மான்சி கதைகள் by sathiyan
வெகுநேரம் கழித்து அவன் மொபைலின் ஒலி அவனை எழுப்ப ... வாறிச்சுருட்டிக் கொண்டு எழுந்த சத்யன் தனக்கு கீழே இருந்த மான்சி போட்டிருந்த உடைகளை பார்க்கவும்...

சற்றுமுன் அவன் செய்தது ஞாபகம் வர அவன் முகத்தில் ஒரு வெட்கம் கலந்த சிரிப்பு வந்தது

மறுபடியும் குனிந்து அந்த உடைகளில் முத்தமிட்டு கட்டிலைவிட்டு இறங்கி தனது வாட்ச்சில் நேரம் பார்க்க ... மாலை இரண்டு ஆகியிருந்தது... ச்சே இவ்வளவு நேரமாவா தூங்கினோம் என்று நெற்றியில் அடித்துக்கொண்டு அவசரமாக பாத்ரூம் போய் முகம் கழுவினான்

சத்யனுக்கு பசி வயிற்றை கிள்ளியது கிச்சனுக்குள் போய் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான் ... சாப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லை ...

மொபைலை எடுத்து யார் போன் செய்தது என்று பார்த்தான் ஆபிஸிலிருந்துதான் பண்ணியிருந்தார்கள்

இரண்டு நாட்களாக ஆபிஸ்க்கு வேறு போகவேயில்லை என நினைத்தவன் ... ஒருவழியாக ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஆபிஸ்க்கு போகலாம் என்று நினைத்து உடையை மாற்றிக்கொண்டு கிளம்பினான்

கதவை பூட்டிக்கொண்டு வெளியே வந்தவன் மான்சியின் வீட்டை பார்க்க ...

உள்ளே மான்சி சைந்தவிக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருக்கிறாள் போல... சைந்தவி சாப்பாடு வேண்டாம் என்று அழும் சத்தமும் மான்சி குழந்தையை சமாதானம் செய்வதும் நன்றாக கேட்டது

இந்த சத்தம் என்று தன் வீட்டில் கேட்கும் என சத்யன் நினைக்க... கூடிய விரைவில் என்று அவன் மனம் சொல்ல... சத்யன் முகம் மலர வெளிப்படையாக புன்னகைத்து விட்டு லிப்ட்டை நோக்கி போனான்


அதன்பிறகு சத்யன் மான்சியை பார்பதே அறிதாகிவிட்டது... அவனுக்கு ஆபிஸில் புதிய விளம்பர ஆர்டர்களால் வேலை அதிகமாக இரவு ரொம்ப நேரங்கழித்து வர ஆரம்பித்தான் ...

இரவு நேரங்கழித்து தூங்குவதால் அவனால் காலையில் சீக்கிரமாக விழிக்க முடியவில்லை

இரவு அவன் வரும் நேரங்களில் பரணியின் வீட்டில் சந்தடி அடங்கியிருந்தது... மூடியிருக்கும் கதவை சிறிதுநேரம் பார்த்துவிட்டுதான் தன் வீட்டுக்கு போவான்

மான்சியின் முகம் பார்க்காததும் வேலையின் அலுப்பும் சத்யனின் உடலை மெலியச் செய்தது... எப்போதாவது நேரம் கிடைக்கும் போது பூங்காவில் போய் உட்காருவான்

அந்த நேரத்தில் அங்கே சைந்தவி இருந்தால் இவனுடைய சந்தோஷத்திற்கு அளவே இருக்காது...ஆசையோடு குழந்தையை தூக்கி அணைத்து முத்தமிடுவான்

பரணி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சத்யன் வீட்டுக்கு வருவது மட்டும் மாறவில்லை.... இருவரும் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தினாலும் சத்யனுக்கு உள்ளமெல்லாம் ஒரே குறுகுறுப்பாக இருக்கும்

சத்யன் முன்புபோல் இல்லாமல் அளவோடு குடித்துவிட்டு கொஞ்சம் சிஸ்டத்தில் வேலையிருக்கு அங்கிள் அதான் என்று எதையாவது சொல்லி சமாளித்தான்

