கண்ணாமூச்சி ரே ரே
#18
‘எத்தனை கனவுகளுடன் வந்தேன் இந்த ஊருக்கு..?? எத்தனை எதிர்பார்ப்புகள் என்னெஞ்சில் அப்போது..?? இனி நான் வாழப்போகிற ஊர் என்று ஆசையாசையாய் பார்த்தேனே..?? இனி நான் பேசப்போகிற மக்கள் என்று பெருமையாய் உங்களை நினைத்தேனே..?? இதற்குத்தானா.. இந்தநிலையை எனக்கு தரத்தானா இத்தனை நாளாய் காத்திருந்தீர்கள்..??’ – குறிஞ்சியின் மனதில் அடக்கமுடியாத ஒரு ஆதங்கம்..!!


19

அந்த ஊரில் யாருக்கும் ஆரம்பத்தில் இருந்தே அவளிடம் ஒட்டுதல் இல்லை.. அவளுடைய அழகுதான் அதற்கு முழுமுதற்காரணம்.. கொள்ளை கொள்ளும் அவளது அழகு மற்றவர்களிடம் இருந்து அவளை தனியாக பிரித்தே வைத்திருந்தது..!! பெண்களுக்கோ அவளிடம் ஒருவித பொறாமை உணர்வு.. அவளை நெருங்கவே தயங்கினார்கள்..!! ஆண்களுக்கோ அவளைக்கண்டால் வேறு மாதிரியான உணர்வு.. அவர்களது வக்கிர பேச்சுக்களை வெளிப்படுத்த கிடைத்த ஒரு வாய்ப்பாக அவள் அமைந்து போனாள்..!!

குறிஞ்சியின் கணவனுக்கு பிறந்த நாட்டின் மீதிருந்த பற்று கட்டிய மனைவியிடம் இல்லை..!! திருமணமான இரண்டாம் வருடமே, ஆங்கிலேயர்களை அடித்து விரட்டப் போகிறேன் என்று.. தீவிரவாத குழுவை சேர்ந்த இருவருடன் கிளம்பி சென்றவன்தான்..!! ஆறு வருடங்கள் ஆயிற்று.. அவன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்பதற்கே இன்னும் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை..!!

அவன் விட்டுச்சென்ற செல்வம் எட்டு நாள் செலவுக்கு கூட போதவில்லை..!! பணம் சம்பாதிக்க பசுமாடு வங்கி பால் கறந்து விற்றுப் பார்த்தாள்.. பலனேதும் இல்லை..!! ஊரை பீடித்த நோய் மாட்டையும் பீடித்து மரணிக்க செய்தது..!! தனிமை.. வறுமை.. பசி.. அச்சுறுத்தல்.. உயிர்ப்பயம்..!! உயிருக்கு பயந்துதான் முதலில் தன் கற்பை தொலைத்தாள்.. பிறகு மெல்ல மெல்ல தனது உடலழகை காசாக்க கற்றுக்கொண்டாள்..!!

“என்னோட தயவு இல்லாம.. இந்த ஊர்ல மட்டும் இல்ல.. எந்த ஊர்லயும் நீ வாழ முடியாது..!!”

பயந்து நடுங்கிய குறிஞ்சியை படுக்கையில் வீழ்த்தி கசக்கியெறிந்து.. முதன்முதலாய் அவளது கற்பை சூறையாடியது இதே புவனகிரிதான்..!! உடலை விற்று அவள் பிழைப்பு நடத்தக்கூடிய சூழ்நிலைக்கு முதலில் வித்திட்டவர் அவர்தான்..!!

பயந்து பயந்து அவரிடம் படுத்து படுத்து.. உடல் மரத்துப் போனது அவளுக்கு.. வெட்கம் இற்றுப் போனது..!! பயத்தின் காரணமாக இழந்த உடலை.. பசியை தாளாமல் மற்றவர்களுக்கு விற்கவும் துணிந்தாள்..!! ஆரம்பித்து வைத்தது புவனகிரி என்றால்.. அவளை முழுவதுமாக இந்த வாழ்க்கைக்கு தள்ளியது.. இதோ.. வேடிக்கை பார்க்கிற இதே ஊர்தான்..!!

