20-05-2019, 05:13 PM
அது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்
பிரதமர் நரேந்திர மோடி விடிய விடிய தியானம் செய்ததாக கூறப்படும் குகை ஒரு கெஸ்ட் அவுஸ்தானாம்.
இதற்காக ஒரு நாள் இரவு வாடகை ரூ990.உத்தரகாண்ட் மாநில அரசு சுற்றுலாத்துறையில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது.
அந்த வகையில் கேதார்நாத் கோவிலில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் கேதார்நாத்- ருத்ரா மெடிடேசன் குகையை உருவாக்கி உள்ளது.
கேதர்நாத் மற்றும் பத்திரிநாத் ஆலயங்களை நோக்கியதாக இந்த குகை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குகையில் தங்க இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்த குகையில் மின்சார வசதி, குடிநீர் வசதி கிடைக்கும். காலையில் டீ, டிபன், மதிய உணவு, மாலை டீ, இரவு உணவு ஆர்டர் செய்து சாப்பிடலாம்.
அவசர காலத்துக்கு அழைக்க தொலைபேசி வசதியும் உண்டு. உதவி செய்வதற்கு 24 மணிநேரமும் பணியாளர்கள் உண்டு.
அவர்களை அழைக்க காலிங் பெல் வசதியும் இருக்கிறது. ஒருநபர் அதிகபட்சம் 3 நாட்கள் தங்கிக் கொள்ளலாம். 2 நாட்களுக்கு முன்னரே இந்த குகைக்கு புக் செய்துவிட வேண்டும்.
குப்தகாசி, கேதார்நாத்தில் உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்த பின்னரே இக்குகையில் தங்க அனுமதிக்கப்படுவர். ஆன்லைனில் மட்டுமே புக்கிங் செய்ய முடியும்.
இந்த சொகுசு குகை ஹோட்டலில்தான் பிரதமர் மோடி விடிய விடிய தியானம் செய்தார் என புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.