சில நாட்களில் வேண்டுமென்றே வெளியே எங்காவது சுற்றிவிட்டு.... கொஞ்சம் அவசர வேலையாக வெளியே போய்விட்டதாக பொய் கூறி பரணிக்கு போன் செய்வான்

ஒருநாள் அவன் மாமா பரமன் தனது எட்டுவயது பேத்தியை அழைத்துக்கொண்டு சத்யன் வீட்டுக்கு வந்தார் ... தன் பேத்திக்கு காது சரியாக கேட்கவில்லை என்று அதை சென்னையில் பெரிய டாக்டரிடம் பார்க்கவேண்டும் என்று பரமன் சொல்ல

சத்யனுக்கு அந்த வேலையாக சுற்றுவதற்கு கொஞ்சநாள் ஆனது... பரமன் ஒருவாரம் சத்யன் வீட்டில் தங்கி தனது பேத்தியை குணப்படுத்திக் கொண்டு போக ... பரமனுக்கு பரணீதரன் ரொம்ப உதவியாக இருந்தார்.... மான்சியும் பரமனின் பேத்தியிடம் அன்பாக இருக்க பரமனுக்கு பரணீதரன் குடும்பத்தை ரொம்பவும் பிடித்துப்போனது

பரமன் ஊருக்கு போனதும் சத்யன் ஒருநாள் தனது ஆபிஸிலிருந்து சீக்கிரமாகவே வந்து பால்கனியில் சேரைப் போட்டு உட்கார்ந்திருந்தான்... இப்போதெல்லாம் அவன் மான்சியை பார்பது எப்போதாவது ஒருமுறை தான் என்றாகிவிட்டது...

மான்சியை பார்த்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனாது... ஆனால் சத்யனுக்கு அவளை பிரிந்து பல யுகங்களாக தனிமையில் வாழ்ந்தது போல ஒரு விரக்தியில் இருந்தான்

அவளை பற்றிய ஏக்கங்களையும் தாபங்களையும் தன் மனதில் போட்டு புதைத்துவிட்டு தனது வேலையில் அவன் செலுத்திய கவணம் ... அவனுக்கு நிறைய லாபத்தை ஈட்டித்தந்தது

ஆனால் சத்யன் அந்த லாபத்துக்கு காரணம் மான்சியும் தானும் இனைந்துவிட்டது தான் என்று நம்பினான்... அவளை தொட்டுத் தழுவிய நேரம்தான் தன்னுடைய வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சிகரமாக மாற்றிவிட்டது என்று நினைத்தான்



சத்யன் தன் மடியில் லேப்டாப்பில் தனது மெயில்களை பார்ப்பதும் கீழே மான்சி பேங்கில் இருந்து வருகிறாளா என்று பார்ப்பதுமாக ஒரே நேரத்தில் இரண்டு வேலையை செய்துகொண்டு இருந்தான்

ஒருமுறை கீழே எட்டி பார்த்தப்போது மான்சி அப்பார்ட்மெண்ட் உள்ளேயிருந்து வர ... சத்யன் திகைப்புடன் ‘மான்சி இன்றைக்கு வேலைக்கு போகவில்லையா என்று நினைத்தவன் ...

ஒருவேளை சைந்தவிக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா... அதனால்தான் லீவு போட்டிருப்பாளோ... அப்படின்னா கூட இந்த நேரத்தில் எங்க போறா’ என்று குழம்பியவன்

ஒரே முடிவாக எழுந்து வெளியே போய் மான்சியின் வீட்டு கதவை தட்டினான்... காஞ்சனாதான் வந்து கதவை திறந்தாள்.... சத்யன் உடனே உள்ளே நுழைந்து

“ ஆன்ட்டி சவிக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா “ என்று பதட்டத்துடன் கேட்க

“ அதெல்லாம் ஒன்னுமில்லையே... அவ நல்லாத்தானே இருக்கா... உள்ளே அவ தாத்தாகூட கேம் விளையாடிக்கிட்டு இருக்கா... ஏன் தம்பி என்னாச்சு ” என்று காஞ்சனா கேட்க