வேடிக்கை பார்த்த கூட்டம்.. குறிஞ்சி முன்னால் நகர நகர.. அவளுக்கு பின்னால் சேர்ந்து கொண்டது.. ஊர்வலம் செல்வது மாதிரி..!! செல்கிற வழியில்.. அவளை கல்லால் அடித்தனர் சிலர்.. காறி உமிழ்ந்தனர் சிலர்..!! ஒருசில மூடர்கள் அவளை சூழ்ந்துகொண்டு தாக்கினர்.. பெண்களும் அந்த மூடர் கூட்டத்தில் அடக்கம்..!!

“செத்து ஒழிடி முண்டை.. செத்து ஒழி..!!” – விளக்குமாற்றால் அடித்தாள் ஒரு பெண்.

“சீவி சிங்காரிச்சு இந்த ஊரை மயக்குனது போதுமடி..!!” – குறிஞ்சியின் கூந்தலை அறுத்தான் ஒரு ஆண்.

“இந்த ஊரை பிடிச்சிருந்த பீடை இன்னைக்கோட போகட்டும்..!!” – சாணத்தை கரைத்து குறிஞ்சியின் தலையில் ஊற்றினாள் ஒரு அறிவிழந்தவள்.

“உடம்பை வித்து பொழப்பு நடத்துற வேசை..!!” – சாட்டையை அவளுடைய மார்புகளில் சுழற்றினான் ஒரு இரக்கமில்லாதவன்.

வலி தாளாமல் கத்துவதற்கு கூட குறிஞ்சியின் தொண்டையில் திராணி இல்லை.. வேதனையை பிரித்துக் காட்டுகிற திறனை கூட அவளுடைய உடல் இழந்து போயிருக்க.. உணர்வுகள் செத்திருந்தன..!! அடியும், உதையும், அருவருப்பான சொற்களும், அவமான வழி நடத்தலுமாய்.. உச்சிமலைக்கு இழுத்து வரப்பட்டாள் குறிஞ்சி..!!

உச்சிமலையில் ஊரின் மீதி ஜனம் குழுமியிருந்தது.. நடுநாயகமாக நின்றிருந்தார் புவனகிரி..!! சன்னதக்காரர் தனது நடிப்பை இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தார்.. ‘அவளை காவு குடுங்கடா.. அவளை எனக்கு காவு குடுங்க..’ என்று நாக்கை துருத்தி கத்திக் கொண்டிருந்தார்..!! மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெரிய எண்ணெய்க்கலம் மையமாக வைக்கப்பட்டிருந்தது.. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பிரதிநிதி.. தங்களது ஈவான மூன்று ஆழாக்கு எண்ணெயை.. வரிசையாக வந்து அந்த எண்ணெய்க்கலத்தில் ஊற்றிக் கொண்டிருந்தனர்..!!

20

ஊருக்குள் இருந்ததை விட உச்சிமலையில் காற்றின் வேகம் இன்னுமே அதிகமாக இருந்தது.. சடசடவென காற்றின் சப்தமே பெரிதாக கேட்டது..!! நடக்கவிருக்கிற கொடுஞ்செயலை புரிந்துகொண்டாற்போல.. காட்டு மரங்கள் வெட்கி தலைகுனிந்து கொண்டன.. காகங்களும் குருவிகளும் சிறகடித்து வேறூருக்கு பறந்தன.. மலையடிவாரத்து குழலாறு ஓடமனமில்லாமல் உறைந்து போயிருந்தது..!!

இழுத்து வந்து நிறுத்தப்பட்ட குறிஞ்சி தன் தலையை மெல்ல உயர்த்தினாள்.. களைப்பு மிகுந்த கண்களை சுழற்றி, சுற்றியிருந்த கூட்டத்தை ஒருமுறை பார்த்தாள்..!! இதில் எத்தனை பேர் தன்னுடன் படுக்கையில் புரண்டிருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பது போல இருந்தது அவளது பார்வை..!! ‘வேசி வேசியென்று என்னை தூற்றுகிறார்களே.. அந்த வேசித்தொழில் செய்ய என்னை தூண்டியவர்கள் இதில் எத்தனை பேர்..??’ என்பது மாதிரி இருந்தது அந்த பார்வை..!! கண்களால் நடத்திய கணக்கெடுப்பின் பலனாக கணிசமான ஒரு தொகை கிடைத்தது.. சாமியருள் வந்துவிட்டதாய் பாசாங்கு புரிகிற சன்னதக்காரரும் அதில் அடக்கம்..!!

