்பா அவர் விட்டிற்கு வாம்மா என்று கூப்பிடும் போது இல்லை நான் ஒருவரை காதலிக்கிறேன் அவரை பார்க்கபோகிறேன் என்று சொல்லாவா முடியும்... அவள் பார்வையில் கண்டிப்பாக நான் காதலைப் பார்த்தேன் , அவள் வருவாள் என்னை காதலிப்பாள்” என்று இன்னொரு மனம் சொன்னது..
“காதலித்துப்பார் கையெழுத்து அழகாகும் “- வைரமுத்துவின் வைரவரிகள். எந்த நேரமும் கைலியும் புள்ளிவைத்தசட்டையும் இல்லை பூப்போட்ட சட்டையும் போட்டு இருந்த நான்..இப்போது கோடுபோட்ட அல்லது சிறுகட்டம் போட்ட சட்டையும்,பேண்ட்டும் போட்டு இருந்தேன்.பங்கரையாக இருந்த என் தலையை இப்போது ஸ்டெப் கட்டிங் செய்து இருந்தேன்.என்னை பார்க்கையில் எனக்கே வித்தியாசமாக இருந்தது.
அன்று செவ்வாய்க்கிழமை ப்ரியாவின் அப்பா காலை மதுரைச் செல்வதாககூறிச் சென்றார்.நான் காலையில்ருந்து கடையில்தான் இருந்தேன். மதியம் 3.00 மணி இருக்கும்,எங்கள்கடை இருக்கும் டவுன்பஸ் ஸ்டாப் அருகே ஒரு டவுண்பஸ் நின்றது, அதிலிருந்து ப்ரியா அப்பா இறங்கினார்,பின்னாலே ப்ரியாவும்ம்......
நான் கடைக்கு பின்னாடி ஒடிச்சென்று எண்ணெய் வழிந்த என் முகத்தை கழுவிப் புதுபொலிவுடன் வந்தேன்.
ப்ரியாவுடன் வந்த ப்ரியா அப்பா என்னைப்பார்த்து நமட்டு சிரிப்புடனே வந்தார்.
என்ன ராஜ் இன்னும் சாப்பிடபோக வில்லையா? என்று கேட்டபடியெ க்டைக்குள் வந்தார். இல்லை மாமா அப்பா வண்டியை [எம்-80] எடுத்துகிட்டு பக்கத்து ஊருக்கு போய் இருக்கார், அவர் வந்தவுடனே சாப்பிட போகனும்” சொன்னேன்.சரி நான் கடையை பார்த்துக்கொள்கிறேன் நீ ப்ரியாவை வீட்டில்விட்டுவிட்டு அப்படியே சாப்பிட்டுவிட்டு வா” என்றார்.
“நான் வண்டி இல்லையே”-நான்.
“பரவாயில்லை சைக்கிளில் கூப்ப்டிடுகிட்டு போ என்று சொன்னவர். என் பின்னால் பார்த்து “ இல்லை ,வேண்டாம்” என்றார். அதைக்கேட்ட ப்ரியாவும் “க்ளுக்” என்று சிரித்தாள்.ஏனென்று புரியாமல் பின்னால் பார்த்த நான் என்னையும் அறியாமல் சிரித்துவிட்டேன்.ஆம் அங்கு நின்று இருந்த சைக்கிள்களில் கேரியர் இல்லாமல் இருந்தது.கண்டிப்பாக எந்த அப்பாவும் தன் மகளை இப்படி அனுப்பமாட்டார்கள் .
“இல்லை அப்பா ,நான் ராஜ்கூட நடந்து போய்கிறேன்” –என்று ப்ரியா சொன்னாள்.”ம்ம் சரிமா, பேக் இருக்கட்டும் நான் எடுத்து வருகிறேன்” என்றார்.
நான் இப்போது ப்ரியாவுடன் தனியாக நடந்து கொண்டு இருந்தேன்.நான் அவளேயே பார்த்து கொண்டு நடந்தேன்.நான் அவளை மட்டும் பார்த்துகொண்டு நடக்கிறேன் என்றுஅறிந்த ப்ரியா பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு வந்தாள்.
எனக்கு என்ன பேசுவதே என்று தெரியவில்லை..அவள் கொள்ளை அழகு என்னை ஊமையாக்கி இருந்தது..அவளுடன் நான் நடப்பதை என்னவோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்கியதை போன்று பெருமையாக , கர்வமாக இருந்தது.
தேசியநெடுஞ்சாலையிலிருந்து மேற்கிலிருந்த எங்கள் ஊர் பூமிபந்து மேற்கிலிருந்து கிழக்கில் சுற்றுவதால் என்னவோ மிக விரைவாக வந்தது.நான் அவளை வீட்டில் விட்டுவிட்டு என் வீட்டிற்கு வந்தேன்.நான் என் காதலை அவளிடம் சொல்ல வேண்டும், அதுவும் சீக்கிரம் , எப்படி சொல்வதேன்று கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது.
நான் அதற்காக ஏற்கனவே ஒரு இதயத்தின் மிது ரோஜா இருப்பதைப்போன்ற ஒரு வாழ்த்துஅட்டையை வாங்கி வைத்து இருந்தேன்.