“ இல்ல ஆன்ட்டி சவியோட அம்மா இன்னிக்கு வேலைக்கு போகலை போல... இப்பதான் வெளிய போனாங்க பார்த்தேன் .... அதான் சவிக்குதான் ஏதாவது உடம் சரியில்லாம லீவு போட்டுருக்காங்களோன்னு நெனைச்சேன்’” என்று சத்யன் கூற

“ மான்சிக்குத்தான் தம்பி உடம்பு சரியில்லை... நேத்துல இருந்து பேங்குக்கு போகலை... தலைவலிக்குதுன்னு சொல்லி ரூமுக்குள்ளேயே முடங்கிகிடந்த... இப்பதான ஏதோ மாத்திரை வாங்க போறேன்னு சொல்லிட்டு வெளிய போனா” என காஞ்சனா கூறியதும்

சத்யன் கொஞ்சம் பதட்டமாக “ அவங்களை ஏன் ஆன்ட்டி தனியா அனுப்பினீங்க... என்னை கூப்பிட்டு இருக்கலாமே நான் வீட்லதான சும்மா இருந்தேன் நான் போய் மாத்திரை வாங்கிட்டு வந்திருப்பேனே” என்று சத்யன் பதட்டப்பட

இவர்களின் பேச்சு குரல் கேட்டு உள் அறையில் இருந்து சைந்தவியுடன் வந்த பரணி “ அட என்ன சத்யன் நானே சும்மாதானே இருக்கேன்... நான் போய் வாங்கிட்டு வர்றேன் சீட்டை குடும்மான்னாக் கேட்டக்கூட... இல்ல நானே போய் வாங்க்கிறேன்னு போறா சத்யன்... திடீர்னு சின்ன புள்ள மாதிரி பிடிவாதம் பண்றா... சரி ரெண்டு நாளா வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தாளே வெளியே காத்தோட்டமா போய்ட்டு வரட்டும்னு தான் சும்மா இருந்தேன்... நாம என்ன சத்யன் பண்றது” என்று பரணி கூற

ஏன் இரண்டு நாளா வேலைக்கு போகமா வீட்டுக்குள்ளேயே இருந்தா... இப்போ ஏன் இவ்வளவு அவசர போறா ... என்று சத்யன் மனம் குழம்பினாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் சைந்தவியை சிறிதுநேரம் கொஞ்சிவிட்டு அங்கிருந்து தன் வீட்டுக்கு போய் மறுபடியும் பால்கனியில் உட்கார்ந்து கொண்டான்

அவன் அமர்ந்த சிறிதுநேரத்திலேயே கீழே மான்சி வருவது தெரிய சத்யன் நன்றாக எட்டிப்பார்த்தான் ... மான்சி தனது கைப்பையை மார்போடு அணைத்து கொண்டு வேகமாக அப்பார்ட்மெண்ட்க்குள் நுழைய

சத்யன் வேகமாக எழுந்து வெளியே போய் லிப்டின் அருகே இருந்த மாடிப்படியின் ஓரமாக நிற்க... மான்சி லிப்டில் இருந்து வெளியே வந்து தனது கைப்பையை திறந்து உள்ளே இருந்த மாத்திரை அட்டை கவரை எடுத்து தன் ஜாக்கெட்க்குள் வைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு போய்விட்டாள்

அவள் போன சிறிதுநேரம் கழித்து சத்யன் தன் வீட்டுக்கு போய் மறுபடியும் பால்கனியில் உட்கார்ந்து குனிந்து கைகளால் தன் தலையை தாங்கிக்கொண்டான்

அவனுக்கு மான்சியின் உடல் மெலிவு மனதை வாட்டியது ... ஏன் இப்படி இருக்கிறாள்... ஏதோ பசிப் பட்டினியால் வாடியவள் மாதிரி இருக்கிறாளே... போட்டிருக்கும் ஜாக்கெட் கூட ரொம்ப லூசாக இருந்ததே...எல்லாம் என்னால்தான்... நான் அவளை பார்க்கவில்லை என்றால் அவள் நன்றாகத்தான் இருந்திருப்பாள்.. என்று நினைத்து கண்கலங்கியனான்


தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு குமுறிய சத்யனுக்கு திடுக்கென்று ஒருவிஷயம் ஞாபகம் வர... சட்டென எழுந்தான் ...