விழிகளில் வன்மமும், இதழ்களில் எள்ளலுமாய்.. குறிஞ்சியின் முன்பாக வந்து நின்றார் புவனகிரி..!!

“பேராசைக்கு என்ன கூலின்னு இப்போவாவது உனக்கு புரிஞ்சதா..??” அவர் சொல்லி முடிக்கும் முன்பே,

“த்த்தூதூ..!!!” அவருடைய முகத்தில் காறி உமிழ்ந்தாள் குறிஞ்சி.

அவ்வாறு காறி உமிழ்ந்த அடுத்த நொடியே.. அவளுடைய பின்னந்தலையில் சத்தென்று உருட்டுக்கட்டையால் ஒரு அடி விழுந்தது.. தரையில் பொத்தென்று சுருண்டு விழுந்தாள் குறிஞ்சி..!! விழுந்தவளின் உச்சிமயிரைப் பற்றி, கரடுமுரடான பாறையில் தரதரவென இழுத்து சென்றான் ஒரு அடியாள்..!! முகத்தில் வழிந்த உமிழ்நீரை துடைத்த புவனகிரியின் கண்களில்.. அவமான உணர்வென்பது துளியும் இல்லை.. அத்தனை திருப்தியான ஒரு பார்வை பார்த்தார்..!!

இழுத்து செல்லப்பட்ட குறிஞ்சியை இரண்டு பேர் உயர்த்தி நிறுத்தினர்.. ஒற்றையாய் நின்றிருந்த கல்த்தூணில் கயிறு கொண்டு அவளை கட்டினர்..!! புவனகிரி கண்ஜாடை காட்டியதும்.. மரக்கலத்தை எடுத்து அதிலிருந்த எண்ணெய்யை குறிஞ்சியின் தலையில் கொட்டி கவிழ்த்தனர்..!! அவர் கை நீட்டியதும்.. நெருப்புப்பந்தம் ஒன்று அந்தக்கையில் திணிக்கப்பட்டது..!! ஊர் மக்கள் எல்லாவற்றையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்..!!

“இந்தப்பாவம் உங்களை எல்லாம் சும்மா விடாது..!!” – ஆவேசமாக கர்ஜித்தாள் குறிஞ்சி.

அடுத்தநொடியே.. கையிலிருந்த பந்தத்தை புவனகிரி தூக்கியெறிய.. குறிஞ்சியின் உடலில் குப்பென்று தீப்பற்றிக் கொண்டது..!! உயிருடன் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தாள் குறிஞ்சி.. உடனடியாய் சதைகள் பொசுங்கிப்போக, உள்ளடங்கிய ரத்தநாளங்கள் வெடித்து சிதறின..!!

“ஆஆஆஆஆஆஆஆஆ..!!” ஆவிகொதிக்க அலறி துடித்தாள் குறிஞ்சி.

மலையுச்சியில் சூறைக்காற்று இப்போது திடீரென சுழற்றி அடித்தது.. நிலையாக நிற்கக்கூட முடியாமல் அனைவரும் தடுமாறினார்.. கையை முகத்துக்கு முன்னர் கொண்டு வந்து காற்றை மறைத்தனர்..!!

“ஆஆஆஆஆஆஆஆஆ..!!”

அலறிக்கொண்டே குறிஞ்சி உடலை முறுக்கி திமிறினாள்.. கட்டி வைத்திருந்த கயிறு இப்போது இற்றுப்போய் அற்றுக்கொண்டது..!! அக்னிஜுவாலை பற்றி எரிய.. அங்கும் இங்கும் அலறியடித்து ஓடினாள் குறிஞ்சி..!! ஊர்மக்கள் மிரண்டு போய் அந்த கோரக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கையிலேயே.. திகுதிகுவென தீப்பற்றிய தேகத்துடன் மலையுச்சியில் இருந்து கீழே பாய்ந்தாள்..!!

