Thread Rating:
  • 1 Vote(s) - 2 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விருந்து [waiting for update]
#3
எங்கள் டீக்கடைதேசிய நெடுஞ்ச்சாலையில் இருப்பதால்,24 நேரமும் திறந்து இருக்கும், டீக்கடை மட்டும் இல்லாது,ஒரு வாடகை சைக்கிள் கடையும்,24 மணி நேர சைக்கிள் பாதுகாப்பகமும், சின்ன அளவில் ஹோட்டலும் இருக்கும்,எனவெ சிப்டுக்கு 5பேர் என 10 பேர் வேலை பார்த்தார்கள். மெயின் கேசியர்கள் 2 பேர்,அதில் ஒருவராக ப்ரியா அப்பா இருந்தார்கள். எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டையும் சேர்த்துதான் என் அப்பா ஓத்திக்கு வாங்கி இருந்தார்,அந்த வீடு சும்மாதான் பூட்டி இருந்தது, எனவே அதில் தங்கி கொள்ளுமாறு ப்ரியாவின் அப்பாவிடம் சொன்னார்.அவரும் அதற்கு “சரி” என்றார். ஒரு நல்ல நாளில் எங்கள் வீடு அருகே அவர்கள் குடி வந்தார்க்ள்.அப்பொது ப்ரியா 10வது வகுப்பு படித்துக்கொண்டு இருந்தாள்.அது ஆகஸ்ட் மாதம் என்பதால், ப்ரியாவும் அவள்து தம்பி, தங்கையும் பாட்டி வீட்டில் இருந்து படித்துக் கொண்டு இருப்பதால், காலாண்டு லீவுக்கு வருவதாக ப்ரியாஅம்மா சொன்னார்கள்.நான் ப்ரியாவை அதற்கு முன்பு பார்த்து கிடையாது,அவர்க்கள் இந்த ஊருக்கு வந்து ஒரு வருடம் வேறு தெருவில் இருந்தாக சொன்னாலும் நான் ப்ரியாவை அதற்கு முன்பு பார்த்து கிடையாது,அடுத்த மாதம் ஒரு நாள் ப்ரியா அம்மா என்னை அவர்கள் வீட்டிற்கு ‘வா’ என்றார்கள்.போனேன்.கதவிற்கு பின்னால் இருந்த ஒரு பெண்ணை காண்பித்து,,,இதுதான் “ப்ரியா” என்றார்கள்.


ஒரு அடர்ந்த நீல கலர் சல்வார்கமிஸ்ஸில் வானத்து மின்னலாய் ஜொலித்து கொண்டு இருந்தாள்.தங்கத்தையும் வெள்ளியையும் ஒன்றாக உருக்கி வார்த்துப்போல், அழகு பதுமையாய் ,தனது 2 ஜடைகளையும்,முன்னெ விட்டு நின்றுக்கொண்டு இருந்தாள்.என்னால் என் கண்ணெயே நம்ப முடியவில்லை.என்னைப் பார்த்து சினேகமாக சிரித்தாள், அவள் அம்மா இவங்கதான் ராஜ் என்றார்கள் என்னைப் பார்த்து


அந்த காலாண்டு லீவு முடியும் வரை, காலை, மாலை என 2 வேளையும் அவளைப் பார்த்துக் கொண்டேஇருந்தேன். லீவு முடிந்து அவள் பாட்டி வீட்டிற்கு போய் விட்டாள்.இனி அவள் சரஸ்வதி பூஜை லீவுக்குதான் வருவாளாம்” அவள் அம்மா சொன்னாள்.
அந்த இடைப்பட்ட காலத்தில் எங்கள் இருவரின் குடும்பமும் நட்பையும் மீறி உறவு கொண்டாடியது. அவள் அப்பா என்னிடம்” என்ன ராஜ், என் பொண்டாட்டியை அக்கா என்கிறாய், என்னை சார் என்கிறாய்,, என்னை மாமா என்றே கூப்பிடு”என்றார்,என் அம்மாவை அவர் அக்கா என்றும், அப்பாவை மச்சான் என்றும், என் அம்மா அவள் அப்பாவை தம்பி என்றும், ப்ரியா அம்மாவை அவர்களை விட சின்ன பெண் என்பதால், பெயர் சொல்லியெ அழைத்தாள். எனக்கும் இதுதானே வேண்டும், என் மனம் சந்தோஸத்தில் துள்ளியது.
ப்ரியா சரஸ்வதி பூஜை லீவுக்கு வரவில்லை, எனென்றால், என் அப்பா கடை வேலை இருகிறது என்று அவள் அப்பாவிற்கு லீவு தரவில்லை. எனது வாடிக்கையான வாழ்க்கை வழக்கமாகதான் போய்கொண்டு இருந்தது.
இதோ தீபாவளி வரப்போகிறது..வழக்கதிற்கு மாறாக என் மனம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தது,,,,தீபாவளியை அல்ல ப்ரியாவை.