‘ ஏன் மான்சி அந்த மாத்திரைக் கவரை ஜாக்கெட்டுக்குள் மறைத்தாள்... அதுவும் வீட்டுக்கு அருகில் வந்தவுடன் மறைத்தாளே ... என்று நினைத்தவன் மனதில் ஏதோ விபரீதம் நடக்கபோவது போல தோன்ற

பதட்டத்துடன் மான்சியின் வீட்டுக்கதவை தட்டினான்... முன்புபோல் காஞ்சனாதான் கதவை திறந்தாள்

சத்யன் அவளை தாண்டி வேகமாக உள்ளே போக... பரணி ஹாலிலேயே அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார்

இவன் பதட்டத்தை பார்த்து பரணி வேகமாக எழுந்து “ என்ன சத்யன் என்னாச்சு “ என்று கேட்க

“ அங்கிள் மான்சி எங்க” என சத்யன் பதட்டத்துடன் கேட்க

“ ஏன் சத்யன் அவளோட ரூம்ல தான் இருக்கா” என்று பரணி சொல்லி வாய் மூடுவதற்குள்... சத்யன் பாய்ந்த ஓடி மான்சியின் அறைக்கதவை தட்டினான்

உள்ளேயிருந்து எந்த பதிலும் இல்லாது போக கதவை பலமாக தட்டிய சத்யன் “ மான்சி நான் சத்யன் வந்திருக்கேன் கதவை திற மான்சி” என்று கெஞ்சியவாறே குரல் கொடுக்க

பரணிக்கும் காஞ்சனாவுக்கும் ஒன்றுமே புரியவில்லை “ எனனாச்சு சத்யன்" பதட்டமாக கேட்டனர்

"அய்யோ அதை நான் அப்புறமா சொல்றேன்... மொதல்ல மான்சியை வெளியே வரச்சொல்லுங்களேன்... எனக்கு பயமாருக்கே மான்சி" என சத்யன் முகத்தை மூடிக்கொண்டு கதறியபடி சொல்ல

பரணிக்கு ஏதோ விபரீதம் என்று புரிய " மான்சி கதவை திற எத்தனை முறை தட்றது திற மான்சி" என்று அதட்டியவாறு கதவை தட்ட ... அவருக்கும் எந்த பதிலும் இல்லை

"மான்சி நீ கதவை திறக்கலேன்னா பரவாயில்லை... ஆனா உனக்கு ஏதாவது ஆச்சுன்னா அடுத்த நிமிஷம் நான் உயிரோட இருக்க மாட்டேன் இது சத்தியம் மான்சி" என்று சத்யன் உரக்கச் சொல்ல

பரணிக்கும் காஞ்சனாவுக்கும் ஏதோ விஷயம் புரிவது போல் இருக்க... கலவரத்துடன் சத்யனை பார்த்தனர்

" மான்சி நான் சொல்றதை நீ நம்பலை தான... சரி மான்சி நீ கதவை திறக்க வேண்டாம்... சப்போஸ் நீ உயிர் பிழைச்சாலும் அதை பார்க்க நான் உயிரோட இருக்கமாட்டேன் மான்சி" என சத்யன் கறிய மறுநிமிடமே கதவு பட்டென திறக்க

உடனே உள்ளே பாய்ந்து ஓடிய சத்யன் ...மான்சி கட்டிலின் ஒருமூலையில் உட்கார்ந்தருந்தாள்... முதலில் அறையை சுற்றிலும் தேடினான் ... கட்டிலில் அருகே இருந்த சிறிய டேபிளில் அந்த மாத்திரை கவர் வைக்க பட்டிருக்க வேகமாக அதை தாவியெடுத்த சத்யன் அதை பிரித்து பார்த்தான்...