அடித்த சுழல்காற்றுக்கு.. அவள் நேற்று அணிந்திருந்த சிவப்பு நிற அங்கி.. எங்கிருந்தோ இப்போது பறந்து வந்தது..!! பள்ளத்தாக்கில் அவள் பாய்ந்த திசையிலேயே.. அந்த அங்கியும் வீழ்ந்து அவளுடன் பயணித்தது..!!

ஆயிரத்து ஐநூறு அடி உயரமான சரிவில்.. அங்கமெங்கும் எரிகிற நெருப்புடன்.. ஆங்காங்கே பாறைகளில் முட்டி மோதியவாறு.. குறிஞ்சி கீழே சென்று கொண்டேயிருந்தாள்..!! இறுதியாக சமதளத்தை அடைந்து.. குழலாற்றின் தெளிந்த நீரை கிழித்துக்கொண்டு தொப்பென்று விழுந்தாள்.. அந்த ஆறும் அதற்காகத்தான் காத்திருந்தமாதிரி அவளை தனக்குள் வாங்கி புதைத்துக்கொண்டது..!! பறந்து சென்ற சிவப்பு அங்கியும்.. அவள் விழுந்த இடத்திலேயே சென்று விழ.. ஆற்றுச்சுழல் அதனை உள்ளிழுத்துக் கொண்டது..!!

21

அத்தியாயம் 2

ஆண்டு: கி.பி 2013 (ரொம்ப யோசிக்காதிங்க.. இந்த வருஷம்தான்..!!)
இடம்: கங்கோத்ரி லேயவுட், மைசூர் மாநகரம்

“கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே.. உத்திஷ்ட நரஸார் தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்..!!”

காலைத்தென்றலுடன் கலந்து வந்த சுப்ரபாதம் காதுகளை வருட.. கண்ணிமைகள் மெல்ல அசைவுற்றன ஆதிராவுக்கு..!! அதிகாலை தூக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் கலைய ஆரம்பிக்க.. விழிகளை மெதுவாக திறந்து பார்த்தாள்..!! சுற்றி ஒரு பார்வை பார்த்து சூழ்நிலை உணர முயன்றாள்..!! அவளது படுக்கையறை.. அருகில் படுத்திருக்கிற அவளது கணவன் சிபி, இப்போது பார்வைக்கு வந்தான்..!! வாயை ‘ஓ’வென்று திறந்து வைத்துக்கொண்டு.. களைத்துப்போன குழந்தை மாதிரி தூங்கிக் கொண்டிருந்தான்..!! அகத்திலிருப்பவனை அந்தக்கோலத்தில் கண்டதும்.. ஆதிராவின் அதரங்களில் ஒரு மெலிதான புன்னகை..!!

கருவிழிகளை சற்று தாழ்த்தி பார்த்தபோதுதான்.. நிர்வாணமாக படுத்திருக்கிறோம் என்ற நினைப்பே அவளுக்கு வந்தது..!! அதிகாலை நான்கு மணி வாக்கில் மூன்றாவது முறையாக ஆடைகளைய நேர்ந்ததும்.. ஆட்டக்களைப்பில் திரும்ப அணிந்துகொள்ளாமல் அப்படியே உறங்கிவிட்டதும் ஞாபகம் வந்தது.. உடனடியாய் அவளுடைய முகத்தில் ஒரு வெட்கச்சிவப்பு..!! கீழுதட்டை மடித்து பற்களால் கடித்தவாறே.. அவளுடைய மார்புகள் இரண்டையும் அழுத்தியவாறு படர்ந்திருந்த சிபியின் கையை.. அவனுடைய உறக்கம் கலைந்துவிடாமல் மென்மையாக தன்னிடமிருந்து விலக்கினாள்.. மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டாள்..!!

உடல் மிகவும் களைத்துப் போயிருந்ததை உடனடியாய் அவளால் உணர முடிந்தது..!! அவளுடைய அந்தரங்க பாகங்களில் எல்லாம் ஒரு புதுவித உணர்வு.. வலிக்கவும் செய்தது.. சுகமாகவும் இருந்தது..!! ஆண்மகன் தருகிற இன்பமது எப்படி இருக்கும் என்பதை, நேற்றிரவுதான் முதன்முறையாக அறிந்திருந்தாள்.. அந்த இன்பம் விழைவிக்கிற அதிகாலை விளைவு எப்படி இருக்கும் என்பதை, இப்போது உணருகிறாள்..!!

