25-03-2022, 12:03 PM
(25-03-2022, 10:06 AM)Ananthakumar Wrote: நீங்கள் சொல்வது சரிதான் நண்பா ..
ஆனால் நமது நண்பர் ஒருவரிடம் தனது கருத்தை சொல்லி கதை எழுதக் கேட்டிருக்கிறார்.. ஆனால் அவர் தான் மேலும் இரண்டு கதைகள் எழுதிய பிறகு அந்தக் கருத்தை வைத்து கதைகள் எழுதுவதாக கூறி இருக்கிறார்.. அந்த நபர் தன்னுடைய இரண்டு கதைகளைை எழுதுவதற்கு முன்பே நமது நண்பர் அதை மொக்கை கதைகள் கூறுவது சரியாகாது..
அப்படி என்றால் நமது நண்பர் அந்த நபர் ஏற்கனவே எழுதிய கதையை படித்துவிட்டு நன்றாக இருப்பதால் தான் மேலும் தன் கருத்தை கூறி திரும்ப தன் கதையை எழுதக் கேட்டிருக்கிறார்.. அப்படி அவர் தாமதமாகும் என்று கூறிய பிறகு அவரை விமர்சிப்பது ஏற்கனவே அவர் எழுதிய கதையை அவமானப்படுத்துவது போலாகும்..
நீங்கள் சொல்வது போல நல்ல ஆசிரியர்களின் கதைகளைப் படித்துவிட்டு அதுபல எழுதுவது சிறந்தது தான்
ஆனால் நம்முடைய நண்பர் போன்ற ஆட்கள் அதை செய்யாமல் வேறு ஒருவர் தலையில் தங்கள் கருத்தை திணிப்பது தவறு மேலும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்பதும் அவரை இதுபோல அவர் எழுதிய இன்னும் எழுதப்போகும் கதைகளை மொக்கை என்று சொல்வது மிகப் பெரிய தவறு..
இதுபோன்ற தேவையில்லாத விமர்சனங்கள் கதை எழுதுபவரை அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல் வேறு நல்ல கதைகளை எழுதுவதை தடுப்பதற்கு சூழ்நிலைகளை உருவாக்கும் என்பது என்னுடைய கருத்து நண்பா..
நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பா அந்த நண்பரும் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டார் ஆனால் அவர் கதையின் கருவை சொல்லி தனியாக எழுதச் சொன்னது சரிதான் ஏனென்றால் ஒரு சில கதைகளை படித்துவிட்டு கதையின் போக்கை இப்படி மாற்றுங்கள் அப்படி மாற்றுங்கள் என்று வாசகர்கள் அவர்களுடைய எண்ண ஓட்டத்தை கூறுவார்கள் இதனால் கதாசிரியர் அவருடைய கதையை ஒருமாதிரி யோசித்து வைத்திருப்பார் இதனால் கதையின் போக்கு மாறும் ஏன் நானே கூட அந்த தவறை செய்து உள்ளேன் கதையை இந்த மாதிரி கொண்டு சென்றால் செம கிக்காக இருக்கும் என்றெல்லாம் கூறி உள்ளேன் அது எனக்கு இப்போது தவறாகப் படுகிறது நாம் ஒரு கதையை வாசிக்கிறோம் என்றால் சுவாரஸ்யம் அந்த கதையில் குறைந்தால் அதை நாம் சுட்டிக்காட்டலாம் ஆனால் அதற்காக கதையின் போக்கையே நாம் மாற்ற சொல்லக்கூடாது அது அந்த கதாசிரியரின் எண்ண ஓட்டத்தையும் மாற்றி அமைத்தது போல் ஆகிவிடும்
ஆனால் அந்த நண்பர் வேறொரு கதையில் கதையை இப்படி மாற்றுங்கள் என்று கூறாமல் தனியாக கதையின் கருவை சொல்லி எழுது சொல்லியுள்ளார் அதற்காகவே அவருக்கு ஒரு நன்றி