உள்ளே இருந்த அட்டையில் மாத்திரைகள் பிரிக்கப்பட்டு ... மாத்திரைகள் அதற்க்குள்ளேயே இருந்தன ... சத்யனுக்கு நிம்மதியாக மூச்சுவர மான்சியின் அருகில் போனான்

பரணியும் காஞ்சனாவும் ஊமைகளாக அங்கே நடப்பதை வேடிக்கைப் பார்க்க....

சத்யன் அவர்களிடம் வந்து கையெடுத்துக்கும்பிட்டு " அங்கிள் தயவுசெய்து கொஞ்சம் வெளியே இருங்க .. நான் மான்சிகிட்ட தனியாக பேசனும்... இது எங்க ரெண்டுபேர் உயிர் பிரச்சனை ப்ளீஸ் அங்கிள் புரிஞ்சுக்கங்க.... நான் உங்ககிட்ட அப்புறமா எல்லாத்தையும் தெளிவா சொல்றேன்" என சத்யன் பரணியை பார்த்து கைகூப்பி கெஞ்ச

அடுத்த நிமிடம் பரணி எதுவுமே பேசாமல் தன் மனைவியை கூட்டிக்கொண்டு வெளியேறினார்

அவர் போனதுமே மான்சியை நெருங்கிய சத்யன் அவள் தோள்களை பற்றி எழுப்பி நிறுத்தி " மான்சி இது என்ன மாத்திரை சொல்லு ... இது தூக்கமாத்திரை இல்லைன்னு எனக்கு தெரியும் பின்னே வேற என்ன இத சொல்லு மான்சி'" என அவள் தோள்களை உலுக்கி கேட்க

மான்சி கரகரவென கண்ணீர் வடித்தாளே ஒழிய சத்யனுக்கு தகுந்த பதிலைச் சொல்லவில்லை

" மான்சி சொல்லு... நான் இதையெல்லாம் எடுத்துட்டு போய் மெடிக்கல் ஷாப்ல என்ன மாத்திரைகள்னு கேட்க ரொம்ப நேரம் ஆகாது... ஆனா இந்த விஷயம் வெளிய தெரியவேண்டாமேன்னு பார்க்கிறேன்... இப்போ சொல்றியா இல்லையா" என்று சத்யன் கோபமாக கேட்க

மான்சி சட்டென அவனை இறுக அணைத்துக்கொண்டு குலுங்கி கண்ணீர்விட

அவளை மேலும் இறுக்கி அணைத்த சத்யன் " என்னாச்சு கண்ணம்மா என்கிட்ட ஏன் மறைக்கிற" என பரிவுடன் கேட்க

அவன் பிடியில் இருந்து சற்று விலகிய மான்சி,,,, தன் முதுகை சுற்றியிருந்த அவன் வலது கையை எடுத்து தன் அடிவயிற்றில் வைத்து..... " இதுக்குத்தான் அந்த மாத்திரை வாங்கினேன் ... இதுக்குத்தான் சத்யன்" என்று கதறியபடி அவனை மறுபடியும் இறுக்கி அணைத்து

" என்னை கொன்னுடுங்க சத்யன் நான் உயிரோடவே இருக்ககூடாது... உங்கப்பிள்ளையை கருவிலேயே அழிக்க நெனைச்ச நான் உயிரோடவே இருக்ககூடாது சத்யன் ... நான் இருக்கவே கூடாது" என்று அவனை அணைத்துக்கொண்டு கதறியழுதாள் மான்சி


சத்யனுக்கு மான்சி சொன்னது மண்டையில் ஏற சிறிதுநேரம் ஆனது ... அவள் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்ததும் சத்யன் முகம் பளிச்சென்று மின்ன ... சந்தோஷமாக “மான்சி உன்மையாவா ” என்று கூவி அவளை விலக்கி நிறுத்தி முகத்தை உற்றுப் பார்க்க

அவ்வளவு நேரமாக கதறியழுத மான்சி.... சத்யன் சந்தோஷமாக அவள் முகத்தைப் பார்க்கவும்... சட்டென அவள் முகம் வெட்கச் சிவப்பை பூசிக்கொள்ள... தலைகுனிந்து ஆமாம் என்பதுபோல் தலையசைத்தாள்

சந்தோஷத்தில் அவளின் பின்புறத்தில் கைகொடுத்து அவளை தரையைவிட்டு ஒருஅடி உயரே தூக்கிய சத்யன்... அவளின் வயிற்றில் தன் முகத்தை பதித்து புடவைக்கு மேலே பப்ச்க் என்று சத்தமாக முத்தமிட...