நேற்றிரவு தலையில் சூடிய மல்லிகைச் சரத்தில்.. இப்போது கணிசமான அளவு மெத்தையில் உதிர்ந்து கசங்கி போயிருக்க.. நார் மட்டுமே கூந்தலோடு பிரதானமாக பிண்ணியிருந்தது..!! ஆதிரா அதை தனியாக பிரித்தெடுத்தாள்.. கையில் வைத்து பந்தாக சுருட்டி, சற்று தூரத்தில் இருந்த குப்பைக் கூடையில், இங்கிருந்தே குறி பார்த்து எறிந்தாள்..!! காலுக்கடியில் கிடந்த பெட்டிக்கோட்டை இழுத்து இடுப்பை சுற்றி முடிச்சிட்டாள்.. கட்டிலின் ஓரமாக கிடந்த ப்ராவை எட்டி கையில் எடுத்தாள்..!! கணவன் தூங்குகிற அழகை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்தவாறே.. தனது கலசங்களை மூடி அந்த ப்ராவை அணிந்துகொண்டாள்..!!

சிபி இப்போது புரண்டு படுத்தான்.. கழுத்துவரை அவன் போர்த்தியிருந்த போர்வை மெல்ல விலகிக்கொண்டது..!! கணவனின் முழு உருவத்தையும் இப்போது காண நேர்ந்த ஆதிராவுக்கு.. உடனே மனதில் ஒரு திடீர் குறுகுறுப்பு..!!

‘இவன் எப்போது உடை அணிந்து கொண்டான்..?? எனக்கு நினைவிருக்கிறவரை எதுவும் அணியாமல்தானே இருந்தான்..?? இடையில் எழுந்திருப்பானோ..?? ஐயையோ..!! அப்படியானால்.. அவன் எழுந்தபோது நான் இதே கோலத்திலா கிடந்தேன்..?? வெளிச்சத்தில் பார்க்க நேற்றிரவு அவன் ஆசையுற்றபோது முடியாது என்று மறுத்தேனே..?? நான் உறங்குகையில் எழுந்து தன் ஆசையை தீர்த்துக்கொண்டிருப்பானோ..?? ஒட்டுத் துணியில்லாமல் நான்.. ஆஆஹ்ஹ்ஹ்க்.. என்ன நினைத்திருப்பான்..?? ச்ச.. ஷேம் ஷேம்..!!” சிலநொடிகள் அவ்வாறு ஒருவித அவஸ்தை உணர்வுக்கு ஆளான ஆதிரா, பிறகு..

‘என்னாயிற்று இப்போது..?? ஏன் இப்படி பதறுகிறாய்..?? பார்த்தால் பார்த்துவிட்டு போகிறான்..?? உன் காதல் கணவன்தானே..?? உன் அழகு மொத்தத்தையும் ஆளுகிற உரிமையுள்ளவன்தானே..?? பார்த்தால் பார்த்துவிட்டு போகிறான்..!!’ என்றொரு சிந்தனை தோன்றவும், சற்று சமாதானமானாள். அதற்குள்ளாகவே,

‘வெட்கமில்லாதவள் என்று ஒருவேளை நினைத்திருப்பானோ..??’ என்று ஒருமனது கிடந்து பரபரத்தது. உடனே,

‘நேற்றிரவு உன்னுடன் கூடும்போதே அது அவனுக்கு புரிந்திருக்கும்..!!’

என்று இன்னொரு மனது கேலியாக பதில் சொல்லவும், ‘களுக்’ என்று உடனடியாய் எழுந்த ஒரு சிரிப்பை ஆதிராவால் அடக்க முடியவில்லை.. வாயை பொத்திக்கொண்டு சப்தமில்லாமல் சிரித்தாள்..!!
Like Reply


Messages In This Thread
RE: கண்ணாமூச்சி ரே ரே - by ju1980 - 11-04-2022, 07:57 PM



Users browsing this thread: 4 Guest(s)