Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் - படுமோசமான சென்னையின் நிலை!

கடந்த 74 ஆண்டுகளில் 5வது முறையாக தண்ணீர் இருப்பில் படுமோசமான நிலைக்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது.
[Image: chennai-drought.jpg]70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் - படுமோசமான சென்னையின் நிலை!
கோடைக்காலம் வந்துவிட்டாலே சென்னையில் தண்ணீர் பிரச்னை தலைகாட்டத் தொடங்கிவிடும். நடப்பாண்டும் இதே நிலை தான் தொடர்கிறது. சென்னையின் முக்கிய நீர் நிலைகளில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. 

அவற்றின் மொத்த கொள்ளளவில் வெறும் 1.3% அளவிற்கு மட்டும் தற்போது தண்ணீர் இருப்பு உள்ளது. இது கடந்த 74 ஆண்டுகளில் 5வது முறையாக மிக மோசமான தண்ணீர் இருப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னை சந்தித்த வறட்சிகளில் மிக மோசமான வறட்சி தற்போது நிலவி வருகிறது. சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் குழாய் வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
செம்பரம்பாக்கம் ஏரி:

மொத்த கொள்ளளவு - 3,645 மி.க.அடி 
தற்போதைய தண்ணீர் இருப்பு - 1 மி.க.அடி 

செங்குன்றம்: 

மொத்த கொள்ளளவு - 3,300 மி.க.அடி 
தற்போதைய தண்ணீர் இருப்பு - 28 மி.க.அடி 

பூண்டி ஏரி: 

மொத்த கொள்ளளவு - 3,231 மி.க.அடி 
தற்போதைய தண்ணீர் இருப்பு - 118 மி.க.அடி 

சோழவரம் ஏரி: 

மொத்த கொள்ளளவு - 1,081 மி.க.அடி 
தற்போதைய தண்ணீர் இருப்பு - 4 மி.க.அடி 

மேற்கூறிய தகவலின்படி, சென்னைக்கு நீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருவது தெரிகிறது. தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், சென்னை நீர் இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, 

சென்னைக்கு ஆதாரமாக விளங்கும் ஒட்டுமொத்த நீர் நிலைகளில், 

ஜூலை 2017, மொத்த தண்ணீர் இருப்பு - 0.6% 

செப்டம்பர் 2004, மொத்த தண்ணீர் இருப்பு - 0.0% 

சென்னையில் நீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் உருவாவதற்கு முன்பு, அக்டோபர் 1987ல் மொத்த தண்ணீர் இருப்பு - 0.0% 

ஜூலை 1975, மொத்த தண்ணீர் இருப்பு - 0.4% 

தற்போது, மொத்த தண்ணீர் இருப்பு - 1.3% 

அதாவது, செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகள் முற்றிலும் வறண்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக வீராணம் ஏரியில் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது. எப்போதெல்லாம் பருவமழை பொய்த்து விடுகிறதோ, அதற்கடுத்த ஆண்டு சென்னை வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்கிறது. 

சென்னையில் கடந்த ஆண்டு 390 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது. ஆனால் வடகிழக்கு பருவமழையின் படி, சராசரியாக 850 மிமீ மழை பெய்திருக்க வேண்டும். இதனால் மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்திற்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது. 

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள், வரும் ஜூலை மாதம் முழுவதுமாக வறண்டு போய்விடும் என்று கூறப்படுகிறது. எனவே தற்போதைய ஒரே நம்பிக்கை தென்மேற்கு பருமழை மட்டுமே. 
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 20-05-2019, 05:23 PM



Users browsing this thread: 100 Guest(s)