மான்சி கூச்சத்துடன் நெளிந்து அவன் தலைமுடியை பற்றிக்கொண்டு “ ஸ் இறக்கிவிடுங்க.. இவ்வளவு உயரத்தில தூக்கறது ... எனக்கு ஒருமாதிரியா இருக்கு” என்று கிசுகிசுப்பாக சொல்லிவிட்டு கீழே இறங்க முயற்ச்சித்தாள்

அவளை கீழே இறக்கிவிட்டு மூச்சுமுட்ட இறுக்கி அணைத்த சத்யன்.... உடனே விடுவித்துவிட்டு “ஸாரி ரொம்ப இறுக்கி அணைச்சுட்டேன்... மானு இப்படி இறுக்கினா உள்ள பாப்பாவுக்கு ஒன்னும் ஆகாதுல” என்று அப்பாவிப் போல கேட்க

மான்சி எதுவும் சொல்லாமல் வெட்கத்துடன் ஓடி கட்டிலில் கவிழ்ந்து படுத்துக்கொள்ள... சத்யன் அவள் பின்னாலேயே போய் அவள் அருகில் அமர்ந்து அவளை தன் பக்கமாக புரட்டி திருப்பியவன்

“ ஏன் மான்சி இதை என்கிட்ட மொதல்லயே சொல்லலை”என்று சத்யன் அன்புடன் கேட்க

அவன் புரட்டியதில் மல்லாந்து படுத்த மான்சி “ ஆமா வெளிய சொல்லி சந்தோஷப்படுற மாதிரியா அய்யாவோட வாரிசு உருவாகியிருக்கு... விஷயம் தெரிஞ்சதில் இருந்து நானே பயத்தில் செத்துகிட்டு இருக்கேன் “ என்று மான்சி சத்யனுப் பார்த்து பயந்த குரலில் கூறினாள்

அவள் முகத்தையே உற்று பார்த்த சத்யன் “அதனாலதான் உன் உயிர் போய்டக்கூடாதுன்னு... வயித்திலேயே என் பிள்ளையை கொன்னுடலாம்னு முடிவு பண்ணியா மான்சி” என்று இறுகிய முகத்துடன் கரகரத்த குரலில் சத்யன் தீர்கமாக கேட்க

இவ்வளவு நேரம் தலைக்கு மேலே தூக்கி வச்சு கொண்டானவன் சட்டென மாறிவிட்டது மான்சி வயிற்றில் திக்கென்று ஒரு பயத்தை உண்டாக்கியது ... அவன் முகத்தை கலவரமாக பார்த்தப்படி சட்டென எழுந்து உட்கார்ந்தாள்

“ சொல்லு மான்சி ஏன் என்னோட குழந்தையை கருவிலேயே அழிக்கனும்னு நெனைச்ச... நான் எதை வேனும்னாலும் தாங்குவேன் மான்சி... ஆனா இதை என்னால ஜீரணிக்கவே முடியலை”... என சத்யன் ரொம்ப கவணமாக அவளைத் தொடாமல் இறுக்கத்துடன் கேட்க

அவன் முகமும்... தொடாமல் விலகி அமர்ந்திருந்த விதமும் மான்சியின் பயத்தை அதிகப்படுத்த... நடுங்கும் குரலில் “ இல்ல நான் ரெண்டுநாளா யோசிச்சுதான் இந்த முடிவெடுத்தேன்”.என்று மெல்லிய குரலில் கூற
சத்யன் எதுவும் பேசாமல் ‘எனக்கு இந்த பதில் போதாது’ என்பதுபோல் அவளை நம்பாமல் பார்த்தான்