அந்த வருடம் தீபாவளி வியாழக்கிழமை வந்ததால்,அவளையும் அவள் தம்பி, தங்கையும் அழைத்துக் கொண்டு, மதுரையில் புதுதுணி வாங்கிக் கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு வந்தார்.இரவு என்பதால் அவளை பார்க்கமுடியவில்லை.மறுநாள்காலை 5.00மணிக்கே எழுந்து அவள் கோலம் போடவருவதை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன்.5.15 மணிக்கு அவள் வீட்டு வாசல்கதவு திறந்தது, அவள் அம்மா வரக்கூடாது என்று கடவுளை வேண்டினேன்,,, இல்லை அவள் அம்மா இல்லை அவளேத்தான்....
மஞ்சள் நிற பாவாடைச்சட்டையில் இருந்தாள், சட்டையின் மேல் சுடிதார்சால் போடுவதைப்போல் தாவணியைப் போட்டு இருந்தாள், சம்மந்தம் இல்லாம்ல்[நான் தாவணியின் கலரைச் சொன்னேன்]
“எப்படி இருங்கிங்கே” என்றாள் ப்ரியா என்னை பார்த்து....[பரவாயில்லை அவளே பேசி விட்டாள்]
“ம்ம் நல்லாய்ருக்கேன்” “என்ன ட்ரஸ் ?” என்றேன்.
“ம்ம் போட்டு இருக்கேனே... தெரியவில்லையா?” உரிமையாக வாயாடித்தாள்.
“நான் தீபாவளிக்கு” என்றேன்.
“நாளைக்கு காலையில் இதே வேளைக்கு வாருங்கள், பாருங்கள் “ என்றாள்.
நான் விக்கித்து போனேன், அவளின் அடுத்த அடுத்த பதிலைக் கண்டு...
“ என்னடா இன்னைக்கு அதிகாலையிலே எழுந்திட்ட” என்றுவாறு வெளியே கோலம் போடவந்த என் அம்மா ப்ரியாவையும் என்னையும் சேர்த்து பார்த்துவிட்டு...”ம்ம் நடத்துடா” என்றே நமட்டுசிரிப்புடன் உள்ளே சென்றாள்.
“ஒன்றுமில்லை அம்மா , தூக்கம் கலைந்து விட்டது” என்றுவாறு தூங்கச்சென்றேன்.[ப்ரியா கோலம் போட்டு விட்டிற்குள் போய்விட்டாள், அதனால்தான்.]
அன்று மாலையில் விட்டு பெண்கள் அனைவரும் வேலையாக இருந்த்தார்கள்.நான் நண்பர்களுடன் மதுரைக்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு 12.00 மணிக்கு வந்தேன்..
நான் இரவு முழுவதும் தூங்கவில்லை...அவளை எதிர்ப்பார்த்து...எப்படி தூக்கம் வரும்? காதலில் விழுந்தவர்களுக்கு...?
நான் காலை 5.00 மணிக்கே கதவை திறந்து[நான் தான் தூங்கவேல்லையே], எதிர்வீட்டுத்திண்னையில் உட்கார்ந்து இருந்தேன்.
சரியாக 5.15 மணிக்கு கதவை திறந்து, வெளியெவந்தாள்..
தலை குளித்து
சீவி சிங்காரித்து
பூ முடித்து
கருமேகத்திலிருந்து வரும் முழு வெண்ணிலவாய் வந்தாள்.
ஒரு சந்தனகலரில் அரக்கு கலர் பூபோட்ட சுடிதார் அணிந்து இருந்தாள்...
வெளியே வந்தவள், மெதுவாக ,கொலுசு அதிரமால், பாவாடையை கால்பாதத்தைவிட்டு சற்றே மேலே தூக்கி, எங்கள் வீட்டு கதவு திறந்து இருக்கிறதா? என்று கதவைப்பார்த்துக்கொண்டே வந்தாள்...


”ப்ரியா” என்றேன் எதிர்வீட்டுதிண்னையிலிருந்து.....
முகத்தைச் செல்லமாக சிணுங்கிக்கொண்டே” நீங்கள் இங்கயா இருக்கிங்க?”
அந்த தெருவிளக்கில் அவள் முகம் விடிவெள்ளியாய் பிரகாசித்தது...
“எப்படி இருக்கிறது “ என்றாள். “ப்ரியா.
“நான் அதிசியமாக இருக்கிறது?’ என்றேன்.
“என்ன”? என்றாள் குழப்பாக ,,,
“வழக்கமாக அமாவாசையில்தானே தீபாவளி வரும்...இன்று பெளர்ணமியில் வந்து இருக்கிறதே?” என்றேன்.....
என் வீட்டுகதவு திறந்தது...எதிர்வீட்டு திண்னையில் என்னைப்பார்த்தவுடன், ப்ரியா வீட்டு வாசலில் ப்ரியா கோலம் போடுவதை பார்த்துவிட்டு...இடுப்பில் கைவைத்தவாறே என்னை முறைத்துப்பார்த்து...சிரித்தாள்......என் அம்மா..
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: விருந்து [waiting for update] - by M.Gopal - 20-05-2019, 08:34 PM



Users browsing this thread: 1 Guest(s)