அதில்
“பூவே உன்னை நேசிக்கிறேன்.
உன் பதிலாக
உன்னையே எதிர்ப்பார்க்கும்”
உன் ராஜ்.
என்று எழுதியிருந்தேன்.
என் பெயரை எழுதாமலிருக்க அள்வு நான் கோழையல்ல, ஆனால் அவள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்னசெய்வது என்றுதான் தெரியவில்லை.
அடுத்த நாள் காலை 11.00 மணி இருக்கும் ,என் வீட்டில்ருந்தவர்களும், அவள் அம்மாவும் அவள் தங்கையும் சேர்ந்து நாங்கள் ஒத்திக்கு வாங்கியிருந்த கரும்புதோட்டத்திற்கு மோட்டரில் குளிப்பதற்கு சென்று இருந்தார்கள்,அவள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.ம்ம்ம் இதுதான் என் காதலை சொல்லுவத்ற்கு சரியான சமயம் என்று அவள் வீட்டிற்கு சென்றேன். கதவு தாழிடாமல் லேசாக சாத்தியிருந்தது.
“ ப்ரியா” என்றேன்.
“யார்?” என்றபடியே உள்ளேயிருந்து வந்தவள், என்னைப் பார்த்ததும், குழம்பியவளாக.
“என்னங்க ராஜ்” என்றாள்.
“ஒன்றும்மில்லை” என்றேன்.
“ம்ம் சரி உட்காருஙகள்” என்றாள். எதிர்புறமிருந்த திண்னையைக்காட்டி..
[காதலிக்க தெரிகிறது..காதல் அட்டையை வாங்க தெரிகிறது....அதில் எழுத தெரிகிறது... ஆனால் அதை கொடுப்பதற்குதான் தைரியம் இல்லை... என் இதயம் திக்.. திக்.. திக்.. திக்..... என்று உள்ளேயடிப்பது வெளியே கேட்டது..].
ம்ம்ம் துணிந்தவனுக்கு தூக்குமேடையும் பஞ்சுமெத்தைதானென்று தைரியத்
தை வரவழைத்துக்கொண்டு அந்த காதல் அட்டை அவளிடம் கொடுத்தேன்...
அதை வாங்கி மெதுவாக பிரித்து படித்தாள்.
அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை..
கம்பன் சொல்வானே” சித்திரத்தில் வரைந்த செந்தாமரை மலர்”என்று அதுபோல இருந்தது அவள் முகம்...
அவளின் மெளனம் எனக்கு கலவரத்தை ஏற்படுத்தியது..
[ஒர்ஆண்தனக்குஅநியாகமாகவிதிக்கப்பட்டமரணத்தண்டனையைகூட பொறுத்துக் கொள்வான்.. ஆனால் காதலை சொன்னபிறகு அவளின் மெளனத்தை மட்டும் பொறுத்துக் கொள்ள முடியாது...]
முன்று நிமிடங்கள் கழிந்து இருந்தது...அவளின் மெளனம் இப்போது எனக்கு தைரியத்தைக் கொடுத்துஇருந்தது..
“ப்ரியா ,I LOVE YOU” என்றேன்.
அவள் இப்போதும் மெளனமாகவே இருந்தாள்.
நான்” ப்ரியா” என்றேன்
அவள் “ம்ம்ம்ம்”என்றாள்.
“I LOVE YOU” என்றேன்..
அவள் இப்போதும் “ம்ம்ம்” என்றாள்.
“என்ன, பிரியா எதுவும் சொல்லமாட்டேங்கிறாய்”என்றாள்.
“ட்யூப் லைட், நான் “I LOVE YOU” க்குதான்” ம்ம்ம்” என்று சொல்லுகிறேன். போதுமா?..என்றாள்....
“ராஜ் .I LOVE YOU”- என்றாள் அவள் செவ்வாய் பிரித்து..கொஞ்சம் அழுத்தமாக..நான் சொன்னதைக்காட்டிலும்..
“காதல் என்னும் தேர்வுஎழுதிக் காத்துஇருந்த
மாணவன் நான்...உன் உள்ளமென்னும் ஏட்டில்
என் எண்ணை பார்தத போது, என்னை நம்பவில்லை
எந்தன் கண்ணை நம்பவில்லை” என்ற பாடல்தான் என் மனதிலொலித்தது...
[அவள் ம்ம்ம்ம்” என்று சொல்லி பல வருடம் கழித்துதான் இந்த பாடல் திரைக்கு வந்தது என்றாலும் இதைவிட ஒரு வரிகள் எனக்கு புலப்படவில்லை.]
ம்ம் அவளும் என்னை காதலிக்கிறாள் என்று எனக்கு தெரிந்துவிட்டது,,ம்ம் இனி என்ன செய்ய? பாரதிராஜாவாக இருந்தால் ஒரு 10,15, பெண்களுக்கு வெள்ளைகவுனை மாட்டிகொண்டு டூயட் பாடலாம்...இல்லை டைரக்டர் சங்கராக இருந்தால், ஒர் வெளிநாடு டூருக்கு போயிருக்கலாம்...நான் அவளை காதலிக்க வேண்டியதுதான்...ஒரு டூயட்சாங் கூட இல்லாமல்...

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com