அவனுக்கு எப்படி புரியவைப்பது என்று புரியாமல் பார்த்த மான்சி .. அவனை சற்று நெருங்கி ... “ இந்த முடிவை எடுக்க நான் எவ்வளவு அழுதேன் தெரியுமா... எனக்கு கொஞ்சங்கூட இஷ்டமில்ல சத்யா” என அவனை சமாதானப்படுத்தும் விதமாக மான்சி சலுகையாய் அவன் மீது சாய்ந்து கொண்டு சொல்ல
சத்யன் அதற்கும் அசைந்து கொடுக்காமல் அவளை விலக்கிவிட்டு எழுந்து நின்று “இது எனக்கு நீ செய்ற துரோகம்னு உனக்கு புரியலையா மான்சி... இல்ல இவன் பிள்ளைக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம்னு வந்த அலட்சியமா..?... என்று சத்யன் விடாமல் கேட்டான்

அவன் முகத்தையே பார்த்த மான்சி “ இதோ பாருங்க சத்யன் நீ என் மேல எவ்வளவு அன்பு வச்சுருக்கீங்கன்னு எனக்கு தெரியாது... ஆனா நான் என் வாழ்க்கையில் சந்தோஷமா இருந்தது என்னிக்குன்னா... அது உங்களோட இருந்த அந்த ஒருநாள்தான்... இதை நீங்க நம்பனும் சத்யன்” என்று மான்சி கவலையுடன் சொன்னாள்

சத்யன் இடுப்பில் கைவைத்துக் கொண்டு “ நான் கேட்டதுக்கு பதில் இது கிடையாது மான்சி” என்றான்


எதைச்சொன்னாலும் இவன் நம்பமாட்டான் என்று உணர்ந்த மான்சி சிறிதுநேரம் அமைதிக்கு பிறகு... அங்கிருந்த மாத்திரை கவரை எடுத்து வந்து சத்யன் கையில் தினித்தாள்

கொஞ்சநேரத்துக்கு முன்னே இந்த மாத்திரையை பத்தி மெடிக்கல் ஷாப்ல விசாரிக்கப் போறேன்னு சொன்னீங்களே.. அதை இப்போ போய் விசாரிங்க” என கோபமாகக் கூறினாள்

சத்யன் கையிலிருந்த மாத்திரை கவரையும் அவளை மாறிமாறிப் பார்த்துவிட்டு “ நீ சொல்றது எனக்கு புரியலை மான்சி இது என்ன மாத்திரை ” என்று தனிந்து போய் கேட்க

“ ம் கருவை கலைக்கிற மாத்திரைதான்... ஆனா என்னோட நாள் கணக்குக்கு ரெண்டு மாத்திரை போட்டா போதும்னு மெடிக்கல்ல சொன்னாங்க... ஆனா நான் நாலு மெடிக்கல் ஷாப் ஏறி இறங்கி மொத்தம் முப்பது மாத்திரை வாங்கினேன்” என்று மான்சி வேகத்தோடு சொல்ல

சற்று அதிர்ந்த சத்யன் அவளை நெருங்கி “ஏன் மான்சி முப்பது மாத்திரை வாங்கின” என்று கலக்கத்துடன் கேட்டான்

“ ம் மொத்தத்தையும் தின்னுட்டு உங்க குழந்தையோட சேர்த்து என் உயிரும் போயிடனும்னு தான் முப்பது மாத்திரை வாங்கினேன்”என்று மான்சி கூறினாள் .. அவன் தன்னை நம்பாத கோபம் அவள் குரலில் தெரிந்தது

சத்யனுக்கு அவள் வார்த்தைகளின் வீரியம் புரிய அவளை இழுத்து தன்னோடு நெருக்கியவன் “ அதுதான் ஏன் மான்சி அப்படி நடக்கனும்... எனக்கு ஒரு வார்த்தை நீ தகவல் சொல்லியிருக்கலாம் ... நான் எப்படியாவது அங்கிள்கிட்ட பேசி சமாளிச்சிருப்பேன்” என்று அவள் காதில் தன் உதடுகளை வைத்து உரசிக்கொண்டே சொன்னான்

“ எப்படி சொல்லச்சொல்றீங்க... எதை சமாளிப்பீங்க சத்யன்... என் அப்பா உங்களை எவ்வளவு உயர்வா நெனைச்சிருக்கார் தெரியுமா... உங்க மேல ரொம்ப மரியாதையும் அன்பும் வச்சிருக்கார் சத்யன்... அவருக்கு இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சா உங்களை பத்தி எவ்வளவு கேவலமா நெனைப்பாரோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க” என கூறிய மான்சி அவன் மார்பில் தன் முகத்தை அழுத்திக்கொண்டாள்

சத்யனுக்கு பட்டென மூளையில் ஏதோ மின்னலடிக்க அவளை விலக்கி கட்டிலில் உட்காரவைத்துவிட்டு தானும் அவள் பக்கத்தில் நெருக்கமாக அமர்ந்து அவள் கைகளை தன் கைக்குள் அடக்கிக்கொண்டு

“ மான்சி எனக்கு இப்போ ஒரு விஷயம் தெளிவா புரியனும்... உனக்கு என்கூட சேர்ந்து வாழ்றதுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ... ஆனா உன் அப்பா என்னை தவறா நெனைப்பார் ... மரியாதையின்றி ஏதாவது பேசுவார்னுதான் பயப்படுறியா.. அதுக்குத்தான் என்னைவிட்டு விலகி விலகி போனியா மான்சி” என்று தவிப்புடன் சத்யன் கேட்க

மான்சிக்கு அவன் தவிப்பு புரிந்திருக்க வேண்டும்... அவன் கைகளுக்குள் இருந்த தன் கையை எடுத்து அவனுடைய கத்தை மீசையை பிடித்து இழுத்து அவன் உதட்டில் தன் இதழ்களை பதித்துவிட்டு உடனே விலகி


“ பின்னே தன்னோட அப்பா எவ்வளவு பெரிய மனுஷனா இருந்தாலும் தன்னுடைய புருஷனை பத்தி ஏதாவது தரக்குறைவா பேசினா எந்த பொண்ணுதான் பொறுத்துக்குவா சொல்லுங்க... நான் மட்டும் எப்படி பொறுத்துக்குவேன் சத்யன்” என்று குரலில் குறும்பு கொப்பளிக்க மான்சி கூறியதும்

அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சத்யன் காதில் வீணையின் நாதம் போல ஒலித்தது.... சத்யனுக்கு இந்த பிரபஞ்சமே தன் காலடியில் இருப்பது போல இருந்தது... தனக்காக மட்டுமே உலகம் உருவானது போல் இருந்தது…. அந்த நிலவை தன் கைகளில் ஏந்தியிருப்பது போல உள்ளம் பூரித்தது

சட்டென அவளை படுக்கையில் தள்ளி அவள்மீது படர்ந்த சத்யன் அவள் முகமெல்லாம் தன் உதட்டால் முத்த கவிதை எழுதினான்.... தன் பற்களால் மென்மையாக அவள் கன்னத்து சதைகளை கடித்து பற்த் தடங்களால் ஓவியம் வரைந்தான் ... தன் நாக்கால் அந்த ஓவியத்திற்கு வர்ணம் தீட்டினான்

“ ச்சு என்ன இது மூஞ்சி பூராவும் எச்சியாக்கிட்டீங்க... மொதல்ல வெளியே போய் உங்க மாமனாரை சமாதானப்படுத்துங்க... அப்புறமா வந்து என் முகமெல்லாம் நக்கி நக்கி முத்தம் குடுப்பீங்க” என்று கூறிய மான்சி சத்யனின் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டாள்

ஊப்ஸ் என்று பெரிதாக மூச்சுவிட்டு எழுந்த சத்யன் “ ம் இந்த ஒரு வார்த்தை எனக்கு போதும்டி மான்சி இந்த உலகத்தையே உன் காலடியில் கொண்டுவந்து வைப்பேன்” என்றவன் அவளை கைகொடுத்து எழுப்பினான்

எழுந்து நின்றவளின் வயிற்றில் குனிந்து முத்தமிட்டு விட்டு... பிறகு அவளின் வலதுகையை பற்றிக்கொண்டு “ சரி வா மான்சி போகலாம்” என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக வெளியே போனான்
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 21-05-2019, 12:30 PM



Users browsing this thread: 5 Guest(s)